Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வாகீசன் இராசையாவுக்கு 'வேல்' வழங்கிப்பாராட்டிய அமைச்சர் விஜய் தணிகாசலம்! Top News
[Monday 2026-01-26 07:00]

கனடாவின் ரொறன்ரோ நகரில்அமைந்துள்ள டூறம் மாநாட்டு மண்டபத்தில்(Durham Convention Centre), ஜனவரி24-ஆம் திகதி சனிக்கிழமை அன்று'எங்கட பெடியள்' என்ற கருப்பொருளில்மாபெரும் கலை நிகழ்ச்சியொன்றுநடைபெற்றது. தேர்ட் ஐ மீடியாபுரொடக்சன் (ThirdEye Media Production) நிறுவனத்தால் மிகவும்நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த'வாகீசன் லைவ் இன் ரொறன்ரோ' (Vaheesan Live in Toronto) இசைச்சங்கமம், உலகத்தமிழர்களை இசையாலும்உணர்வாலும் ஒன்றிணைக்கும் ஒருவரலாற்றுப் பாலமாக அமைந்திருந்தது. இக்கலைவிழாவில், 'சிலோன் ராப்' (Ceylon Rap) சொல்லிசைக்கலைஞர்களின் பங்களிப்பும் அவர்களின்ஆழமான தமிழ்ப்பற்றும் வெகுவாகப்பாராட்டப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்ட ஒன்ராறியோ மாநிலசுகாதார இணை அமைச்சரும், ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருமானவிஜய் தணிகாசலம் அவர்கள், சொல்லிசைக் கலைஞர்களை நேரில்பாராட்டி கௌரவித்தார். அமைச்சர் தனதுஉரையில் இளைஞர்களின் கலைப்பணியை பின்வருமாறு புகழ்ந்துரைத்தார்:

"ஈழ மண்ணிலிருந்து வந்த இந்த இளம்கலைஞர்கள், சொல்லிசை எனும் நவீனகலை வடிவத்தினூடாக எமது செந்தமிழைஅடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்கின்றனர். எமது வரலாற்றையும்அடையாளத்தையும் உலகுக்கு உரக்கச்சொல்லி, உலகெங்கும் சிதறிக்கிடக்கும்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குரலாகஇவர்கள் ஒலிக்கின்றனர். சமூகமாற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் கலை ஒருவலிமையான ஆயுதம் என்பதை இவர்கள்நிரூபித்துள்ளனர்" எனத் தொரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் விஜய் தணிகாசலம்ஒவ்வொரு கலைஞரின் தனித்துவத்திற்கும்ஏற்ப பெறுமதிமிக்க நூல்களைத் தனதுகைப்படப் பரிசாக வழங்கினார். தமிழர்களின் வீரம், கொடை மற்றும் கல்விநெறிகளைப் பறைசாற்றும் 'புறநானூறு'நூலை அத்விக் உதயகுமாருக்கும், அறம்போதிக்கும் உலகப் பொதுமறையாம்'திருக்குறள்' நூலை திஷோன்விஜயமோகனுக்கும் அவர் வழங்கினார். ஈழத்து சொல்லிசை மன்னன் என்றுபோற்றப்படும் வாகீசன் இராசையாவுக்கு, முப்பாட்டன் முருகனின் பெருமைகளைச்சந்த ஓசையுடன் பாடும் 'திருப்புகழ்' நூல்வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் மிக முக்கியசிறப்பம்சமாக, பாடகர் வாகீசனுக்கு ஒரு'வேல்' பரிசாக வழங்கப்பட்டது. 'வண்ணமயில் ஏறும்...' பாடலின் மூலம்உலகளாவிய புகழ்பெற்ற வாகீசன், தனதுசொல்லிசைப் பாடல்களில் 'பார்வதி மகன்' என்றும், எம் இனத்தலைவன் என்றும்,போற்றப்படும் முப்பாட்டன் முருகனைத்தொடர்ந்து முன்னிறுத்தி வருவதைச்சுட்டிக்காட்டிய அமைச்சர், வாகீசனைஎதிர்காலத்தின் ஒரு சிறந்ததலைமையாகக் கருதுவதாகவும், அதன்அடையாளமாகவே இந்த வேலை அவருக்குவழங்குவதாகவும் தெரிவித்தார்.

கலை விழாவிற்கு அப்பால், அன்றையநிகழ்வு சமூக முன்னேற்றத்திற்கும் ஒருமுக்கிய மைல்கல்லாக அமைந்தது.ரொறன்ரோவில் அமையவிருக்கும் தமிழ்சமூக மையத்திற்காக ஒரே இரவில் ஒருமில்லியன் டொலர்களுக்கும் அதிகமானநிதி திரட்டப்பட்டது. கனடிய மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாநகராட்சி ஆகியமூன்று நிலை அரசாங்கங்களின்நிதியுதவியையும் ஆதரவையும் இந்தமையம் ஏற்கனவே பெற்றுள்ளது.

உலகளாவிய தமிழ்ச் சூழலில், புலம்பெயர்தமிழ் மக்களால் கட்டப்படும் முதலாவதுதமிழ் சமூக மையம் இது என்பதால், எமதுஎதிர்கால சந்ததியினருக்காக ஒருநிரந்தரமான இடத்தை உருவாக்கித் தரும்வரலாற்றுப் பொறுப்பை ஏற்று தமிழ்ச்சமூகம் தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற அறைகூவல்விடுக்கப்பட்டது. அரசாங்கங்கள் தமதுபங்கைச் செய்துள்ள நிலையில், இந்தமையத்தை முழுமைப்படுத்துவதுசமூகத்தின் கடமை என்பதும் இவ்விழாவில்வலியுறுத்தப்பட்டது.

இந்த விழா ரொறன்ரோ வாழ் தமிழ்மக்களிடையே பெரும் எழுச்சியையும்,இளம் சொல்லிசை கலைஞர்களுக்கான கௌரவத்தையும் ஒருசேர வழங்கிய ஒருவரலாற்று நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா