Untitled Document
June 26, 2024 [GMT]
பத்ம விபூஷண் விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: - நடிகர் ரஜினிகாந்த்
[Monday 2016-01-25 22:00]

நடிகர் ரஜினிகாந்த், ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான மறைந்த திருபாய் அம்பானி உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதும், ஹிந்தி நடிகர் அனுபம் கெர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலுக்கு பத்ம பூஷண் விருதும், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


பிரபல நடிகை கல்பனா ரஞ்சணி ஹைதராபாத்தில் இன்று காலமானார்!
[Monday 2016-01-25 12:00]

பிரபல நடிகையான கல்பணா ரஞ்சனி இன்று காலை ஹைதராபாத்தில் உயிரிழந்துள்ளார்.51வயதான இவர் இதுவரை பல படங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார். கடைசியாக இவர் துல்கர் சல்மான் நடித்த சார்லி படத்தில் அருமையான வேடத்தில் நடித்திருப்பார்.தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராக இருக்கும் படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் ஞாயிறு அன்று சென்றுள்ளார். அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த போது சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறார்.இவர் பிரபல நடிகையான ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரி ஆவார்.


ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ள தனுஷ்!
[Monday 2016-01-25 12:00]

தனுஷின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உள்ளது. இவர் கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று முதல் படத்திலேயே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தவர்.இவர் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமாம்.மேலும், இதில் தனுஷுடன் பிரபல நடிகை உமா தர்மன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.


நடிகர் விஷாலை புகழ்ந்து தள்ளிய ராதாரவி!
[Monday 2016-01-25 10:00]

நடிகர் சங்க தேர்தலின் போது விஷால்-ராதாரவி இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி பேசினார்கள் என்பது நாடறிந்த விஷயம். இந்நிலையில் மருது படத்தில் விஷாலுடன், ராதாரவி இணைந்து நடித்து வருகின்றார்.இதில் இவரும் வில்லன் வேடம் இல்லையாம், விஷாலை புகழ்ந்து பேசுவது போல் ஒரு கதாபாத்திரமாம். இந்த காட்சியை சமீபத்தில் எடுத்துள்ளார்கள்.ராதாரவியும் தயங்காமல் அந்த காட்சியை நடித்துக்கொடுத்துள்ளார். இதன் மூலம் பகையை மறந்து இரு தரப்பும் சமாதானம் ஆகும் என கூறப்படுகின்றது.


ரஜினி ரசிகர்களின் பிரமாண்ட மாநாடு: - ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் வேண்டுகோள் விடுத்த கருணாஸ்!
[Monday 2016-01-25 10:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி, 2.0 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் வேலூரில் பிரமாண்ட மாநாடு ஒன்று சமீபத்தில் நடந்தது.இதில் ஆரம்பிக்கும் போதே அரசியல் குறித்து யாரும் பேசக்கூடாது என எச்சரித்தனர், அதையும் மீறி ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் பேசி, போலிஸார் அவரை உடனே பேசி முடிக்கும்படி கூறினர்.இதை தொடர்ந்து நடிகர் கருணாஸ், ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என கூறினார், இதைக்கண்ட போலிஸார் உடனே கருணாஸ் பேச்சை நிறுத்துமாறு கூறியுள்ளதாக தெரிகின்றது.ஆனால், இத்தனை லட்சம் செலவிட்டு மாநாடு நடத்தினால், இப்படியெல்லாம் அது பேசக்கூடாது, இது பேசக்கூடாது என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என ரசிகர்கள் கோபப்பட்டனர்.


சுந்தர்.சியின் புதிய படத்தில் நடிக்கவுள்ள நயன்தாரா!
[Monday 2016-01-25 07:00]

சுந்தர்.சி தற்போது இயக்கியுள்ள படம்


மிரட்டும் சூர்யாவின் போஸ்டர்கள்....!
[Sunday 2016-01-24 21:00]

சூர்யா நடித்துள்ள


பிப்ரவரியில் குவியும் படங்கள்: - தடுமாறும் திரையுலகம்!
[Sunday 2016-01-24 17:00]

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு இயக்குனரின் தலையெழுத்து இருக்கிறது என்பார்கள். ஆனால் தற்போது உள்ள சினிமா நிலவரத்தில் 4, 5 இயக்குனர்களின் தலையெழுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தள்ளாடுகிறது என்பது தான் உண்மை. இந்த பொங்கலன்று வெளியான நான்கு படங்களும் பெரிய படங்களுக்கு நிகராக உள்ள படங்கள். ஆனால் நான்கும் திரையரங்கு சரியாக கிடைக்கததால் வசூலில் தள்ளாளுகிறது. இந்த நிலைமை தற்போது பிப்ரவரி மாதம் தொடர்கிறது. பிப்ரவரி 5ம் தேதி பெங்களூர் நாட்கள் மற்றும் பிரஷாந்தின் சாஹசம் படமும் வெளியாகவுள்ளது,


விஜய் சேதுபதியின் அடுத்த பட தலைப்பு...!
[Sunday 2016-01-24 16:00]

இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் வெளிவரவுள்ளது. அதில் குறிப்பிடும் படியான படமான சேதுபதி, காதலும் கடந்து போகும் மற்றும் இறைவி போன்ற படங்கள் அவருக்கு இன்னும் நல்ல பெயரை எடுத்து தரும் என்கிறாகள். இந்நிலையில் இவர் அடுத்து வா டீல் படத்தின் இயக்குனர் ரத்தின சிவா படத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்கு ரெக்கை என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபலங்கள்!
[Sunday 2016-01-24 16:00]

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா நடித்திருக்கும் படம் இறுதிச்சுற்று. இப்படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கிறது.அண்மையில் இப்படத்திற்கான சிறப்பு காட்சிகள் மும்பையில் சில பிரபலங்களுக்கு மட்டும் காண்பிக்கப்பட்டது.படத்தை பார்த்துவிட்டு பேசிய ஷில்பா ஷெட்டி, படம் பார்த்து எனக்கு அழுகை வந்துவிட்டது. எவ்வளவு அருமையான படம். ரித்திகாவும் படத்தை பார்த்து அழுதுவிட்டார், ஏன் எல்லோருமே அழுதுவிட்டனர் என்றார்.


கான் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்: - மெட்ராஸ் கேத்ரின்
[Sunday 2016-01-24 09:00]

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் கான். இப்படத்தின் பூஜையெல்லாம் போட்டு, வேகவேகமாக படப்பிடிப்பு நடந்தது.இதில் சிம்புவிற்கு ஜோடியாக மெட்ராஸ் கேத்ரின் நடித்தார், பின் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது.இதை தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இவர் பேட்டியளிக்கையில் கான் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இவர் கூறுகையில்


எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது: -எஸ்.ஏ.சந்திரசேகரன்
[Sunday 2016-01-24 08:00]

நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் 69 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். அவருக்கு 73 வயது ஆகிறது. தனது 73-வது வயதில் எஸ்.ஏ.சந்திரசேகரன், 19 வயது இளைஞர் ஒருவரின் டைரக்ஷனில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பெயர்,


ஈழத்தில் நடந்த உண்மையை எடுத்து சொல்லும் யாழ் படம்: - பிப்ரவரி மாதம் 26ம் தேதி வெளியீடு!
[Saturday 2016-01-23 21:00]

புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ள திரைப்படம் யாழ்.பல தமிழ் அமைப்புகள் மற்றும் ஈழம் சார்ந்த மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கிய படம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.மேலும் இப்படத்தில் நடிகர் வினோத் கிஷ்ணன், மிஷா மற்றும் பாலுமகேந்திராவால் பெரிதும் பாராட்டப்பட்ட சஷி நடித்துள்ளார். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படமாக வந்துள்ளது, இதில் இடம் பெற்றுள்ள சிவாய நம பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் மீண்டும் நடத்திக்காட்டுவேன்: - லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்
[Saturday 2016-01-23 19:00]

யுத்தம் செய், நான் மகான் அல்ல, கதகளி ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சின்னத்திரையில் நடத்திய ஷோ ஒன்றை நடத்தினார்.இந்த நிகழ்ச்சியை மற்றொரு தொலைக்காட்சி கிண்டல் செய்தது, அதை சிவகார்த்திகேயன் தன் பாடலில் பயன்படுத்தியது அனைவரும் அறிந்ததே.சமீபத்தில் சிவகார்த்திகேயன் இந்த பாடல் குறித்து வெளியிட்ட கருத்து அவரை மிகவும் கோபப்படுத்தியது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், தற்போது மீண்டும் அதே ஷோவை நடத்திக்காட்டுவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.


சொந்த குரலில் பேசி நடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரீதிவ்யா!
[Saturday 2016-01-23 19:00]

சமீபகாலமாக கதாநாயகிகள் சொந்த குரலில் பேசி நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.


தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? - கருத்து கணிப்பில் முதலிடம் பிடித்த அஜித்!
[Saturday 2016-01-23 18:00]

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான


கொடி படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ்!
[Saturday 2016-01-23 18:00]

தங்கமகன் படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது


ஸ்ரீதிவ்யா இப்படி பேசி பார்த்ததில்லை: - எனக்கு வியப்பாக இருக்கிறது என்கிறார் ஆர்யா
[Saturday 2016-01-23 18:00]

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான


இளம் நடிகர் அதர்வாவிற்காக ஒன்று சேரும் ரகுமான், முருகதாஸ்!
[Saturday 2016-01-23 15:00]

இந்தியா சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று வெற்றி கொடி நாட்டியவர் முருகதாஸ்.இவர்கள் இருவரும் அதர்வாவிற்காக ஒன்று சேரவுள்ளனர், நீங்கள் நினைப்பது போல் படத்தில் இல்லை. முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கிய கணிதன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக தான்.இதில் ரகுமான் பாடல்களை வெளியிட முருகதாஸ் அதை பெற்றுக்கொள்ளவிருக்கின்றாராம்.


செண்டிமெண்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கிய ரஜினி முருகன்!
[Saturday 2016-01-23 15:00]

ரஜினி முருகன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் தற்போது வரை ரூ 25 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.இதுநாள் வரை தேதி அறிவித்து தள்ளிப்போய் ரிலிஸான எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது இல்லை.இதில் அஜித் நடித்த வரலாறு மட்டுமே விதிவிலக்காக இருந்தது, தற்போது இந்த லிஸ்டில் ரஜினிமுருகனும் இணைந்து செண்டிமெண்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளது.


மது அருந்தி விட்டு கலாட்டா செய்த மாதவன்!
[Friday 2016-01-22 22:00]

அலைப்பாயுதே, ரன், தம்பி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் மாதவன். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் இறுதிசுற்று.இப்படத்தில் ஒரு காட்சியில் மது அருந்தி நடிப்பது போல் எடுத்துள்ளனர். இதில் மாதவன் யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மது அருந்தியுள்ளார்.ஒரு கட்டத்திற்கு மேல் அவராலேயே தன்னை கன்ட்ரோல் செய்ய முடியாமல் நிதானம் இழந்து பேசியுள்ளார். இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


தல ரசிகர்களை கோபப்படுத்தாதீங்க பிறகு பெரிய விளைவுகள் ஏற்படும்: - மா.கா.பா. ஆனந்தத்
[Friday 2016-01-22 18:00]

சின்னத்திரை தொகுப்பாளர்களில் பலராலும் அறியப்பட்டவர் மா.கா.பா. ஆனந்த். இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சினிமாவில் நடிக்க களத்தில் இறங்கிவிட்டார்.இந்நிலையில் இவர் ஏற்கனவே வானவராயன் வல்லவராயன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது அட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியுள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது, இதில் இவர் அஜித் ரசிகராக நடித்துள்ளார், மேலும்,


பாலா சார் தேவைப்பட்டா துணியை கூட கிழித்துவிடுவார்! - வரலட்சுமி
[Friday 2016-01-22 14:00]

தாரை தப்பட்டை படத்தை பற்றி யார் என்ன சொன்னாலும், வரலட்சுமி நடிப்பை பற்றி யாராலும் பேச முடியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இப்படத்தில் தன் அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார் இவர்.இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றி பேட்டியளித்த இவரிடம், படப்பிடிப்பில் பாலா எப்படி என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர்


ப்ரேமம் படத்தினை பாராட்டிய இயக்குனர் சங்கர்!
[Friday 2016-01-22 14:00]

ஷங்கர் தற்போது 2.0 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். சமீபத்தில் இவர் ப்ரேமம் படத்தை பார்த்துள்ளார்.இப்படத்தை பார்த்த பிறகு தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு இப்படம் மிகவும் பிடித்ததாக டுவிட் செய்துள்ளார்.இப்படத்தை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை, சென்னையில் ப்ரேமம் கிட்டத்தட்ட 250வது நாளை எட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர் ராம்கியால் என் உயிருக்கு ஆபத்து: - கல்லூரி மாணவி போலீசில் புகார்
[Friday 2016-01-22 07:00]

தமிழ் சினிமாவில் 90களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் ராம்கி. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரியாணி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்நிலையில் இவரின் மீது கல்லூரி மாணவி ஒருவர் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதில்


பிச்சைக்காரன் படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது: - மருத்துவர்கள் கடும் கண்டனம்!
[Thursday 2016-01-21 23:00]

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளுக்கு சமூக சமத்துவக்கான மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். இரவிந்திநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: `பிச்சைக்காரன்


விஜய் நடித்த கில்லி படத்திற்கு பிறகு
[Thursday 2016-01-21 22:00]

விஜய் நடித்துள்ள


சென்னை மக்களுக்கு நன்றி தெரிவித்த மலையாள இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன்!
[Thursday 2016-01-21 17:00]

ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 7 மாதங்கள், 24 நாட்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்போதும் பிரேமம் படம் சென்னையில் பல இடங்களில் ஓடிக் கொண்டிருப்பதால் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னை மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆல்போன்ஸ் புத்திரன்.இப்படத்தின் நடித்த மூன்று நாயகிகளும் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா