Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா - Queen's Park! Top News
[Saturday 2024-01-20 08:00]

கடந்த வெள்ளிக்கிழமை 12.01.2024 அன்று ஒன்ராறியோ மாநில சட்டசபையில் போக்குவரத்து இணை அமைச்சரும், ஸ்காபரோ ரூஜ் பார்க்கின் ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்களின் தலைமையில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா இடம்பெற்றது. இவ்விழாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற அமைச்சர் மற்றும் உறுப்பினர்களான ரெய்மன்ட் சோ, அரிஸ் பபிக்கியன் மற்றும் டோன் கலகர் மேர்ஃபி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்க் கனடியார்களின் பங்களிப்பு மற்றும் தமிழ் மரபுத் திங்களின் முக்கியத்துவத்துவத்தை நிலைநாட்டும்விதமாக பாடல், பரதநாட்டியக்கலையோடு தமிழினத்தின் தொன்மையான அடையாளமாகிய பறை இசை நிகழ்ச்சியும் மேடையேற்றப்பட்டது. மேலும் இதில் பல தமிழ் அமைப்புகள், தமிழ் மாணவர் சங்கங்கள், தமிழ் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா