Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசு 1 மில்லியன் கனேடிய டாலர் உதவி! Top News
[Sunday 2025-12-07 07:00]

இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசு 1 மில்லியன் கனேடிய டாலர் உதவி அறிவித்துள்ளதை கனேடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்கும் பொருட்டு, 1 மில்லியன் கனேடிய டாலர் மனிதாபிமான உதவியை அறிவித்துள்ள கனடா அரசுக்கு கனேடிய தமிழர் பேரவை (CTC) தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அவசர காலத்தில் அறிவிக்கப்பட்ட உதவி, கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்குவதில் முக்கிய பங்காற்றும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் போர் மற்றும் வறுமையால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களே இந்த வெள்ளத்திலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உடனடி உதவி மற்றும் ஆதரவு இந்நேரத்தில் மிக அவசியமாகும். இந்த பகுதிகளுக்கு தாமதமின்றி உதவி சென்றடைய வேண்டும் என்று CTC வலியுறுத்துகிறது.

இந்த நிதி ஒதுக்கீடு ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், இந்த பேரழிவின் பரவலான தாக்கத்தையொட்டி வரவிருக்கும் வாரங்களிலும், மாதங்களிலும் கூடுதல் உதவிகள் தேவைப்படும் என்பது தெளிவாக உள்ளது. ஏற்பட்ட சேதங்கள் மிக அதிகமானவை என்பதால் மீட்பு மற்றும் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய அதிக நிதி வளங்களின் பங்களிப்பு அவசியமானது.

கனடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் கடந்த சில நாட்களிற்கு முன்பு கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர். இதற்காக கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு CTC தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. அவர்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் இந்த நிதி அறிவிப்பை நோக்கிச் செல்ல முக்கிய பங்காற்றியுள்ளது.

இந்த நிதி உண்மையாகவே அதிக அவசர தேவையுள்ள மக்களிடம் சென்றடைய உறுதி செய்வதற்கும் மேலும் நிலைமைக்கு ஏற்ப தேவையான ஆதரவுகளை திரட்டுவதற்கும் CTC கனடா அரசு, உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா