Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு! Top News
[Monday 2023-05-08 06:00]

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் 357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு (05/5/2023) அன்று வழங்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே திவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கலைமதி வீதி, புத்தூரை சேர்ந்த தரம்-07 மாணவிக்கும், வட்டுவினி ஒழுங்கை, இணுவில் மேற்கை சேர்ந்த தரம்-10 மாணவிக்கும், பொன்னாலை தெற்கு, பொன்னாலையை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவிக்கும், ஊரெழு மேற்கு, சுன்னாகத்தை சேர்ந்த உயர்தர மாணவனுக்கும், புத்தூர் கிழக்கு, புத்தூரை சேர்ந்த தரம்-09 மாணவனுக்கும், புன்னாலைக்கட்டுவன், சித்திவிநாயகர் பாடசாலையில் கல்வி கற்கின்ற தரம் - 10, தரம்-8 ஆகிய இரு மாணவர்களுக்குமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

இதே வேளை இந்தியா கோயம்புத்தூர் சைவசித்தாந்த பேராசிரியர் திரு.மீ.சிவசண்முகம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

இச் செயற்றிட்ட உதவிகளை கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், இந்தியா கோயம்புத்தூர் சைவ சித்யாந்த பேராசிரியர் மீ சண்முகம் , ஆச்சிரம தொண்டர்கள், வழங்கிவைத்தததன்

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகிகள், தொண்டர்கள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா