Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
துணுக்காயில் கோலாகலமாக நடைபெற்ற "பண்பாட்டுப் பெருவிழா – 2026"! Top News
[Friday 2026-09-25 16:00]

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகும் துணுக்காய் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” நிகழ்வு 2026 செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு, துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள “கலைத் திலகம் அமரர் புவனேஸ்வரி நடராசா அரங்கில்” கோலாகலமாக நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சிவராஜசிங்கம் ஜெயகாந்த், மேலதிக மாவட்டச் செயலாளர் – காணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக திருவாட்டி தர்ஷினி நிதர்சன், பிரதிப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் அலகு, வடக்கு மாகாணம் கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினராக கலாபூஷணம் சிற்றம்பலம் சண்முகநாதன், மூத்த கலைஞர் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்வுகள் மற்றும் எமது பண்பாடு, கலை மரபுகள் மற்றும் வாழ்வியலை எடுத்தியம்பும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும், துணுக்காய் பிரதேசத்தின் பாரம்பரிய கலைகள், பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இப்பெருவிழா அமைந்திருந்தது.

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கலைஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரச அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்ற இப்பெருவிழா, துணுக்காய் பிரதேசத்தின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வெளிப்படுத்தும் முக்கியமான பண்பாட்டு நிகழ்வாக அமைந்தது.

“கலை இழந்த சமூகம், நிலை இழந்து போகும்” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நடைபெற்ற இப்பண்பாட்டுப் பெருவிழா, எமது பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா