|
|
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுகிறதாம்- நாமல் கவலை!
[Thursday 2024-11-21 04:00]
|
வட மாகாணத்தில் இராணுவ முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை மற்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற திட்டமிட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கவலை வெளியிட்டுள்ளார்.
|
|
|
மன்னார் வைத்தியசாலை முன் நீதி கோரி போராட்டம்!
[Thursday 2024-11-21 04:00]
|
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை 4.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
|
|
|
டிக் டொக்கில் வேட்பாளருக்கு அபகீர்த்தி- வவுனியாவில் வைத்து லண்டன் பெண் கைது!
[Thursday 2024-11-21 04:00]
|
லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து சமூக வலைத்தளம் மூலம் நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
|
|
|
திட்டமிட்டபடி திங்களன்று பரீட்சை தொடங்கும்!
[Thursday 2024-11-21 04:00]
|
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
மட்டக்களப்பில் இரண்டரை கோடி ரூபா கொள்ளை!
[Thursday 2024-11-21 04:00]
|
மட்டக்களப்பு- கல்லடி பிரதேசத்தில் தனித்திருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண்ணொருவரை தாக்கிவிட்டு இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்கம் மாலை 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
|
|
|
ரவியின் தேசியப் பட்டியல் நியமனம்- விசாரணைக்கு நால்வர் குழு!
[Thursday 2024-11-21 04:00]
|
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
|
|
|
இலங்கையர்களின் அரசாங்கம் இப்படித் தான் இருக்குமாம்!
[Thursday 2024-11-21 04:00]
|
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
|
|
|
இன்று கூடுகிறது 10ஆவது நாடாளுமன்றம்!
[Thursday 2024-11-21 04:00]
|
இன்று கூடவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை சம்பிரதாயபூர்வமாகத் ஆரம்பிப்பதற்கான ஒத்திகை நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற அறிக்கையின்படி, 10வது பாராளுமன்றம் இன்று காலை 9:55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலித்ததைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு ஆரம்ப அமர்வு ஆரம்பமாகிறது.
|
|
|
70,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு!
[Thursday 2024-11-21 04:00]
|
உள்ளூர் சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 70,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் மற்றும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
|
|
|
சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள்- உயர்நீதிமன்றில் வழக்கு!
[Thursday 2024-11-21 04:00]
|
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கலால் சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
|
|
|
வடக்கு கிழக்கிற்கு வரப் போகும் ஆபத்து!
[Wednesday 2024-11-20 16:00]
|
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி பதிவாகும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
|
|
|
மன்னார் வைத்தியசாலையில் விசாரணை ஆரம்பம்!
[Wednesday 2024-11-20 16:00]
|
மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார்.
|
|
|
தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி!
[Wednesday 2024-11-20 16:00]
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
|
|
|
இந்திய மீனவர்களின் 13 படகுகளை கடற்படையிடம் ஒப்படைக்க உத்தரவு!
[Wednesday 2024-11-20 16:00]
|
இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 படகுகளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்குமாறு புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
|
|
|
பிள்ளையானிடம் 5 மணிநேரம் சிஐடி விசாரணை!
[Wednesday 2024-11-20 16:00]
|
குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்.
|
|
|
ரவி கருணாநாயக்கவின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது!
[Wednesday 2024-11-20 16:00]
|
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
|
|
|
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதான ஹரீன் பெர்னான்டோ பிணையில் விடுவிப்பு!
[Wednesday 2024-11-20 16:00]
|
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!
[Wednesday 2024-11-20 16:00]
|
வவுனியா -ஈச்சம்குளம் பகுதியில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய சந்தேகநபர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்டதாக ஈச்சலம்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
|
|
|
வெங்காயத்தின் விலை 400 ரூபாவாக எகிறியது!
[Wednesday 2024-11-20 16:00]
|
ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
|
|
|
நாளை இந்தியா செல்கிறார் ரணில்!
[Wednesday 2024-11-20 16:00]
|
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைகாலை இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின்போது ரணில் விக்கிரமசிங்க மத்திய இந்தியாவில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி நிறுவனத்தில் விரிவுரை ஒன்றையும் நடத்த உள்ளார்.
|
|
|
இனி எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டேன்!
[Wednesday 2024-11-20 05:00]
|
இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
|
|
|
தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றதாம்! - பாராட்டுகிறார் சீனத் தூதுவர்.
[Wednesday 2024-11-20 05:00]
|
அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.
|
|
|
ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்!
[Wednesday 2024-11-20 05:00]
|
மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர் வாரத் தொடக்க நாளான கார்த்திகை 20.11.24 புதன்கிழமை முதல் 27.11.2024 புதன்கிழமை வரை தமது மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று, ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளையும், பூசை வழிபாடுகளையும் மேற்கொள்ளுமாறு, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் கேட்டுக் கொள்கின்றது.
|
|
|
மன்னார் வைத்தியசாலையில் தாயும் சேயும் மரணம்!
[Wednesday 2024-11-20 05:00]
|
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.
|
|
|
தமிழ்த் தேசிய வாக்குகளை என்பிபி கைப்பற்றவில்லை!
[Wednesday 2024-11-20 05:00]
|
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் செல்லுபடியான வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
|
|
|
18 அமைச்சுக்களின் செயலாளர்களில் தமிழர் ஒருவர்- முஸ்லிம்களுக்கு இடமில்லை!
[Wednesday 2024-11-20 05:00]
|
புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
|
|
|
ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனம்!
[Wednesday 2024-11-20 05:00]
|
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலிலிருந்து ஐந்து ஆசனங்களை வென்றதுடன் அதில் 4 ஆசனங்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.
|
|
|
தாழமுக்கம் வலுவடையும்!
[Wednesday 2024-11-20 05:00]
|
வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்கம் வலுவடையுமென்பதால் அப்பகுதிக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
|
|
|
|