Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
45 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் 05 பேருக்கு உலர் உணவு பொருட்களும் வழங்கல்! Top News
[Monday 2023-07-03 06:00]

சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலையம் மற்றும் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் ஆகிய இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்,மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக கடந்த பல ஆண்டுகளாக அதிஸ்ர இலாப சீட்டு விற்ப்பனை மூலம் கிடக்கும் பணத்தை கொண்டு வடக்கு கிழக்கில் மாணவர்களின் கல்விக்கான உதவித்திட்டங்களை மேற்கெள்ளப்படுகிறது.

அந்தவகையில் இவ்வாண்டு அதிஸ்ர இலாப சீட்டிழுப்பு மூலமும் கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம் நடாத்தி பெற்றுக் கொண்ட நிதிகளை கொண்டு வடக்கு கிழக்கில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்தின் முதலாவது நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்,மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரும் குறித்த விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளருமான ச.தவசீலன் தலைமையில் நடந்த நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பா.காந்தரூபன் ஒட்டறுத்தகுளம் கிராம அலுவலர் தவரூபன் சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலைய தலைவர் மு.நிறஞ்சன் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட குழுவினர் ஊடகவியலாளர் ஜெகதீஸ்வரன் டிசாந் ஆகியோர் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இதேவேளை புலம்பெயந்து வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவரினால் தெரிவுசெய்யப்பட்ட ஜந்து பயனாளிகளுக்கு தலா 6000 பெறுமதியான உலர் உணவு பொருட்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா