Untitled Document
July 8, 2024 [GMT]
தமது புதிய காருக்கு வைக்க திட்டமிட்டிருந்த ஸீகா எனும் பெயரை மாற்றிய டாடா..!
[Wednesday 2016-02-03 07:00]

கொசு மூலம் பரவும் ஸீகா வைரஸ் தொற்றின் அபாயம் குறித்து சர்வதேச அளவிலான எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், டாடா நிறுவனம், தனது புதிய காரின் பெயரை மாற்றியுள்ளது.பிரேஸிலில் ஸீகா வைரஸ் காரணமாக, கருவில் இருக்கும் சிசுக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சுறுத்தல் அதிகரித்துவரும் சூழலில்,பாதிக்கப்பட்டவர்களுக்கான தமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கில், தமது புதிய காருக்கு வைக்க திட்டமிட்டிருந்த ஸீகா எனும் பெயரை, டாடா மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.அதேசமயம் அந்த புதிய ரக காரின் பெயர் விவரங்களை டாடா வெளியிடவில்லை.


விவசாயிகளுடன் போராட்டக்களத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் இறங்கும்: - வைகோ எச்சரிக்கை
[Tuesday 2016-02-02 22:00]

மத்திய அரசின் இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் கெயில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூர் வரை குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொச்சியிலில் இந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்க கெயில் நிறுவனம் சுமார் 1491ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை 5842 நில உரிமையாளர்களிடம் இருந்து பெற்றது.ஆனால், எரிவாயு குழாய்கள் பதிக்கும் போது விவசாய நிலங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெயில் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நிலத்தின் பெரும் பகுதியின் நிலப் பயன்பாட்டு உரிமையினைப் பெற்றதால், விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. வேளாண் நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததுடன், அந்நிலங்களுக்கு வேளாண் கடன் அளிக்க வங்கிகள் மறுத்து விட்டன.


பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும்: - வெங்கையா நாயுடு
[Tuesday 2016-02-02 18:00]

மத்திய சுற்றுலா துறை மற்றும் புதுவை மாநில சுற்றுலா துறை சார்பில் முருங்கப்பாக்கம் கிராமத்தில் ரூ.5.32 கோடியில் 4.1 ஏக்கரில் கலை மற்றும் கைவினை கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முருங்கப்பாக்கத்தில் நடந்தது. சுற்றுலாத் துறை செயலர் மிகிர்வரதன் வரவேற்றார். கலை மற்றும் கைவினை கிராமத்தை திறந்து வைத்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:


தொழிலாளர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளது: - பிரதமர் நரேந்திர மோடி
[Tuesday 2016-02-02 18:00]

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கல்நதுகொள்வதற்காக, இன்று மதியம் 02.40 மணிக்கு வந்தார். அவரை ஆளுநர் ரோசைய்யா, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து கோவையில் மத்திய அரசின் சார்பில் ரூ. 580 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழாவுக்கு முன்னதாக ஓட்டலில் தங்கி இருந்த பிரதமர் மோடியை இந்திய தொழில் வர்த்தக சபையினர், சிறு துளி அமைப்பினர் , சி.ஐ.ஐ., டெக்ஸ்பிரனட் உள்ளிட்ட சங்கத்தினர் சந்தித்து பேசினர். மேலும் இந்த அமைப்பினர் , கோவையை ஸ்மார்ட் சிட்டி பட்டியில் சேர்த்தைமைக்கு நன்றி தெரிவித்தனர்.


ராமர், லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: - வழக்கறிஞரின் மனு கோர்ட்டில் தள்ளுபடி
[Tuesday 2016-02-02 17:00]

ராமரின் மனைவியான சீதா முன்னர் ஜனகபுரியை ஆட்சி செய்த ஜனக மகாராஜாவின் மகளாக மிதிலை நகரில் பிறந்ததாக புராணங்களில் காணப்படுகிறது. அந்த பழங்கால மிதிலை நகர் தற்போதையை பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீதையின் நினைவாகவே இந்த மாவட்டத்துக்கு பிற்காலத்தில் இந்த பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.இது, ஒருபுறமிருக்க, வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராமர், அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், இராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டது தொடர்பாக


பேச்சுத்திறனை இழந்த இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது! - ஒடிசாவில் சம்பவம்!
[Tuesday 2016-02-02 14:00]

ஒடிசா மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பேச்சுத்திறனற்ற மற்றும் காது கேளாத இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததோடு அவரது தாயை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தின் ஜமாஜரி கிராமத்தை சேர்ந்த அந்த 18 வயது இளம்பெண்ணின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த அதே பகுதியை சேர்ந்த சுஜித் குமார் டெஹூரி(26) என்பவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் வேறு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்ட அவர், அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.


மக்கள் நல கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முயற்சி: - திருமாவளவன் அறிக்கை
[Tuesday 2016-02-02 13:00]

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


உலகை உலுக்கும் ஜிகா இந்தியாவில் பரவும் அபாயம்! - சுகாதாரத் துறை விளக்கம்.
[Tuesday 2016-02-02 13:00]

ஜிகா வைரஸ் தொடர்பாக உலகளாவிய அவசர நிலையை ஐநா சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் ஜிகா வைரஸ் தாக்கம் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது மத்திய அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளில் தாக்கி உள்ளது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ், பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தாக்கினால் அதை கண்டறிவது கடினம் என்றும், அவ்வாறு வைரஸ் தாக்கப்பட்டு பிறக்கக்கூடிய குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும் பிறவிக் குறைபாடுடனும் பிறக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனால், உலகளாவிய அவசர நிலையை ஐநா சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.


குழந்தையின் பாலின பரிசோதனை கட்டாயமாக்கப்படும்: - அமைச்சர் மேனகா காந்தி அறிவிப்பு
[Tuesday 2016-02-02 07:00]

கருவில் வளரும் குழந்தையின் பாலின பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்துகொண்டுப் பேசினார். அப்போது, கருவில் வளரும் குழந்தை ஆனா, பெண்ணா என்று அறியும் பாலின பரிசோதனையை கட்டாயமாக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர், "இத்திட்டமானது மத்திய அமைச்சரவையின் முடிவின் கீழ் உள்ளது, இதன்மூலம் பெண்சிசு கொலை முயற்சியை எளிதான முறையில் கண்டுபிடிக்க முடியும்.


கடந்த 29 ஆண்டுகளாக தொல்லை தருகிறார் டோமின் தச்சங்கரி: - ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா குற்றஞ்சாட்டு
[Tuesday 2016-02-02 07:00]

கேரள மாநிலத்தின் போக்குவரத்து ஆணையர் டோமின் தச்சங்கரி, கடந்த 29 ஆண்டுகளாக எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார் என்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா குற்றஞ்சாட்டி உள்ளார். கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஸ்ரீலேகா (55), தற்போது மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக உள்ளார். இவர், போக்குவரத்து ஏ.டி.ஜி.பி. டோமின் தச்சங்கரி தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக முகநூலில் பதிவு செய்துள்ளார். அதில், ''கடந்த 1987-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்தே தச்சங்கரி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது தொல்லைகளைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.


முக்கிய அரசியல் வி.ஐ.பி.க்கள் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர்: - சரிதா நாயர் குற்றச்சாட்டு
[Tuesday 2016-02-02 07:00]

கேரளாவிலுள்ள பல முக்கிய அரசியல் வி.ஐ.பி.க்கள் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர் என்று விசாரணை கமிஷன் முன் ஆஜரான சரிதா நாயர் கூறியுள்ளார். சரிதா நாயர் கடந்த வெள்ளியன்று, சூரிய ஒளி மின்தகடு மோசடி வழக்கில், சிவராஜன் ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தபோது,


பிரியங்கா காந்தி சென்னைக்கு ரகசியமாக வந்து செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
[Tuesday 2016-02-02 07:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா காந்தி சென்னைக்கு திடீரென ரகசியமாக வந்து செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பின்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாக காந்தி பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். அவரது மகன் ராகுல்காந்தி துணை தலைவராக உள்ளார். மகள் பிரியங்கா காந்தி கட்சி பொறுப்புகளில் இல்லாவிட்டாலும் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறுவது வழக்கம். மேலும் தேர்தல் நேரத்தில் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். பிரியங்கா காந்தியும் அரசியலுக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மேலிட தலைவர்கள் ஒவ்வொருவராக தமிழகத்துக்கு வர உள்ளனர். இந்நிலையில், இன்று திடீரென பிரியங்கா காந்தி கட்சியினருக்கு கூட தெரியாமல் சென்னைக்கு தனி விமானத்தில் இன்று ரகசியமாக வந்து செல்கிறார்.


மும்பை கடலில் மூழ்கி 14 மாணவ-மாணவிகள் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்
[Monday 2016-02-01 19:00]

மும்பை அருகே கடலில் மூழ்கி கல்லூரி மாணவ, மாணவிகள் 14 பேர் பலியானார்கள். கடலில் மூழ்கி மாணவர்களை மீட்க, கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு புனே ஆபேதா இனாம்தார் கல்லூரியை சேர்ந்த 143 மாணவ, மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். மாணவ, மாணவிகளுடன் 11 பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். அனைவரும் கடலில் குளிக்க விரும்பினார்கள். ஆனால் அப்போது கடல் உள்வாங்கி இருந்தது. இதன் காரணமாக மதியம் உணவு சாப்பிட்டு விட்டு மாணவ, மாணவிகள் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது.


பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் மற்றும் அசையா மதிப்பு ரூ.1.41 கோடி!
[Monday 2016-02-01 19:00]

பிரதமர் மோடியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.41 கோடி என்று பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 25 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 18, 2014-ல் அறிவிக்கப்பட்ட ரொக்கக் கையிருப்புத் தொகையான ரூ.38,700 என்பது ரூ.4,700 ஆகக் குறைந்துள்ளது. மார்ச் 31, 2015 நிதியாண்டு முடிவில் மோடியின் ரொக்கக் கையிருப்பு ரூ.4,700. மார்ச் 2015-ல் பிரதமர் மோடியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 1,26,12,288 என்பதிலிருந்து ரூ.1,41,14,893 ஆக உயர்ந்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பு மோடி வாங்கிய வீட்டின் மதிப்பு 25 மடங்கு உயர்ந்திருப்பதே இதற்கு காரணம் ஆகும்.


மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்: - வைகோ
[Sunday 2016-01-31 22:00]

மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கஜானாவில் சேர்க்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.சேலம் மாவட்ட மதிமுக சார்பில் போஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியது: மக்கள் நலக் கூட்டணியின் மதுரை மாநாட்டுக்கு பிறகு திமுக, அதிமுக கட்சிகள் கலங்கிப் போயுள்ளன. இரு கட்சிகளின் தலைக்கு மேல் ஊழல் வழக்குகள் கத்திப் போல தொங்கிக் கொண்டுள்ளன.தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அதற்கான மாற்றம் மக்கள் மனதில் இருந்து உருவானால் மட்டுமே சாத்தியமாகும். விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையாளர்கள், இளைஞர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.


மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய இந்து மகா சபாவினர்!
[Sunday 2016-01-31 10:00]

சில தினங்களுக்கு முன் குடியரசு தினத்தை


காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறது: - பாஜக தாக்கு!
[Sunday 2016-01-31 09:00]

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறது; அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களை தனது அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார்'' என்று பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, தலித் மாணவர்கள் 9 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது, அதுகுறித்து ராகுல் காந்தி கவலைப்படவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்ட இடங்களுக்கு அவர் செல்லவுமில்லை.


மதத்தை பயங்கரவாதிகள் தங்களைப் பாதுகாக்கும் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்: - முக்தார் அப்பாஸ் நக்வி
[Sunday 2016-01-31 08:00]

மதத்தை பயங்கரவாதிகள் தங்களைப் பாதுகாக்கும் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அவர்களை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது. பயங்கரவாதிகளை மதத்துடன் தொடர்புபடுத்தினால் அது அவர்களுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். மனிதத்தன்மையை அழித்து தீய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.


அரசின் ஆணைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல: - சிவசேனா கட்சி விமர்சனம்
[Sunday 2016-01-31 08:00]

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலின்போது அறிவித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.மத்திய மற்றும் மராட்டிய பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி, அதன் அதிகாரபூர்வ பத்திரிகையான


பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்தால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்: - நிதியமைச்சர் அருண் ஜேட்லி
[Sunday 2016-01-31 08:00]

இந்தியப் பொருளாதாரம் மிகவும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை அடைந்தால் மட்டுமே வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.மேலும் அடுத்த மாதம் (பிப்ரவரி) தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் மக்களைக் கவரும் அறிவிப்புகளைவிட பொருளாதாரக் கட்டமைப்புச் சீர்திருத்தங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தில்லியில் ஆங்கில நாளிதழ் சனிக்கிழமை நடத்திய உலகப் பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் மேலும் பேசியதாவது:கடந்த 2001, 2008 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம், உலக அளவிலான மந்த நிலையை சமாளித்து மீண்டெழுந்தது.


நான்கு மணி நேரத்தில் 23 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த அதிசய மனிதர்!
[Saturday 2016-01-30 17:00]

சுமார் 60 வயது நபர் ஒருவர் தனது பேரக் குழந்தையுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கும் யாரும், அவருக்கு நான்கு மணி நேரத்தில் 23 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள்.புகைபிடிக்கும் பழக்கம் உள்ள அந்த நபர், ஒரு நாள் திடீரென நெஞ்சுவலி என விழுந்திருக்கிறார். அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு எடுக்கப்பட்ட ஈசிஜியில், அது மாரடைப்பு என்று தெரிய வருகிறது. தொடர்ந்து செய்யப்பட்ட இசிஜியில், அவரது இதயத்தை அடுத்தடுத்து மாரடைப்புகள் தாக்கி, இதயம் நின்று, மீண்டும் செயல்படுவதை மருத்துவர்கள் அறிந்தனர்.


தண்டவாளத்தை கடக்க முயன்ற அக்கா, தங்கை பலி: -உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்
[Saturday 2016-01-30 17:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற நான்கு மற்றும் மூன்று வயது சிறுமிகள் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.இங்குள்ள கல்யான்பூர் கிராமத்தை சேர்ந்த ஷக்தி(4), ஷிம்லா(3) ஆகியோரின் சிதைந்த பிரேதங்களை கைப்பற்றியுள்ள போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


நெல்லூர் அருகே விமான எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்தது: - பெட்ரோலை அள்ளிச்செல்ல குடங்களுடன் வந்த மக்கள்
[Saturday 2016-01-30 17:00]

திருப்பதி அருகேயுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு விமான எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெல்லூர் அருகேயுள்ள கோவூரில் இன்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் டேங்கரில் இருந்த விமானப் பெட்ரோல் சாலையில் கொட்டி பெருக்கெடுத்து ஓடியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாலையில் இருக்கும் பெட்ரோலை அள்ளிச்செல்ல பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் குடங்களுடன் அவசரஅவசரமாக அங்கே ஓடிவந்தனர்.இதற்கிடையில், இந்த விபத்து தொடர்பான புகார் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் அங்கு கூடியிருந்த மக்களை அகற்றி, அசம்பாவிதம் நேராதவாறு தடுத்தனர்.


திருச்செந்தூர் கோவிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடியே 85 லட்சம்!
[Saturday 2016-01-30 15:00]

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜனவரி மாத உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 1 கோடியே 85 லட்சம் ஆகும்.இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணம் மாதமிரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம். இவ்வாண்டு ஜனவரி 12, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன், தூத்துக்குடி உதவி ஆணையர் அன்னக்கொடி, அலுவலக கண்காணிப்பாளர் சுப்பையன், ஆய்வாளர் பகவதி ஆகியோர் முன்னிலையில் திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் உண்டியலில் போடப்பட்ட காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


சிகிச்சை பெறுவதற்காக மனைவியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஸ்பத்திரியில் அனுமதி!
[Saturday 2016-01-30 09:00]

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சனையால் அடிக்கடி சோர்வடைந்து காணப்படுகிறார். இந்த பிரச்சனைகளை போக்க அவர் முதல் மந்திரியாக பதவி ஏற்றவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருமுறை கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள ஜிண்டால் இயற்கை சிகிச்சை மையத்தில் சேர்ந்து 12 நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சைக்கு பின்னர் புத்துணர்வு பெற்றவராக டெல்லி திரும்பிய அவர் சுறுசுறுப்பாக தனது பணிகளை செய்து வந்தார். தற்போது உடலில் மீண்டும் சேர்ந்துள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றவும், இருமல் மற்றும் நீரிழிவு தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெறவும் விரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று பிற்பகல் மீண்டும் அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். விபரம் வெளியிடப்படாத நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியான சுனிதாவும் இங்கு உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.


மும்பை விரைவு ரயிலில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டு செயலிழப்பு!
[Saturday 2016-01-30 07:00]

உத்தரப் பிரதேசம் வந்த மும்பை விரைவு ரயிலில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.சித்ரகூட் மாவட்டம், மாணிக்பூர் ரயில் நிலையத்துக்கு மும்பையில் இருந்து மகாநகரி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது அந்த ரயில் பெட்டியின் கழிப்பறையில் இருந்து பாலித்தீன் பையில் சுற்றப்பட்டு, சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்த தகவலின்பேரில், அலாகாபாதில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். அந்த வெடிகுண்டுடன், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு ரூ. 10 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கும் கடிதமும் கைப்பற்றப்பட்டது.அந்தக் கடிதத்தை தடயவியல் துறை சோதனைக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சியின்போது பீரங்கியில் போட்ட குண்டு வெடித்தது: - எல்லை பாதுகாப்பு வீரர்கள் 2 பேர் பலி!
[Saturday 2016-01-30 07:00]

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான், அணுகுண்டு சோதனை நடத்தியதால் பிரபலம் அடைந்த பகுதி ஆகும். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. அதில், ராணுவ வீரர்கள், பீரங்கி மற்றும் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெறுவது வழக்கம். அதுபோல், நேற்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், சிறு பீரங்கியால் சுட்டு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஒருதடவை போடப்பட்ட குண்டு, பீரங்கியின் நீண்ட குழல் பகுதியில் போடப்பட்ட நிலையிலேயே வெடித்து விட்டது. அதையடுத்து, அதன் அருகில் நின்று கொண்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.


போலி சான்றிதழ் மூலம் ரூ.56 லட்சம் மோசடி: - 5 பேருக்கு சிறை தண்டனை!
[Saturday 2016-01-30 07:00]

தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, வேளாண்துறை அமைச்சராக இருந்தவர் காளிமுத்து. அப்போது, ராபின்மெயின் உள்பட பலர் 9 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், போலி வாகன பதிவு சான்றிதழ்கள் மூலம் பல லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ராபின்மெயின், சூரியகுமார், சாகுல்அமீது, சோமசுந்தரம், பெசில்சாம், சுப்பிரமணியன், நடராஜன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து உள்பட 32 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.1983-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1985-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 9 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், இல்லாத வாகனங்கள் இருப்பதுபோல போலி பதிவு சான்றிதழ்களை கொடுத்து ரூ.56 லட்சம் கடன் வாங்கியதாகவும், இந்த கடன் வழங்க காளிமுத்து சிபாரிசு செய்ததாகவும் குற்றம் சுமத்தி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா