Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.

போட்டியரங்கிலேயேவெற்றியாளர்களுக்கானமதிப்பளிப்புகளும் நடைபெற்றன. வடமத்தியமாநிலத் தமிழாலயங்களிடையேயான போட்டியில் முதலாம் இடத்தைவாறன்டோர்வ்தமிழாலயமும், இரண்டாம் இடத்தைடோட்முன்ட்தமிழாலயமும் மூன்றாம் இடத்தைஎசன்தமிழாலயமும் பெற்றுக்கொண்டன. முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கான சிறப்புமதிப்பளிப்பு, தமிழ்க் கல்விக் கழகத்தின் 35ஆவது அகவை நிறைவு விழாவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2025ஆம் ஆண்டிற்கானமுதலாவது போட்டியரங்கம் வடமத்திய மாநிலத்திலே 01.02.2025ஆம் நாளன்று 08:30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய போட்டிகள், 19:30 மணிக்குத்தமிழினத்தின் நம்பிக்கையைப் பறைசாற்றிச் சிறப்பாகநிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப ஐந்து மாநிலங்களிலும் போட்டிகளை நடாத்துவதற்கான ஏற்பாட்டொழுங்கில் முதலாவது போட்டியரங்கம் வடமத்திய மாநிலத்திலே நிறைவுற்றுள்ளது. தொடர்ந்து 08.02.2025 ஆம் நாளன்று மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கானபோட்டிகிறீபெல்ட் நகரில் நடைபெறவுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா