Untitled Document
July 5, 2024 [GMT]


பொங்கல் தினத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படம்!
[Monday 2015-12-28 21:00]

ரஜினிமுருகனால் தொடர்ந்து சிக்கலில் சிக்கி தவித்து வந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு, மும்பையைச் சேர்ந்த பென் மூவிஸ் நிறுவனம் தற்போது உதவி செய்ய முன்வந்திருக்கிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தினசரிகளின் விளம்பரங்களில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பென் மூவிஸ் நிறுவனத்தின் லோகோவும் பளிச்சிடுகிறது. ரஜினிமுருகன்1/5 ரஜினிமுருகன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றதால் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் பொன்ராம் மற்றும் இசையமைப்பாளர் இமான் நால்வரும் இணைந்த ரஜினிமுருகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ரஜினிமுருகன் மீதுள்ள நம்பிக்கையால் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார்.


இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதை பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம்!
[Friday 2024-07-05 18:00]

10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்” படம், உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.


மியா கலிஃபா கூறியதை கேட்டு அதிர்ந்து போய் கிடக்கும் ரசிகர்கள்!
[Friday 2024-07-05 18:00]

லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா காலிஃபா 2000 ஆவது ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றவர். இவர் கத்தோலிக்க மதத்தவர் என்றாலும் அதனை பின்பற்றாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் டெக்டாஸ் பல்கலைக்கழகத்தில் வரலாறு இளங்கலை பட்டம் பெற்ற இவர் தனது 18 வது வயதிலேயே அமெரிக்க ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மியா காலிஃபாவை பொருத்த வரை வயது வந்ததற்கான ஆபாச காணொளிகளில் தோன்றும் பாலியல் நடிகை .இவர் 2014-ஆம் ஆண்டு முதல் இது போன்ற காணொளிகளில் நடிக்க ஆரம்பித்தார்.


விஜய்யின் கோட் படத்தின் முக்கிய இட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
[Friday 2024-07-05 18:00]

விஜய் நடித்துவரும் கோட் திரைப்படம் பல வகையில் மக்களுக்கு ஸ்பெஷல். இந்த படத்தின் மூலம் முதன்முறையாக வெங்கட் பிரபு விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அதோடு தளபதி நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படம் இது, எனவே திரையரங்குகளில் பெரிய அளவில் படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்!
[Friday 2024-07-05 06:00]

சன் டிவி தான் தொடர்ந்த தமிழ்நாட்டில் முன்னணி சேனல் ஆக இருந்து வருகிறது. அதற்கு காரணம் அதன் சீரியல்களுக்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான். கயல், சிங்கப்பெண்ணே, வானத்தைப்போல என பல தொடர்கள் டிஆர்பியில் டாப் 5 லிஸ்டில் இருந்து வருகின்றன.


இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை மடோனா செபாஸ்டியன்! Top News
[Friday 2024-07-05 06:00]

நடிகை மடோனா செபாஸ்டியன் ஒருகாலத்தில் ஹோம்லியாக மட்டுமே படங்களில் நடித்து வந்தார். அவரும் மற்ற ஹீரோயின்களுக்கு ஈடுகொடுக்க தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார். அவர் கடற்கரையில் ஹாட் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இதோ...


ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் பாட ஹாலிவுட் பாடகர் ஜட்டினுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம்!
[Thursday 2024-07-04 18:00]

2024ம் வருடம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு திருமண கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. வேறுயாரும் இந்தியாவின் பணக்காரர்களில் எப்போதும் டாப்பில் வரும் முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் தான். முதல் மகனுக்கு திருமணம் நடந்து குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது மகனுக்கு படு கோலாகலமாக திருமண கொண்டாட்டம் நடந்த வண்ணம் உள்ளது.


கே.ஜி.எப் 3: வெறித்தனமான அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரஷாந்த் நீல்!
[Thursday 2024-07-04 18:00]

2018ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் புதுப்புது சாதனைகளை படைக்க துவங்கியது.


அட்லாண்டிக் கடற்கரையில் நீச்சல் உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்த பிக்பாஸ் மாயா! Top News
[Thursday 2024-07-04 18:00]

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக கீர குழம்பு, பேர்ட்ஸ், லிட்டில் பிரின்சஸ் என ஏகப்பட்ட தியேட்டர் டிராமாக்களை நடத்தி வந்தவர் மாயா கிருஷ்ணன். பின் 2015ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வானவில் வாழ்க்கை படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷின் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், மை சன் இஸ் கே, ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல, 2.0, விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.


தன்னை பற்றி வரும் கிசுகிசுக்கள்: திரிஷா கொடுத்த பதிலடி!
[Thursday 2024-07-04 06:00]

நடிகை திரிஷா கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அறிமுகம் ஆகி 22 வருடங்களுக்கும் மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. திரிஷா விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார்.


அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா மகாராஜா?
[Thursday 2024-07-04 06:00]

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 தேதி திரையரங்குகளில் வெளியானது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த் என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.


ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபலம்!
[Wednesday 2024-07-03 18:00]

கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக திகள்பவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வீரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


சினேகாவுக்கு நடந்த பயங்கர விபத்து: அதிர்ச்சி தகவல் சொன்ன நடிகர்!
[Wednesday 2024-07-03 18:00]

நடிகை சினேகா, 42 வயதாகும் இவர் ஹீரோயினாக நடிக்கும் மார்க்கெட் சென்றாலும் சினிமாவில் நிறைய முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், விஜய்-சினேகா இடம்பெறும் படத்தின் ஒரு பாடலும் வெளியாகி இருந்தது. படங்களை தாண்டி சினேகா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.


திடீரென ஷாலினிக்கு நடந்த அறுவைசிகிச்சை: மருத்துவமனைக்கு விரைந்த அஜித்!
[Wednesday 2024-07-03 18:00]

அஜித்தின் மனைவி- ஷாலினி திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில், அனைவரும் பார்த்து பொறாமை படும் ஜோடி தான் அஜித் - ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அஜித் - ஷாலினி இருவரும் இணைந்து 'அமர்க்களம்' படத்தில் நடித்த போது தான் காதலிக்க ஆரம்பித்தார்கள்.


இயக்குனர் ஷங்கர் மகன் ஹீரோவாக நடிக்க வருகிறாரா?
[Wednesday 2024-07-03 06:00]

இந்திய அளவில் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்பெற்றவர் இயக்குனர் ஷங்கர். எந்திரன், 2.0 என அவரது பல படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டவை. தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கி இருக்கும் ஷங்கர், அதன் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.


ஸ்டார் படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?
[Wednesday 2024-07-03 06:00]

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியர் பிரேமா காதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளன். இவர் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் கடந்த மே கடந்த 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் முக்கிய ரோலில் அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.


தளபதி 69 படத்தின் கதை இதுதானா?
[Tuesday 2024-07-02 18:00]

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிவிட்டார், அதானல் தளபதி 69 தான் அவரது கடைசி படமாக இருக்கபோகிறது என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால், அந்த படத்தை இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தீரன், துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


"அந்த தவறை தெரியாமல் செய்துவிட்டேன்" - உண்மையை ஒப்புக்கொண்ட சமந்தா!
[Tuesday 2024-07-02 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா தான் செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா கடந்த 2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமான இவர் இன்று மக்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார் நடிகை சமந்தா.


நீச்சல் உடையில் இளைஞர்களின் சூட்டை கிளப்பும் நடிகை அதிதி! Top News
[Tuesday 2024-07-02 18:00]

STAR படத்தில் நடித்திருக்கும் நடிகை அதிதி போஹன்ஹார் முதன் முதலில் மராட்டி மொழி திரைப்படங்களில் நடித்ததை அடுத்த தான் திரை உலக வாழ்க்கையில் தடம் பதித்தார். இவர் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருந்ததை அடுத்து தான் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார். மேலும் அதிதி முதலில் தியேட்டர் நடிகையாக நடிப்புத்திறனை காட்டியதை அடுத்து தான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.


சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஹெச்.வினோத்!
[Tuesday 2024-07-02 06:00]

இயக்குனர் ஹெச். வினோத் அடுத்து தளபதி விஜய்யின் அடுத்த படமான தளபதி69 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுதான் விஜய்யின் கடைசி படம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தை முடித்தபிறகு ஹெச். வினோத் தனது முந்தைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.


அட்லீயின் அடுத்த படம்: சல்மான் கான் உடன் இந்த தமிழ் ஹீரோவா?
[Tuesday 2024-07-02 06:00]

இயக்குனர் அட்லீ தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர், அதன் பிறகு ஹிந்தியில் களமிறங்கிய அவர் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். அந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருந்தது.


“முதலாளிகளிடம் இருந்து சினிமாவைக் காப்பாற்ற வேண்டும்” - அமீர்!
[Monday 2024-07-01 18:00]

சென்னையில் திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிங்கம் புலி, ஆர்.வி. உதயகுமார் நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.


ஜவான் சாதனையை முறியடித்த கல்கி!
[Monday 2024-07-01 18:00]

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான். இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. குறிப்பாக முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 517 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை எந்த இந்திய திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை ஜவான் நிகழ்த்தி இருந்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தனர்.


4வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!
[Monday 2024-07-01 18:00]

தளபதி விஜய் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் GOAT. இப்படத்திற்கு பின் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். அவர் அரசியல் செல்லும் காரணத்தினால் இதுவே அவருடைய கடைசி படமாக இருக்கும் என்கின்றனர். தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நடிகை சமந்தா தான் விஜய்க்கு இப்படத்தில் ஜோடி என சொல்லப்படுகிறது.


கல்கி 2898 AD இரண்டாம் பாகம்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!
[Monday 2024-07-01 06:00]

கல்கி 2898 AD படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு வசூலும் குவிந்து வருகிறது என்பதால், இந்த படம் 1000 கோடி வசூலை தொடுமா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


"அந்த விஷயத்தால் தான் அரவிந்த்சாமி கூட நடிக்கவில்லை" - ரகசியத்தை உடைத்த மீனா!
[Monday 2024-07-01 06:00]

90ஸ்-களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மீனா தமிழ் மற்றும் மலையாள படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


கவினுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!
[Sunday 2024-06-30 18:00]

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். கடந்த மே மாதம் இவர் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் மாஸ்க் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார்.


மகாராஜா பட நடிகைக்கு இப்படியொரு நோயா?
[Sunday 2024-06-30 18:00]

மகாராஜா பட நடிகைஅரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழை போல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் நடிப்பது மட்டுமின்றி பாட்டு பாடுவது, படங்கள் தயாரிப்பது என பன்முகத்திறமை கொண்டவராக பார்க்கப்படுகிறார். அத்துடன் மம்தா கர்நாடக் இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையை முறையாக கற்றுக் கொண்டுள்ளார்.


திருமணத்திற்கு பின்னும் எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை டாப்ஸி! Top News
[Sunday 2024-06-30 18:00]

நடிகை டாப்ஸி பண்ணு தமிழில் ஆடுகளம், ஆரம்பம் போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். சமீபகாலமாக அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக அவர் மத்தியாஸ் போ என்ற ரஷ்ய நாட்டு பாட்மின்டன் வீரரை காதலித்து வந்த நிலையில் இந்த வருடம் மார்ச் 23ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா