Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கை ஜெயராஜ்!
[Friday 2026-11-06 16:00]

இலங்கை ஜெயராஜ் என்று அழைக்கப்படும் இவர் அந்தக் கால இலங்கைத் திண்ணைக் கல்வி முறையின்படி சமயக் கல்வியைக் கற்றுக்கொண்டவர். இருப்பினும், இவர் பெண்கள் அடிமைத்தனக் கருத்துகளையே அதிகம் பேசிவந்தார். அத்துடன் வர்க்க வேறுபாடு ஆதரவுக் கருத்துகளையும் பேசிவந்தார்.

1991ஆம் காலப்பகுதி.

தமிழீழ கலைப்பண்பாட்டுக் கழகம் பெரிய அளவில் எழுச்சி பெற்றிருந்த காலப்பகுதி. அப்பொழுது இந்த அமைப்பு இனவிடுதலை, சமூக விடுதலை, பெண்விடுதலை ஆகியவற்றுக்காகக் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தது. அதற்கெனப் பல கலைப்படைப்புகளைப் படைத்துக்கொண்டிருந்தது.

அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஜெயராஜ் சமூக விடுதலை, பெண்விடுதலைக்கு எதிரான கருத்துகளைப் பேசி வந்தார்.

அந்த நிலையில் இவருக்கும் தமிழீழ கலைப்பண்பாட்டுக் கழகத்திற்கும் முரண்பாடுகள் தோன்றின.

அதன் உச்சக்கட்டமாகப் பொன். கணேசமூர்த்தி அவர்கள் 'இலங்கை மண்' என்ற நாடகத்தை எழுதியிருந்தார். இந்த நாடகம் புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகி வந்தது.

இந்த நாடகம் வால்மீகி இராமாயணத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இதில் இராவணன் கதாநாயகனாகச் சித்தரிக்கப்பட்டிருந்தார்.

கம்பன் கழகத்தில் இருந்த ஜெயராஜ் வால்மீகி இராமாயணத்தைப் பேசி வந்தார். இங்கு முரண்பாடு அதிகரித்தது.

அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் குடிபெயர்ந்து விட்டார்.

ஒருவர் தமிழீழ அமைப்பு ஒன்றுடன் அதிருப்தியில் இருக்கிறார் என்றாலே உடனே இலங்கை அரசாங்கம் அவரின் வீட்டுக்குச் சென்றுவிடும்.

ஜெயராஜுக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்தது.

ஜெயராஜும் வாழைப்பழத்திற்கு ஊசி ஏற்றுவதுபோல் தமிழர் விரோதக் கருத்துகளை ஆங்காங்கே கக்கி வருகிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா