Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு உதவிகள்! Top News
[Thursday 2023-03-23 21:00]

சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு ரூபா 290,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் - செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலைக்கு மூன்றாவது தடவையாக ரூபா 100,000ம் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 150000/- வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை மூதூர் வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்திற்கு அருள்மிகு சரஸ்வதி ஆலயம் அமைப்பதற்காக இரண்டாம் கட்டமாக 100,000 ரூபா நிதி பாடசாலை முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூபா 100,000 வழங்கப்பட்டுள்ளது.

மாங்குளம் - பனிக்கன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு வீடு கட்டுமானத்திற்காக ரூபா 75,000 வழங்கப்பட்டது.ஏற்கனவே ரூபா 125,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கின்ற விசேட தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு 2ம் கட்டமாக சமையலறை கட்டுமானத்திற்காக 15,000 ரூபா இன்று வழங்கப்பட்டது. முதல்கட்டமாக ரூபா 50, 000 வழங்கப்பட்டிருந்தது.

இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று தனது தொண்டர்கள் சகிதம் வழங்கி வைத்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா