Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடிய தமிழர் பேரவை (CTC) மே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2025-06-21 07:00]

கனடிய தமிழர் பேரவை (CTC) மே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16-வது ஆண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் வருவாய் நிலைத்தன்மையை மேம்படுத்தும் ஒரு முக்கியமான திட்டத்திற்கு ஆதரவளித்திருந்தது. கனடிய தமிழர் பேரவையின் 16வது ஆண்டு மே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான சமூகப் பங்களிப்புகளின் ஒரு பகுதியாக, Women’s Needs Advocacy Network (NewArow) அமைப்புடன் இணைந்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் ஒரு புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், கத்தறி நெசவுத் துறை மற்றும் முருங்கை சாகுபடி போன்ற தொழில்முனைவுத் துறைகளில் பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் யுத்தம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு சொந்தமான வருமான வாய்ப்புகளை உருவாக்கி, சுயாதீனமாக வாழ்வதற்கான திறனையும் நம்பிக்கையையும் வழங்கும்.

அந்த வகையில் 2025 ஜூன் 15ஆம் திகதி, Women’s Needs Advocacy Network அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி ருத்ராதேவி ரவிக்குக் கனடியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பிரகல் திரு மற்றும் இலங்கைக்கான மனிதனேய நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் துஷியந்தன் ஆர் துரைரத்னம் ஆகியோர் இந்த நிதியுதவியைப் நேரில் கையளித்தனர். இது, நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் நிறைந்த ஒரு திட்டத்தின் தொடக்கக் கட்டமாகும்.

இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுவதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கிய திரு சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களுக்கு கனடிய தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவுத்துக்கொள்கின்றது. எங்கள் மக்களை உயர்த்தவும், சமூகத்தை மீட்டெடுக்கவும், கடந்த காலத்தைச் சிந்தனையுடன் நினைவுகூர்ந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கவும் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா