Untitled Document
April 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும்தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும்பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டுபோன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டுஆகியஒன்பதுகலைகள் போட்டிகளாகநடைபெறுகின்றன.

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறியமைப்பில் தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியரங்கம் ஸ்ருற்காட்நகரிலே பொதுச்சுடர் ஏற்றலோடு தொடங்கியது. சிறந்த காலநிலையோடு காலைப்பொழுதிலே அரங்கம் நிறைந்திருக்க க்கலைத்திறனோடு களமாடியதமிழாலய மாணவர்கள் குழுநிகழ்வுகளுக்கு நிகராகத் தனியொருவராகப் பங்குபற்றும் வாய்ப்பாட்டுமற்றும் விடுதலைப்பாடல் போட்டிகளிலும் தனித்தன்மையை அரங்கிலேபதிவு செய்தனர். நாட்டார் பாடல்,திருப்புகழ் மற்றும் விடுதலைப் பாடல்களைமனனம் செய்துபாடினர்.

குறிப்பாகவிடுதலைப் பாடல்களைப்புலத்திலே பிறந்துவளர்ந்துவரும் மூன்றாந்தலைமுறைக் குழந்தைகள் பாடியபோது, அரங்கிலேபார்வையாளர்கள் அமைதி பேணி அவர்களை ஒன்றித்திருக்கவைத்ததோடு, அவர்களதுபாராட்டையும் தமதாக்கினர். போட்டியரங்கிலே பங்கேற்புக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டதோடு, வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் நடைபெற்றஅதேவேளை, தென்மாநிலத்திலேமுறையேமுதல் மூன்றுநிலைகளைத் தமதாக்கியமுன்சன், ஸ்ருற்காட் மற்றும் நூர்ன்பேர்க்தமிழாலயங்களை அரங்கிற்கு அழைத்துப் பாராட்டிதழ் வழங்கப்பட்டது.

இவர்களுக்கான சிறப்புமதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் 35 அகவைநிறைவுவிழா அரங்கிலே வழங்கப்படும். 01.03.2025ஆம் நாளன்றுதென்மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி 08:30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி 21:30மணிக்குத் தமிழரது நம்பிக்கையை ஓங்கிஒலித்தவாறு நிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் திட்டமிடலுக்கேற்பஐந்துமாநிலங்களில் வடமத்தி, மத்தி, தென்மேற்குமற்றும் தென்மாநிலங்களின் போட்டிகள் நிறைவுற்றுள்ளன. வடமாநிலத் தமிழாலயங்களுக்கிடையேயான கலைத்திறன் போட்டியைஏப்பிரல் மாதத்தில் நடாத்துவதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா