Untitled Document
November 27, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வரலாறு காணாத பக்தர்களின் வெள்ளம்: மலையக வாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! Top News
[Tuesday 2026-11-24 15:00]

கனடா கந்தசுவாமி ஆலயத்தின் சஷ்டி விரத நாட்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மலையகத்தின் நுவரெலியா - டிக்கோயா வாழ் மக்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான எங்கள் வேண்டுகோளினை ஏற்று பக்த கோடிகள் $37,411 வாரி வழங்கி அம்மக்களின் சொல்லொணா துயரத்தை போக்க உதவியுள்ளனர். இதில் குருதி சுத்திகரிப்பிற்கு தேவையான RO இயந்திரத்திற்காக $30,603.45 போக மிகுதியான $6807.55 இருதய சத்திர சிகிச்சைக்காக பதிந்து விட்டு பல ஆண்டு காலம் அவதியுடன் காத்திருக்கும் ஒரு இளம் நோயாளிக்கான இதய சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள போகின்றோம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

எத்தனையோ கொடையாளிகள், அந்த பக்த வெள்ளத்திலும் எங்களை தேடி வந்து தானம் வழங்கிய காட்சி, மனிதம் எவ்வளவு செழுமையாக எம்மக்களிடையே ஓங்கி ஒளிர்கிறது என்பதனை தெளிவாக விலகியது. இனி மஸ்கெலியா - டிக்கோயா பகுதிகளிலுள்ள நோயாளிகள் தங்கள் குருதி சுத்திகரிப்பிற்கு ஒன்று விட்டு ஒரு நாள் பனிரெண்டு மணித்தியாலம் செலவழிக்க தேவையில்லை. பயண செலவுகளுக்கு (பலருக்கு மாதம் ரூபாய் 70,000 வரை) கடன் பெற்று உங்கள் உயிரை தக்க வைக்க வேண்டிய நிலை இனியில்லை. ஜனவரி தொடக்கம், அதற்கு உண்டாகும் பயண செலவு - நேர செலவு எல்லாம் உங்கள் வாழ்க்கை செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

வறிய நோயாளிகளின் புன்னகைகளில் இறைவனை காணும் கனடா கந்தசுவாமி ஆலய தலைவர் முத்து மற்றும் ஆலய அறங்காவல் சபையினருக்கும், நிதியினை வாரி வழங்கிய கொடையாளிகளுக்கும், என்னுடன் இணைந்து அந்த ஏழு நாட்களும் நிதி சேகரிக்க உதவிய நிவாரண தொண்டர்களுக்கும், அந்த முருக பெருமானின் அருள் மேலோங்கி நிற்கும். தானத்தின் உச்ச தானம் உயிர் தானம்! நன்றி!

பின்குறிப்பு: முழு நிதி விவரம் நாளை வெளியிடப்படும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா