Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி! Top News
[Thursday 2023-03-09 21:00]

116ஆவது "வடக்கின் போர்" துடுப்பாட்ட போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி முதலில் களத்தெடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இனிங்ஸில் 66 ஓவர்கள் வரை வரை துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் அஜே 74 ஓட்டங்களையும், விதுஷன் 71 ஓட்டங்களையும் சன்சஜன் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ். பரியோவான் கல்லூரி சார்பில் அபிஷேக் 4 விக்கெட்டுகளையும், கஜகர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் யாழ்பாணம் பரியோவான் கல்லூரி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றபோது முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

துடுப்பாட்டத்தில் பரியோவான் கல்லூரி சார்பில் ஈபென்சர் ஜெய்சில் 16 ஓட்டங்களையும், கிந்துசன் 11 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் யாழ் மத்திய கல்லூரி சார்பில் அனுசாந் 2 விக்கெட்டுகளையும், நியூட்டன் 1விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

நாளைய தினம் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா