Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை சமூகங்கள் பயன்பெறும் வகையில் ஒன்ராறியோ விரிவாக்குகிறது! Top News
[Friday 2024-07-19 06:00]

ஒன்ராறியோ அரசாங்கம், உடல்நலம், உடற்பயிற்சி, சமூக ஒருங்கிணைப்பு போன்ற அமைப்புகளை மேம்படுத்தி சேவைகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALCs) விரிவுபடுத்துகிறது. இது தொடர்பாக அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கும்போது, "முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALC) விரிவுபடுத்துவதன் மூலம், பெருமளவு முதியவர்கள், சுறுசுறுப்பானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கையை வாழத் தேவையான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளோம்" என்றார். மாநிலம் முழுவதும் முந்நூறுக்கும் அதிகமான முதியோர் வாழும் செயற்றிறன் மையங்கள் (SALC) வெற்றிகரமான நிலையில் இயங்கிவரும் வேளையில், இம்முக்கிய திட்டங்களை இணைந்து வழங்க உள்ளூர் நிறுவனங்களையும் அரசாங்கம் அழைக்கிறது.

எமது சமூகத்தில் முதியோருக்காக மல்வேர்ன் குடும்பநல வள மையத்துக்கு (MFRC) எமது அரசாங்கம் நிதியளித்ததையிட்டு நான் பெருமை கொள்வதுடன், மேலும் இந்த ஆண்டு 1321 நீல்சன் வீதியிலுள்ள நிலையத்துக்கு 51,133 டொலர்களையும், 90 லிட்டில்ஸ் வீதியிலுள்ள நிலையத்துக்கு 51,099 டொலர்களையும் மேலதிகமாக நாம் ஒதுக்கியுள்ளோம். இதேவேளையில் இந்நாட்டைக் கட்டியெழுப்ப உதவிய ஸ்காபரோவில் உள்ள பல முதியவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

மேலும் விபரங்களை அறிய, பின்வரும் இணையப் பக்கத்தை அணுகவும்:

https://vijaythanigasalam.ca/salcinfo/

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா