Untitled Document
June 26, 2024 [GMT]
தோல்விகளும் கஷ்டங்களும் எனக்கு முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தன: - கங்கனா ரனாவத்.
[Sunday 2016-01-17 12:00]

தமிழில்


நடிகர் சிவகார்த்திகேயனின் கலாய்ப்பு எல்லை மீறிவிட்டது: - லட்சுமி ராமகிருஷ்ணன்
[Sunday 2016-01-17 09:00]

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம்


இசைஞானி இளையராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்!
[Sunday 2016-01-17 09:00]

இளையராஜாவில் 1000மவது இசையமைப்பில் சமீபத்தில் வந்த படம் தான் தாரை தப்பட்டை. இதன் பிறகு இவர் மீண்டும் நடிகர் தனுஷுடன் கைக்கோர்த்துள்ளார்.ஆனால், இப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை, அவர் தயாரிப்பில் அம்மா கணக்கு என்ற படத்திற்கு இளையராஜா இசையமைக்க சம்மதித்துள்ளாராம்.இதை தன் டுவிட்டர் பக்கத்தில் மிக மகிழ்ச்சியாக தனுஷ் தெரிவித்துள்ளார்.


இளைய தளபதி விஜயுடன் மோதும் பல்கேரியா வில்லன்!
[Sunday 2016-01-17 09:00]

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்நிலையில் விரைவில் டப்பிங் வேலைகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.இப்படத்தில் ஒரு அதிபயங்கர சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாம், இதில் பல்கேரியா நாட்டை சேர்ந்த லோபோ என்ற நடிகருடன் விஜய் மோதுவாராம்.இந்த சண்டைக்காட்சி மிகவும் மிரட்டலாக வந்திருப்பதாகவும், ரசிகர்களை மிகவும் கவரும் என்றும் கூறப்படுகின்றது.


சினிமா வருகைற்கு ரஜினி சார் தான் காரணம்: - சிவகார்த்திகேயன்
[Sunday 2016-01-17 09:00]
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரஜினிமுருகன் படம் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்திலிருந்து இவருடைய மார்க்கெட் இன்னும் பல மடங்கு உயர்ந்துள்ளது.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், இன்று இந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரஜினி சார் தான்.அவர் மீது கொண்ட அன்பால் தான் சினிமாவிற்கு வரவேண்டும் என எண்ணமே வந்தது

ரஜினி முருகன்: திரை விமர்சனம்! - ஊரில் வெட்டியாக சுற்றி வரும் சிவகார்த்திகேயன்
[Friday 2016-01-15 23:00]

வெற்றிப் பெற்ற


ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கௌதம் மேனன்!
[Friday 2016-01-15 19:00]

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கமர்ஷியல் வலையில் சிக்காமல் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி அவர்களுக்காக படம் எடுப்பவர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் வரவிருக்கின்றது.இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வந்தது, இதில் இடம்பெற்ற தள்ளிப்போகாதே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இப்பாடல் இன்று வெளிவருவதாக இருந்து பின் தள்ளிவைக்கப்பட்டது. இதற்காக கௌதம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


எமி மீது கடும் கோபத்தில் தெறி படக்குழு!
[Friday 2016-01-15 19:00]
,p> தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த லண்டன் கேர்ள் எமி ஜாக்ஸன். இவர் நடிக்கும் படத்தில், எமி லண்டனலிருந்து இங்கு வந்து நடிப்பதற்கு, வந்து செல்லும் ப்ளைட் டிக்கெட் செலவு தயாரிப்பாளருடையது தானம்.இந்நிலையில் தெறி படத்தின் முக்கியமான காட்சி ஒன்று எடுக்க, எமி படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். இதுக்குறித்து கேட்டால், ப்ளைட் மிஸ் பண்ணிட்டேன் என்று கூலாக பதில் அளித்தாராம்.(வெளியில் விசா பிரச்சனை அதனால் தான் எமி வரவில்லை என கூறியது வேறுக்கதை).இவர் ஏற்கனவே ஐ படத்திலும் இதுப்போல் செய்தாராம்.தற்போது தெறி படக்குழு எமி மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.


ஜீவாவின் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்!
[Friday 2016-01-15 19:00]

இது என்ன மாயம், ரஜினிமுருகன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் ரயில், சிவகார்த்திகேயனின் புதிய படம், பாம்புசட்டை என பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும், ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியிருந்தார். இதற்கான போட்டோஷுட் கூட சமீபத்தில் நடந்து முடிந்தது.ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, இப்படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த படங்களில் இவர் தொடர்ந்து கமிட் ஆகியிருப்பதால் இந்த படத்திற்கான கால்ஷிட் தேதிகளில் கொஞ்சம் தடுமாற்றம் வரும் என்பதால் அவர் நீக்கப்பட்டார் என கூறப்படுகின்றது.இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக தற்போது ஜீவாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல நாள் கழிச்சு இப்போதான் ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கு: - டூயட் பாட ஆசைப்பட்டவருக்கு வந்த சோதனை!
[Thursday 2016-01-14 20:00]

பல நாள் கழிச்சு இப்போதான் ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கு - வேதாளம் படத்தில் அஜீத்திற்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்தாரல்லவா? அந்த கேரக்டரில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் ஊதாக்கலரு ஸ்ரீதிவ்யாதானாம். சம்பளம் ஒரு பிரச்சனையே இல்ல என்று இவர்கள் கொக்கிப் போட, முடியவே முடியாதுன்னு இவர் உக்கிப் போட்டிருக்கிறார். ஏன்? ஒரு பிரபல கதாநாயகி தங்கச்சியா நடிச்சா, பின்னாடி வர்ற டைரக்டர்கள் எல்லாரும், வாம்மா தங்கச்சி என்றே வருவார்கள் என்பது ஒரு சிக்கல்.


இணைய வாசிகளுக்கு சவால் விட்ட ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர்!
[Thursday 2016-01-14 14:00]

இணையதளத்தில் பிரபலங்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் புகைப்படம் போடும் போது அவர்களுக்கு சிலர் இழிவான கருத்துக்களை கூறுகின்றனர்.இதுபோன்ற பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். தற்போது இதே பிரச்சனையால் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் சிக்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், என் புகைப்படத்தை நான் பதிவிடும் போது அவை பதிவிடுதலுக்கு ஏற்றது என்ற நம்பிக்கையுடனே பதிவிடுகிறேன், விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்தோடும் நான் அதைச் செய்வதில்லை.


13வது சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் பெற்ற நயன்தாரா, அரவிந்த் சாமி!
[Thursday 2016-01-14 07:00]

சென்னையில் 13வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில் நயன்தாராவுக்கு மாயா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நாயகி மற்றும் அரவிந்த் சாமிக்கு தனிஒருவன் படத்திற்காக சிறந்த நடிகன் என இருவருக்கும் கே. பாலசந்தர் நினைவு விருது கிடைத்துள்ளது.அதோடு இவ்வருடத்தின் யூத் ஐகான் என்ற அமிதாப் பச்சன் விருதும் நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. சிறந்த படத்துக்கான விருதை கிருமி படம் தட்டிச்சென்றுள்ளது.


முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!
[Thursday 2016-01-14 07:00]

அருண்குமார் இயக்கும் சேதுபதி என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ரம்யா நம்பீசன் இப்படத்தில் நாயகியாக நடிக்க, போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். சேதுபதி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான டீஸர் பொங்கல் 15ம் தேதி அல்லது 16ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.விஜய் சேதுபதி முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் டீஸரை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.


ரஜினி பட பெயரை தலைப்பாக வைத்துள்ள உதயநிதி!
[Thursday 2016-01-14 07:00]

இப்போதெல்லாம் பட பெயர்களை வைப்பதில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய டிரண்ட் உருவாகி வருகிறது. அதாவது ரஜினி, கமல் போன்றவர்கள் நடித்த பழைய படத்தின் பெயர்களை இளம் நடிகர்கள் தங்களது படங்களுக்கு சூட்டி வருவது.அந்த வகையில் ஜீவா நடிக்கும் போக்கிரி ராஜா, விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை போன்ற பெயர்கள் ரஜினி பட தலைப்புகளே. தற்போது இவர்களை தொடர்ந்து உதயநிதி புதிதாக நடிக்கும் படத்திற்கு மனிதன் என்று ரஜினி பட பெயரை வைத்துள்ளார்.இப்படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ஜாலி எல்எல்பி படத்தின் ரீமேக்.


ஜல்லிக்கட்டு விவகாரம்: - த்ரிஷா, எமி ஜாக்ஸன் மீது கடும் கோபத்தில் தமிழக மக்கள்!
[Wednesday 2016-01-13 22:00]

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இதேபோல் இந்த வருடத்தில் ஐ என்ற மெகா ஹிட் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் எமி ஜாக்ஸன்.இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என பீட்டா அமைப்பில் கையெழுத்து போட்டுள்ளனர். இவர்களை போலவே விராட் கோஹ்லி, வித்யா பாலன், பிபாஷா பாசு போன்ற பல பிரபலங்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.இதனால், மிகவும் கோபமடைந்துள்ளனர் தமிழக மக்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவருக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தனுஷ், குஷ்பு வீட்டில் வருமான வரி சோதனை!
[Wednesday 2016-01-13 22:00]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் அடுத்து கொடி, வட சென்னை, ரயில் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.இதில் ரயில் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இவருடைய வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.இதேபோல் நடிகை குஷ்பு, இயக்குனர் பாலா வீட்டிலும் வருமான வரி சோதனை நடக்க கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும், வருமான வரித்துறை ஆனையர்கள் சில ஆவனங்களை கைப்பற்றியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.


இந்த வருடம் பல படங்களுக்கு இசையமைக்கவுள்ள யுவன்!
[Wednesday 2016-01-13 19:00]

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன். இவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் கடந்த வருடம் முழுவதும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு சிறந்த இசையை தர முடியவில்லை.இதனால், இந்த வருடம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடிக்க பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார். விரைவில் மதுரை, கோயமுத்தூரில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.இந்த வருடம் யுவன் இசையில் தரமணி, பேரன்பு, ஒரு ஹாலிவுட் படம், தெலுங்கு படமான ஆக்சிஜன், வெங்கட் பிரபு படம், தர்மதுரை, விஷ்ணுவர்தன்-அஜித் இணையும் படம், பாரதிராஜா நடிக்கும் ஓம், யாக்கை என அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார்.இது மட்டுமின்றி பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கும் புதிய படத்திற்கும் இசை யுவன் தானாம்.


விஜய் படத்தில் நடிக்க வில்லை: - வதந்திக்கு முற்று புள்ளி வைத்த நடிகை மியா ஜார்ஜ்
[Wednesday 2016-01-13 19:00]

இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளார். இதை தொடர்ந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. மேலும், இரண்டாம் நாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.ஆனால், இந்த செய்தி உண்மையில்லை, அது யாரோ என் பெயரில் டுவிட்டரில் போலி அக்கவுண்ட் மூலம் தெரிவித்த கருத்து என மியா விளக்கம் கொடுத்துள்ளார்.


வருகிற 20ம் தேதி திருமண பந்தத்தில் இணையும் அசின்!
[Wednesday 2016-01-13 19:00]

பிரபல நடிகையான அசின், ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்.தற்போது இவர்களது திருமணம் வருகிற 20ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. 2 நாள் விழாவாக நடக்கும் இவர்களது திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர்.இந்து, கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறதாம். திருமணத்தை தொடர்ந்து மும்பையில் வருகிற 23ம் தேதி திருமண வரவேற்பு நடைபெறுகின்றது.


தமிழ் வீழாது தன் சொந்தக் கால்களால் நிற்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு: - கவிஞர் வைரமுத்து
[Wednesday 2016-01-13 13:00]

கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் அறிமுக விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. மலேசியாவின் சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் சுப்பிரமணியம், விளையாட்டுத்துறை இணை மந்திரி டத்தோ சரவணன் ஆகியோர் நூலை அறிமுகம் செய்து பேசினார்கள். விழாவின் நிறைவான கவிஞர் வைரமுத்து ஏற்புரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தாய்த் தமிழ்நாட்டையும், உங்களையும் கடல் பிரித்து வைத்தாலும் தமிழ் நமக்கிடையே ஒரு கலாசாரப் பாலம் கட்டி வைத்திருக்கிறது. இங்கே கூடத்திலும், மாடத்திலும் நிறைந்து வழிந்து அமர இடமில்லாமல் நின்றுகொண்டிருக்கிற பெருங்கூட்டத்தைப் பார்க்கிற போது தமிழ் வீழாது தன் சொந்தக் கால்களால் நிற்கும் என்ற நம்பிக்கை பெறுகிறேன். 40 சிறுகதைகளை ஒரே மூச்சில் தொடர்ச்சியாக எப்படி எழுத முடிந்தது என்று இந்த மேடையில் பலபேர் வியந்து கேட்டார்கள்.


விஜய் படத்தில் மிரட்டும் வில்லனாக நடிக்கும் மலையாள நடிகர்!
[Wednesday 2016-01-13 13:00]

இளைய தளபதி விஜய்க்கு ஏற்கனவே கேரளாவில் ரசிகர்கள் பலம் அதிகம். இதற்காகவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தார்.தற்போது மீண்டும் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கவுள்ளார்.இதில் மம்முட்டி தனி ஒருவன் அரவிந்த் சாமி ஸ்டைலில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


இளையராஜா இசையை கேட்டபடி ஓவியம் வரையும் நிகழ்வு!
[Wednesday 2016-01-13 07:00]

நடிகர் சங்க தலைவர் நாசர், டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-


எனக்கு திருமணம் நடக்கவில்லை: - வதந்தியை நம்ப வேண்டாம் என்கிறார் அஞ்சலி
[Wednesday 2016-01-13 07:00]

நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-


[Wednesday 2016-01-13 07:00]

கனடாவில் இருந்து பெங்களூரில் இறங்கி அங்கிருந்து நேராய் கார் பிடித்து நள்ளிரவில் கோவை ரேஸ் கோர்ஸ் போலிஸ் நிலையத்தில்


பீப் பாடல் சர்ச்சை தொடர்பாக போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தேன்: - டுவிட்டரில் அனிருத்..
[Tuesday 2016-01-12 19:00]

பீப் பாடல் பிரச்சனை இன்னும் முடியவே இல்லை. சிம்புவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதுடன், போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.ஆனால் சிம்பு, என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். அதோடு போலீஸ் முன்பு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டார். நீதிபதியும் சிம்புவிற்கு வருகிற 29ம் தேதிக்குள் ஆஜராக உத்தரவிட்டார்.இந்நிலையில் அனிருத் நேற்று இரவு 11 மணியளவில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அனிருத் பீப் பாடல் சர்ச்சை தொடர்பாக போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றி என்று தன் டுவிட்டரில் தெரிவித்தார்.


டப்பிங் வேலைகளில் பிஸியான நயன்தாரா!
[Tuesday 2016-01-12 19:00]

மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து புதிய நியமம் என்ற படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்தை நயன்தாரா பார்த்திருக்கிறார்.அப்போது தன்னுடைய டப்பிங் சரியாக இல்லை என்பதால், சொந்தக் குரலில் பேச இயக்குனர் எ.கே. சஞ்சனிடம் விருப்பம் தெரிவித்தாராம். அதன்படி டப்பிங் வேலைகளில் நயன்தாரா பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது.


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
[Tuesday 2016-01-12 14:00]

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.


த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
[Tuesday 2016-01-12 07:00]

சினிமாவில் 10 வருடமாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா. இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அஸ்வின், த்ரிஷாவின் தீவிர ரசிகராம்.இதனை ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மேலும் அவர், நான் 8வது படிக்கும் போது லேசா லேசா படம் வந்தது. நான் மற்றும் எனது நண்பர்கள் ஐந்து பேரும் த்ரிஷா ரசிகர்கள் தான்.அப்போது ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்தோம், ஆனால் அதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.அவரின் புகைப்படங்களை ஒன்றுவிடாமல் சேகரிக்கும் அளவிற்கு தீவிர ரசிகராக இருந்தோம் என்றார்.

NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா