Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் இலங்கைத் தமிழ் பாடகி லக்ஷ்மிக்கு புதிய அங்கீகாரம்! Top News
[Tuesday 2026-11-03 07:00]

இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட கனடா வாழ் பாடகி லக்ஷ்மி சிவநேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam), 2026ஆம் ஆண்டுக்கான South Asian Music Accelerator (SAMA) இசை மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார். கனடா முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து இசைக் கலைஞர்களில் ஒருவராக லக்ஷ்மி இடம்பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் வெளியான ‘செந்தூரா’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 18 முதல் 24ஆம் திகதி வரை கனடாவின் ரொரன்ரோ நகரில் நடைபெற்ற இத்திட்டத்தில் லக்ஷ்மி பங்கேற்றுள்ளார்.

இசைப் பயிற்சி, பாடல் உருவாக்கம், இசைத் தயாரிப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டல் உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்கும் இத்திட்டத்திற்குத் தெரிவாகியுள்ளமை, அவரது இசைப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட பாடகியின் இந்தச் சாதனைக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா