Untitled Document
September 18, 2024 [GMT]
ஊழல் இல்லாத கூட்டணி அரசை அமைப்பதே மக்கள் நல கூட்டணியின் நோக்கம்! - வைகோ பேட்டி
[Friday 2016-01-01 18:00]

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழும்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை!
[Friday 2016-01-01 18:00]

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு பத்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்குள்ள நெடுபடிகள் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் கடந்த 13-1-2013 அன்று தனது வீட்டின் அருகே இருந்த இரண்டரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.


மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை!
[Friday 2016-01-01 18:00]

மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பிரபல ஹெலிகாப்டர் சேவை நிறுவனமான பவன் ஹன்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபற்றி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,


இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு!
[Friday 2016-01-01 09:00]

கோவில்களில் நடத்தப்படும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அதில், இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் இந்து கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்து கடந்த நவம்பர் 26-ந்தேதி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஒழுக்கக் கேடான ஆடைகளை அணிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.


சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்து ஆசிட் வீசிய மாமாக்கள்:மத்தியப் பிரதேசத்தில் சம்பவம்
[Friday 2016-01-01 09:00]

மத்தியப் பிரதேசத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க இரவில் சென்ற 18 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, அவர் மீது ஆசிட் வீசிய இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்திலுள்ள லஹ்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட சிறுமி. கடந்த புதன்கிழமையன்று இரவில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியில் வந்த இச்சிறுமியை அவரது மாமாக்கள் தாம்தா, முனீஷ் ராஜவத் ஆகிய இருவரும் கடத்திச் சென்று, அருகில் இருந்த வனப்பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், ஆசிட் மூலம் அச்சிறுமியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


சாத்தியமில்லாததை டெல்லி சாதித்துள்ளது: டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
[Friday 2016-01-01 08:00]

ஒற்றை, இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்களை இயக்க சோதனை முயற்சி டெல்லியில் இன்று தொடங்கியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சாத்தியமில்லாததை டெல்லி சாதித்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது. சோதனை முயற்சியாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்ட இந்த திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வருகிற 15-ந்தேதி வரை 15 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.


சூழ்நிலைக்கேற்ப கூட்டணி பற்றிய முடிவெடுக்கப்படும்: - ஜெயலலிதா
[Friday 2016-01-01 08:00]

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து அப்போதைய சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவை எடுப்பேன் என்று முதல்வரும், அந்தக் கட்சியின் பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார். மேலும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றும் அவர் கூறினார். அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் திருவான்மியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஜெயலலிதா பேசியது: ""சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறேன். உத்திகளை வகுத்த பின் முடிவு: தேர்தல் களத்தில் வெற்றி பெற பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக உத்திகளை வகுக்க வேண்டும். தேர்தலைச் சந்திப்பதற்கு எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய உத்தி என்று எதுவும் கிடையாது.


பிறந்தது 2016 புத்தாண்டு: சென்னையில் கோலாகலம்!
[Friday 2016-01-01 08:00]

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. இந்தியாவிலும் உற்சாகமாக 2016 ஆம் ஆண்டு வரவேற்கும் விதமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பழையன மறந்தும் புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையோடு பிறந்துவிட்டது புதிய ஆண்டு 2016 உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். 2015-ம் ஆண்டு நிறைவடைந்து 2016-ம் ஆண்டு துவங்கியது, முன்னதாக உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக அந்நாட்டு தலைநகர் வெலிங்டனில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வாண வெடி வெடித்து புத்தாண்டை இனிதே வரவேற்றனர். தைவான் தலைநகர் தைப்பே நகரில் உயரமான கட்டடம் ஒன்றில் வண்ண வாண வேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடினர். தாய்லாந்திலும் புத்தாண்டையொட்டி பட்டாசு வெடித்து அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை ஆடல் பாடலுடன் அந்நகர மக்கள் வரவேற்றனர்.


11 வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்: - உலகிலேயே அதிக திறன் கொண்ட சிறுமி!
[Friday 2016-01-01 00:00]

11 வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்- அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD


சென்னையில் நடந்தவை அனைத்தும் அத்துமீறல்கள் தான்: - அதிகார மமதையின் உச்சத்தில் இருக்கிறார் ஜெயலலிதா!
[Thursday 2015-12-31 23:00]

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசியல் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் போது அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைவது இயல்பு தான். ஆனால், அந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அவர்கள் வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும். ஆனால், அதிமுக பொதுக்குழுவுக்காக சென்னையில் நடந்தவை அனைத்தும் அத்துமீறல்கள் தான். முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழ்பாடி அவரிடம் நல்ல பெயர் எடுத்துவிட்டால் போதும்... எவ்வளவு ஊழல்கள் வேண்டுமானாலும் செய்யலாம்; அதை யாரும் கேட்க மாட்டார்கள் என்று கருதும் அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஜெயலலிதாவின் கண்களில் படும் வகையில் பதாகைகளை வைக்க வேண்டும் என்பதற்காக போயஸ் தோட்டம் தொடங்கி பொதுக்குழு நடைபெறும் இடம் வரை உள்ள அனைத்து சாலைகளின் மையத் தடுப்புகளையும், நடைபாதைகளையும் ஆக்கிரமித்துள்ளனர்.


பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட 6 இலட்சம் குற்றவாளிகளை அசிங்கப்படுத்திய இந்திய பொலிஸ்:
[Thursday 2015-12-31 23:00]

முன்னர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட 600,000 பேரை, புதுவருடத்துக்கு முந்தைய தினமான இன்று வியாழக்கிழமை (31), இந்தியப் பொலிஸார் அசிங்கப்படுத்தியிருந்தனர். அவர்களைச் சூழவுள்ள பெண்களிடையே சிறந்த நடத்தையை வெளிப்படுத்துமாறும் இல்லாவிடில் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறுஞ்செய்திகள் மூலம் எச்சரிக்கப்பட்டிருந்தனர். நீங்களும் உங்களது அலைபேசியும் இன்னும் கண்காணிப்பிலேயே உள்ளது. தற்போது உங்களது நடத்தை நன்றாக உள்ளது என நம்புகிறோம். உங்களுக்கு புதுவருட வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறோம் என உத்தர பிரதேச பொலிஸாரினால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


என் வீட்டின் முன்பு போராட்டம் நீடித்தால் ஜெயலலிதா வீட்டின் முன்பு அறப்போராட்டம் நடத்த வேண்டி வரும்: விஜயகாந்த்
[Thursday 2015-12-31 22:00]

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தனக்கு எதிராக பத்திரிகையாளர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஜெயா டிவியைச் சார்ந்தவர்களுடன் அ.தி.மு.க.வினரும் சமூக விரோதிகளும் ஒன்றுசேர்ந்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வருவதும், எனது வீட்டை முற்றுகையிட வருவதுமென தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள். மேலும், தரக்குறைவான மற்றும் ஆபாச வார்த்தைகளாலும் கடுஞ்சொற்களாலும் கோஷமிட்டனர். காவல்துறையில் இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் எனது இல்லத்திற்கு அருகிலேயேதான் காவல் நிலையமும் இருக்கிறது.


மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 29 பேரை கைது செய்த இலங்கைக் கடற்படை!
[Thursday 2015-12-31 17:00]

நாகையிலிருந்து 3 மீன்பிடி படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 29 பேரை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை மாலை கைது செய்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது. இந்த மீனவர்கள் 29 பேரும் நாகை அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கடந்த 27-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்கள் எனவும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 பேரும் திரிகோணமலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் மீனவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருக்காதீர்கள்: காங்கிரசை தாக்கிய மோடி
[Thursday 2015-12-31 17:00]

நாடாளுமன்றத்தை ஒழுங்காக நடத்துவதற்கு புத்தாண்டிலாவது தீர்மானம் எடுங்கள் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் சரக்கு-சேவை வரி உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாததால், நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது என்றார் மோடி. நோய்டாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது: கடந்த 60 ஆண்டுகளாகப் பதவியை அனுபவித்த காரணத்தாலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகாக தாக்கினார். மேலும், அரசியல் காரணங்களால் நாட்டின் வளர்ச்சியை முடக்கக் கூடாது என்றார்.


பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:தேமுதிக எம்.எல்.ஏ. உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் கைது
[Thursday 2015-12-31 12:00]

கடந்த ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கேள்வி கேட்ட செய்தியாளர்களை காரித்துப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டை பத்திரிகையாளர்கள் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தேமுதிகவினர் பத்திரிகையாளர்கள் மீது கல்வீசி தாக்கினர். இந்த கல்வீச்சில் பத்திரிகையாளர்கள் படுகாயமுற்றனர். விருகம்பாக்கம் காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


பெட்ரோல் கசிவு மற்றும் பயணிக்கு நெஞ்சுவலி காரணமாக 2 விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்!

[Thursday 2015-12-31 09:00]

பெட்ரோல் கசிவு மற்றும் பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மஸ்கட் நோக்கி கடந்த திங்கட்கிழமை இரவு 11.37 மணியளவில் விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 76 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகள் இருந்தனர். இந்தநிலையில் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளதை விமான ஓட்டிகள் கண்டு பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமானத்தை மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினர். பின்னர் பெட்ரோல் கசிவு சரிசெய்யப்பட்டு அந்த விமானம் மீண்டும் நேற்று முன் தினம் அதிகாலை 8.35 மணியளவில் மஸ்கட் கிளம்பி சென்றது.


2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக வேதனைப்படுகிறேன்: விஜயகாந்த் குமுறல்
[Thursday 2015-12-31 08:00]

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக வேதனைப்படுகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சையில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் முடிந்து கட்சியினர் கலைந்து சென்ற பின்னர், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மேடை ஒலிபெருக்கிகள், பேனர்கள், கட்சிக் கொடிகளை அடித்து, நொறுக்கி தீவைத்தும் கொளுத்தினர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் தேமுதிக பேனர்கள் கிழிக்கப்பட்டு, எனது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த அராஜகம் நடக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு மறுநாள், தேமுதிகவைச் சார்ந்தவர்கள் தரம் தாழ்ந்து நடந்துகொண்டதாக தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கிழக்கு தில்லியில் உள்ள வணிக வளாகத்தில் மகளிருக்கென பிரத்யேக மதுபான விற்பனையகம்!
[Thursday 2015-12-31 08:00]

கிழக்கு தில்லியில் உள்ள வணிக வளாகத்தில் மகளிருக்கென பிரத்யேக மதுபான விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. மது அருந்தும் பழக்கம் ஆண்களிடையே அதிகம் இருந்தாலும், தில்லி போன்ற பெருநகரங்களில் பெண்களில் இளைய தலைமுறையினர் சிலரிடையே மதுப் பழக்கம் உள்ளது. அதேவேளையில், மதுக் கடைகளுக்கு ஆண்கள் போல பெண்களும் சகஜமாகச் சென்று மதுபானம் வாங்குவதில் சில அசௌகரியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.


தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம் அருண் ஜேட்லிக்கு எதிராக 2 ஆதாரங்கள் வெளியிட்ட ஆம் ஆத்மி!
[Thursday 2015-12-31 08:00]

தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்துக் கொள்ளும்படி, தில்லி காவல்துறை ஆணையர், சிறப்பு ஆணையருக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுதியதாக கூறப்படும் 2 கடிதங்களை ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்தக் கடிதங்களில் தவறாக எதுவும் இல்லை என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, தில்லியில் அந்த 2 கடிதங்களையும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆசுதோஷ் செய்தியாளர்கள் முன்னிலையில் புதன்கிழமை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்தார்.


இந்தியாவில் 2016-ல் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியாக உயரும்:
[Wednesday 2015-12-30 19:00]

2016-ல் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது இணையதள வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 40 கோடி யாக உள்ளது என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2 ஆண்டுகளில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டுவதே இலக்கு என்று முன்னர் தெரிவித்தேன். அந்த இலக்கு அடுத்த ஆண்டு எட்டப்பட்டுவிடும் என்று கூறினார்.


அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும்: - வேல்முருகன் வேண்டுகோள்
[Wednesday 2015-12-30 14:00]

தமிழக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை இன்று நான் சந்தித்து பேசினேன். அப்பொழுது 3 தமிழரின் மரண தண்டனையை குறைக்க வலியுறுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் குறித்தும், 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து முதல்வர் அறிவித்தது; மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட இடைவிடாத முயற்சிகளுக்காக முதல்வருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


கிரிக்கெட் சங்கத்தில் மகனை தேர்வு செய்ய தாயிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
[Wednesday 2015-12-30 08:00]

மாநில கிரிக்கெட் சங்கத்தில் மகனை தேர்வு செய்ய தாயிடம் பாலியல் பேரம் நடத்தியதாக டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகள் சிலர் மீது டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் கூறிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் மனைவி, தனது மகனை கிரிக்கெட் சங்கத்தில் தேர்ச்சி பெற அதிகாரியிடம் பேரம் பேசியபோது, அந்த அதிகாரி ஓர் இரவு தன்னுடன் கழிக்கும்படி தாயை மிரட்டியதாகவும், எஸ்.எம்.எஸ். கொடுத்து தொந்தரவு செய்ததாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அருண் ஜெட்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியுள்ள கெஜ்ரிவால், தற்போது இந்த புதிய புகாரை தெரிவித்துள்ளார்.


விஜயகாந்தை கைது செய்ய ஜனவரி ஐந்தாம் தேதிவரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
[Wednesday 2015-12-30 08:00]

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கைதுசெய்ய உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஜனவரி ஐந்தாம் தேதிவரை இடைக்காலத் தடை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருக்கிறது. தஞ்சாவூரில் நேற்று டெல்டா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், அங்கிருந்த ஜெயலலிதா படங்களை அகற்றும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தே.மு.தி.கவினர் அங்கிருந்த ஜெயலலிதா படங்களை அகற்றினர். இதையடுத்து தஞ்சாவூரைச் சேர்ந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமி, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு:
[Tuesday 2015-12-29 19:00]

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறை 12 வாரங்கள் என்ற அளவிலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்க, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.


ஆசியாவில் ஊடகவியலாளர்கள் உயிரைப் பறிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்!
[Tuesday 2015-12-29 17:00]

அமைதிப் பூங்காவாக திகழும் நாடுகளில் தான் இந்த ஆண்டு அதிக அளவிலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனை அடிப்படையாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் "இந்த ஆண்டு உலகம் முழுவதும் 110 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 43 பேரின் படுகொலை பற்றி தெளிவான தகவல் இல்லை. உலகம் முழுவதும் தொழில் ரீதியாக அல்லாமல் மக்கள்-ஊடகவியலாளர்கள் பிரிவில் பணியாற்றிய 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஊடக நிறுவனங்களில் வேலைப்பார்த்த 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்றில் 2 பங்கு ஊடகவியலாளர்கள் அமைதி தவழும் நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.


ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!
[Tuesday 2015-12-29 17:00]

ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகருக்கு இயக்கப்படும், ஹவுரா-அம்ரிட்சர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த 14 வயது சிறுமி, தான் புக் செய்திருந்த பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக தெரியாமல், ராணுவத்தினருக்காக புக் செய்யப்பட்ட கோச்சில் ஏறியுள்ளார். இதைப்பார்த்த ராணுவத்தினர் சிலர், அந்த சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். சிறுமி பாத்ரூம் சென்றபோது, அங்கு வைத்து இருவர் பலாத்காரம் செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம், மதுபூர் ரயில் நிலையத்தில் வைத்து, மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை, சமூக சேவகர்கள் சிலர் மீட்டு காவல் நிலையம் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சையளித்த பிறகு,


குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்தால் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது: ஆய்வில் தகவல்
[Tuesday 2015-12-29 17:00]

குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன.


2016ஆம் ஆண்டு யாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: ஜெ.க்கு விஜயகாந்த் பதிலடி
[Tuesday 2015-12-29 16:00]

2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யாருக்கு பாடம் புகட்டுவது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் மழை நிவாரணம் வழங்கக் கோரி நேற்று தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேருந்து நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க விஜயகாந்த் தமது கட்சியினருக்கு உத்தரவிட்டார். இதனால் அந்த படத்தை தேமுதிகவினர் கிழித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர், தேமுதிகவினர் பேனர், கொடிகளை எரித்தனர். இந்தப் போராட்டம் தமிழகம், புதுவையிலும் வெடித்தது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் கொடும்பாவியை எரிக்க வேண்டாம்; 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த்துக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என கூறியிருந்தார்.

Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா