Untitled Document
November 13, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
“எல்லாளன்” நாட்டிய நாடகம்! Top News
[Tuesday 2026-11-10 16:00]

தமிழனின் வீரத்தையும், கலைச் செழுமையையும் மேடையில் உயிரோவியமாகத் தீட்டிய அற்புதமான படைப்பு “எல்லாளன்” நாட்டிய நாடகம்! தமிழ் மன்னன் எல்லாளனின் கதையை, நாட்டியமும் இசையும் நடிப்பும் ஒன்றிணைந்த அழகிய கலைமொழியில் எடுத்துரைத்த இந்நிகழ்வு, மனதில் நீங்காத இடம்பிடித்தது. கம்பீரமான பாத்திரங்கள், உணர்வுகளைப் பேசிய விழிகள், துடிப்பான நடன அசைவுகள், வண்ணமிகு ஆடை அலங்காரங்கள் என ஒவ்வொரு அம்சமும் படைப்பிற்கு மெருகூட்டின.

திரு. சபா ராஜேஸ்வரன் அவர்களின் எழுத்தில் உருவான இக்கதையை, சிறப்பான நாட்டிய நாடகமாகக் கண்முன் நிறுத்தியவர், கலைக்கோவில் நுண்கலைக் கல்லூரியின் அதிபர், ஶ்ரீமதி வனிதா குகேந்திரன் டீச்சர் அவர்கள். அவரது படைப்பாற்றலும், நாட்டிய வடிவமைப்பும், நுட்பமான நெறியாள்கையும் இந்நிகழ்வின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்பட்டன.

மிகக் குறுகிய காலத்திலேயே (ஒரு கிழமை)மாணவர்களைப் பயிற்றுவித்து, இவ்வளவு சிறப்பான அரங்கேற்றத்தைச் சாத்தியமாக்கிய பெருமை முழுக்க முழுக்க வனிதா டீச்சரின் அயராத உழைப்பையே சாரும். ஒவ்வொரு அசைவையும் செதுக்கி, ஒவ்வொரு முகபாவத்தையும் மெருகூட்டி, மாணவர்களை ஒருங்கிணைத்து மேடையில் ஒளிரச் செய்த அவரது பொறுமையும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை. மேடையில் வெளிப்பட்ட ஒவ்வொரு அழகிய அசைவிற்குப் பின்னாலும், அவர் செலவிட்ட எண்ணற்ற மணிநேரக் கற்பித்தலும், ஊக்கமும், அக்கறையும் நிறைந்திருந்தன.

திரு குகேந்திரன் மாஸ்டரின் கம்பீரமும் உணர்வும் நிறைந்த தனது பல்குரல் திறமையால் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர். குரல்வளம், கதையின் ஓட்டத்திற்கு வலிமை சேர்த்து, காட்சிகளின் உணர்வுகளை மனதில் ஆழமாகப் பதியச் செய்தது. அவரது குரலும் மாணவர்களின் அபிநயமும் ஒன்றிணைந்த தருணங்கள், எல்லாளனின் கதையை நம் கண்முன்னே நிகழ்வதுபோன்ற உணர்வை ஏற்படுத்தின.

கலைக்கோவில் நுண்கலைக் கல்லூரியின் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து, முழு அர்ப்பணிப்புடன் அபாரமான ஆற்றலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி மேடைக்கு உயிரூட்டினர். அவர்களின் ஒத்திசைவு, உற்சாகம், தன்னம்பிக்கை ஆகிய அனைத்திலும் குருவின் சிறப்பான பயிற்சியும் மாணவர்களின் ஈடுபாடும் தெளிவாகத் தெரிந்தன.

மாணவர்களின் திறமைகளை அறிந்து, அவர்கள்மீது நம்பிக்கை வைத்து, தங்களை வெளிப்படுத்துவதற்கான அரிய வாய்ப்புகளை வழங்கும் வனிதா டீச்சரின் கலைப்பணி மனதை நெகிழச் செய்கிறது. கலையைக் கற்பிப்பதோடு, அதை உணர்ந்து வெளிப்படுத்தும் ஆற்றலையும் மாணவர்களிடம் வளர்க்கும் அவரது வழிகாட்டல் மிகுந்த பாராட்டிற்குரியது.

கதையாசிரியர் திரு. சபா ராஜேஸ்வரன் அவர்களுக்கும், இந்நிகழ்வின் வெற்றிக்கு அயராது உழைத்த வனிதா டீச்சருக்கும், பல்குரலால் உயிரூட்டிய குகேந்திரன் மாஸ்டருக்கும், திறம்படப் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பின்னணியில் உறுதுணையாக இருந்த அனைத்து பெற்றோர்களிற்க்கும் ஒரு கலை ரசிகராக மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்!

எழுத்தில் பிறந்து, பல்குரலில் உணர்வுபெற்று, குருவின் அதீத உழைப்பில் உருவெடுத்து, மாணவர்களின் நாட்டியத்தில் உயிர்பெற்ற “எல்லாளன்” நினைவில் என்றும் நிலைக்கும் ஓர் அழகிய கலைப் படைப்பு!

என்றும் அன்புடன் கலை ரசிகன்!

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா