Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழீழத் தேசியக் கொடி நாள்! Top News
[Thursday 2023-11-23 06:00]

21/11/2023 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள் பிரம்டன் நகரசபையில் எழுச்சிகரமாகவும், உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றது. இந் நிகழ்வை Dr குமுதினி குணரட்ணம் மற்றும் விஜிதரன் வரதராஜா ஆகியோர் ஒருங்கமைத்தனர். நீண்டவிடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கட்கும், போர்க் காலத்தில் அரச பயங்கரவாதங்களால்கொல்லப்பட்ட மக்களுக்குமாக அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் உருவான தமிழீழத் தேசியக்கொடி பற்றியும் தமிழீழத் தேசியத்தலைவரால் இதே நாள் 1990 ம் ஆண்டு முதன் முதல் தமிழீழத் தேசத்திற்கான தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வரலாறுகள் பகிரப்பட்டதுடன், மாண்புமிக்க பிரம்டன் மேயர் பற்றிக்பிரவுண் அவர்கள்n தமிழ்மக்களிற்காக வாதாடி, போராடி, தீவிர முயற்சிகள் செய்து வருவது முதல்

அவர் என்றும் தமிழர்களுடன் செயலாற்றி வருவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், தமிழ்மக்களின் சார்பிலும் வாழ்த்துகளும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்ற முன்வந்தமை தமிழர்கட்கானமுதல் அங்கீகாரமாக அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் தமிழீழத் தேசியக்கொடி நாள், தமிழர்கட்கு நடந்தது இனப்படுகொலை, சனல் 4 காணொளி, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பன பற்றிஎடுத்துக்கூறியது மட்டுமின்றி, தமிழர்கட்கு நீதி கிடைக்கும்வரை எப்போதும் துணை நிற்பதாகவும் மேயர் உறுதிகூறினார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி மக்கள் மற்றும் தேசிய ஊடகமான C B C மற்றும், Kirishna Live ஊடகம் அனைத்து பிரமுகர்கள், நகரசபை ஊழியர்கள், காவலர்கள் மத்தியில் பிரம்டன் நகர மேயர் பற்றிக்பிறவுனால் ஏற்றி வைக்கப்படது. அனைவரும் பெருமகிழ்சியோடு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களிற்கு இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். தமிழீழத் தேசியக்கொடிக்கு அனைவரும் தலை சாய்த்து தமிழீழத் தேசியத் தலைவரால் ஏற்றப்பட்டதமிழீழத் தேசியக்கொடியை தமிழீழத்திலும், சர்வதேசம் எங்கும், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஏற்ற முழுமையாக உழைப்போமென உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது.

"தமிழர் தலைவிதி தமிழர்கையில்"

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா