Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஆன்மீக அறக்கட்டளை உதவித் திட்டம் வழங்கல்! Top News
[Thursday 2023-04-06 06:00]

நேற்றைய தினம் வழக்கம்பரை ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்திய உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு வழக்கம்பரை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய இரண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வைத்ததுடன், சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் மற்றும் தொல்புரம் விக்கினேஷ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 75 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஆன்மீக அறக்கட்டளையின் இயக்குனர் திருச்சிற்றம்பலம் ஜனார்த்தனன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மதகுருமார், ஆசிரியர்கள், மாணவர்கள், பயனாளிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த உதவித் திட்டங்களுக்கான நிதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஞானச்சந்திரன் சின்னையா அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா