Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தாயக உறவுகளுக்கு வீட்டு திட்ட பணியில் கனடா குமரன் விளையாட்டு கழகம்! Top News
[Friday 2024-11-22 21:00]

கனடாவில் சுமார் 41வருடங்களுக்கு மேலாக தனது செயற்பாட்டை தொடரும் யாழ் கோண்டாவில் கிழக்கு இராமகிருசுண மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் "குமரன் விளையாட்டு கழகம்" தனது செயற்பாடு பற்றியும் தாயக உறவுகளுக்கு உதவி வரும் வீட்டு திட்டம் பற்றியும் வெளிப்படுத்தும் நோக்கோடு கடந்த 15 - 11- 2024 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் 18, Lee Centre Dr. Scarborough என்னும் முகவரியில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றிருந்தது.

குமரன் விளையாட்டு கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் நிகழ்ச்சி பொறுப்பாளருமான தேவாசபாபதி அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் சிலரும் கலந்து கொண்டு தமது தாயகம் சார்ந்த வீட்டு திட்ட பணிகள் பற்றியும் எடுத்துரைத்திருந்தனர்.

சுமார் 25 வீடுகள் கட்டி கொடுப்பதுடன் ஆரம்பித்த இந்த செயற்பாடு இன்று ஈழத்தில் வடகிழக்கில் மிகவும் பின் தங்கிய வருமானம் மிகக் குறைந்த வீடு இல்லாத மக்களுக்கான வீடமைப்பினை அவர்களது சொந்தக் காணியிலே கட்டி கொடுத்து வருகிறோம் இதற்கான நிதிகள் எமது கனடிய வாழ் குமரன் விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் மூலமும் இப்பணியினை முன் எடுத்துள்ளோம். இதுவரையில் 35 இற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் தொடர்ந்தும் மலையக மக்களுக்கான செயற்பாட்டினையும் விரிவு படுத்தியுள்ளோம். ஈழத்தின் தமிழ் மக்களுக்கான இச் செயற்பாட்டினை வடகிழக்கு, மற்றும் மலையக வாழ் மக்களுக்கான பணியினை தொடர்ந்தும் செயற்படுத்தவுள்ளதகவும் 100 வீட்டுத் திட்டத்தினை இலக்காக கொண்டுள்ளதாகவும் தமது ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தனர். மிகவும் குறைவான வருமானத்தினை பெறுவோரும் வீடு இல்லாமல் வாழும் குடும்பங்களை தேர்வு செய்வதுடன் அவரவர் வாழும் சொந்த காணிகளிலேயே இவ் வீடமைப்பு திட்டம் நடபெறுவதாகவும் குறிப்பிட்டனர்.

குமரன் விளையாட்டு கழகத்தின் தலைவர் யெயா செல்வரட்னம், செயலாளர் உதயன் சுப்பிரமணியம், பொருளாளர் பாலகர்னன் இராசரட்னம், உறுப்பினர் உமாகாந்த் , வேலும்மயிலும், இரவி,யோகன், சுந்தர்ராயன் ஆகியோரின் உரைகளுடன் இனிதான ஊடக சந்திப்பு நிறைவு பெற்றது..

புலம் பெயர் பல அமைப்புக்கள் செய்யாத சாதனையினை கனேடிய குமரன் விளையாட்டு கழகம் ஈழ தமிழ் மக்களின் உறுதியான வாழ்வியலை ஏற்படுத்தி கொடுத்துவருவது மிகவும் ஒரு பாராட்டுதலுக்குரியதொன்றாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா