Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அண்மையில் நடைபெற்று முடிந்த ஒன்றாரியோ மாகாண சட்டமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் மற்றும் ஸ்காபரோ மக்களின் அமோக ஆதரவுடன் விஜய் தணிகாசலம் அவர்கள் மூன்றாவது முறையாக ஸ்காபரோ - றூஜ் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல்வர் டக் ஃபோர்டின் தலைமையின் கீழ், அவர் நியாயமற்ற கட்டணங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒன்றாரியோவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளார். "ஒன்றாரியோ தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம்-இந்த டரிஃப் (Tariff) கட்டணங்கள் எங்களைத் தடுக்காது" என்று முதல்வர் ஃபோர்டு கூறினார்.

மேலும் விஜய் தணிகாசலம் அவர்கள் கூறுகையில், " ஸ்காபரோ - றூஜ் பார்க் மக்களின் நம்பிக்கைக்கு நான் நன்றி செலுத்துகிறேன். நான் தொடர்ந்து அனைத்து மக்களின் நலனுக்காக இன்னும் கடினமாக போராடுவேன்,” என்று உறுதியளித்தார். இந்த வலுவான ஆணையுடன், மேலும் ஒன்றாரியோவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் தொடர்ந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா