Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பு அறிமுகம்! Top News
[Sunday 2026-10-25 17:00]

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), உலகத் தமிழர்களின் அறிவு, ஆற்றல், தொழில்சார் அனுபவம் மற்றும் பொருளாதார வளங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பையும் (Global Tamil Economic and Social Network), அதன் ஒருங்கிணைப்புக் குழுவையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்முனைவையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குதல், சமூக மேம்பாட்டை முன்னெடுத்தல் ஆகியவை இவ்வலையமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய ரீதியில் பொருளாதார மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியுள்ள தமிழ்ச் சமூகங்களின் மேம்பாட்டிற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

ஆரம்பகட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்களாகப் பின்வருவோர் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்:

முனைவர் இரா. சீனிவாசன் – பொருளாதார மற்றும் பொதுக் கொள்கை நிபுணர், தமிழ்நாடு, இந்தியா.

திரு. சிவராஜா இராமநாதன் – தொழில்முனைவோர், StartupTN முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி, தமிழ்நாடு, இந்தியா.

பேராசிரியர் க. அமிர்தலிங்கம் – கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை.

பேராசிரியர் இ. ஆ. செல்வநாதன் – கிரிஃபித் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா.

பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் – வவுனியா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், இலங்கை.

பேராசிரியர் ஜெயப்பிரபா சுரேஷ் – கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

திரு. உமேஷ் வல்லிபுரம், CPA, CA – நிதி மற்றும் நிறுவன அபிவிருத்தி நிபுணர், கனடா.

இவ்வாரம்பக் குழுவினர் இணைந்து வலையமைப்பின் செயற்பாட்டுத் திட்டங்களையும் முன்னுரிமைகளையும் வகுப்பதுடன், பல்வேறு நாடுகளிலிருந்து மேலும் துறைசார் நிபுணர்களையும் தொழில்சார் வல்லுநர்களையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் குழுவை விரிவுபடுத்தவுள்ளனர்.

இம்முயற்சி தொடர்பாக அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில்,

“உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களின் அறிவு, அனுபவம், திறமை மற்றும் பொருளாதார வளங்களை ஒன்றிணைத்து, அவற்றை நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.

உலகளாவிய தமிழர் புலம்பெயர் சமூகமாகிய எமது உள்ளங்களில், இலங்கையின் வடக்கு–கிழக்கில் வாழும் தமிழர்களுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் தமிழர்களுக்கும் தனித்துவமான இடமுண்டு. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், பொருளாதாரத் தற்சார்பையும் சமூக வலுவூட்டலையும் உறுதிப்படுத்துவதும் எமது முக்கிய முன்னுரிமைகளாகும்.

வெறுமனே தொடர்புகளை ஏற்படுத்துவதுடன் நின்றுவிடாமல், முதலீடுகள், தொழில்முனைவு, வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக மேம்பாட்டின் ஊடாகத் தமிழ்ச் சமூகங்களின் பொருளாதார வலுவூட்டலை முன்னெடுக்க விரும்புகிறோம்.”

எனத் தெரிவித்தார்.

உலகளாவிய தமிழர் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைத்து நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளையும் இவ்வலையமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அனைத்துலகத் தமிழர் பேரவை அழைப்பு விடுக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா