Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஈழம் முதல் இமயம் வரை கோலோச்சிய தமிழ்! Top News
[Tuesday 2025-06-10 19:00]

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி கல்வெட்டு (கி.பி.5 ஆம் நூற்றாண்டு) என்பது பண்டைய தமிழ் எழுத்துருவாகிய தமிழியில் இருந்து தமிழ் மொழிக்குரிய தமிழி எழுத்துரு வட்டெழுத்தாக மாறும் நிலையை காண்பிக்கிறது. இது தமிழி எழுத்துருவில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டும் தொல்லியல் சான்றாகும். ஊகம் அல்ல.

அத்தகைய பண்டைய தமிழ் எழுத்துருவாகிய தமிழியின் காலம் என்பது பொருந்தல் அகழாய்வின் மூலம் மிகத் துல்லியமாக நிரூபிக்கப்பட்ட காலம் கி.மு.490 (கி.மு.5 ஆம் நூற்றாண்டு) ஆகும். ஆந்பொருநை (அமராவதி) ஆற்றங்கரையிலிருக்கும் ‘பொருந்தில்’ எனும் பழம்பெரும் ஊரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நெல்மணிகளைக்கொண்ட மண்பாண்டத்தின் மேல் ‘வய்ர’ என்று எழுதப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அந்நெல்மணிகளை அமெரிக்காவிலிருக்கும் ‘பீட்டாக்கதிர்’ காலக்கணிப்புக்கு (AMS Dating by Beta Analysis) ஆளாக்கியபோது, அவற்றின் காலம் கி. மு. 490 என்பது தெளிவுறத் தெரியவந்தது. அதாவது, மோரியன் ‘அசோகனின்’ காலத்திற்கு முன்பே தமிழுக்கு எழுத்து இருந்ததென்பதை இதுவும் கூட ஐயம் திரிபறக் காட்டியது.

பண்டைத் தமிழி எழுத்தை ‘அசோக பிரமி’ என்று வலிந்து அடையாளப்படுத்திவரும் ‘இந்தி’யரின் மாய்மாலத்தை அடுத்தடுத்துக் கிடைத்துவரும் இது போன்ற அகழ்வாய்வுத் தடயங்கள் மேன்மேலும் அம்பலப்படுத்தி வருகின்றன.

அதே போன்று தமிழகத்துக் கொடுமணலில் நடந்த அகழ்வாய்வுகளின் போது கிடைத்த மண் பானைகளின் மேல் உள்ள “ஆதன், குவிரன், ஏகன், சம்பன்” முதலிய பெயர்கள் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துருக்கள் பொறிக்கப்பட்ட காலம் கி. மு. ஏழாம் நூற்றாண்டு னக் கணிக்கப்பட்டது. ஆயினும், அவ்வெழுத்து ‘தமிழ் பிராமி’ எழுத்தே என்று ‘இந்தி’யர்கள் வீம்புக்கு வலிந்து கூறலாயினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா