Untitled Document
June 25, 2024 [GMT]


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹெரோய்ன்! - மூவர் கைது.
[Thursday 2024-05-23 15:00]

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ரொறன்ரோ இடைத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 590 வாக்குகளால் தோல்வி!
[Tuesday 2024-06-25 17:00]

ரொறன்ரோ சென்.போல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடந்த இடைத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.


ஜூலை 2ஆம் திகதி அவசரமாக கூட்டப்படுகிறது நாடாளுமன்றம்!
[Tuesday 2024-06-25 17:00]

எதிர்வரும் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தல் விடுத்துள்ளார்.


இந்திய மீனவர்களை கைது செய்ய முயன்ற கடற்படை சிப்பாய் பலி- படகும் சேதம்.
[Tuesday 2024-06-25 17:00]

வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!
[Tuesday 2024-06-25 17:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10மணிக்கு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.


முன்னர் ஐஸ் கிறீமுக்குள் தேரை, இப்போது மிக்சருக்குள் பொரிந்த பல்லி! Top News
[Tuesday 2024-06-25 17:00]

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அச்சுவேலியில் வீட்டை உடைத்து கொள்ளை!
[Tuesday 2024-06-25 17:00]

யாழ்ப்பாணம்- அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்- உலக வங்கி ஒப்புதல்!
[Tuesday 2024-06-25 17:00]

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குடிசை மீது விழுந்தது பனைமரம்- சிறுவன் காயம்.
[Tuesday 2024-06-25 17:00]

திடீர் சூறைக்காற்றினால் காரைநகர் களபூமியில் உள்ள ஓலைக் குடிசை மீது பனை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


ஒசாலா ஹேரத்தும் களமிறங்குகிறார்!
[Tuesday 2024-06-25 17:00]

டயனா கமகேயிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சமூக செயற்பாட்டாளர் ஒசாலா ஹேரத் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். புதிய சுதந்திர முன்னணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


200 கிலோ போதைப்பொருளுடன் படகு சிக்கியது!
[Tuesday 2024-06-25 17:00]

மேற்கு கடற்பரப்பில் 200 கிலோ கிராம் போதைப்பொருளுடன் படகு ஒன்றை கைப்பற்றி இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 121 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.


பொது வேட்பாளரை நிறுத்த குத்துவிளக்கு கூட்டணி ஆதரவு! Top News
[Tuesday 2024-06-25 04:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் திங்கட்கிழமை அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


தீவிபத்தில் நாசமாகியது வவுனியா தொழிற்சாலை! Top News
[Tuesday 2024-06-25 04:00]

வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


பல்கலைக்கழகங்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தை அழைக்கிறது அரசாங்கம்!
[Tuesday 2024-06-25 04:00]

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.


முருங்கன் விபத்தில் இளம் குடும்பத் தலைவர் பலி!
[Tuesday 2024-06-25 04:00]

மன்னார் - முருங்கன் ரயில் கடவை பகுதியில் நேற்று மாலை பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.


இனக்குரோதத்தை தூண்டும் அரச அதிபர், கல்முனை தெற்கு பிரதேச செயலர்!
[Tuesday 2024-06-25 04:00]

மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக்குரோதத்தை வளர்த்துவிடுகின்ற முகமாகத்தான் திட்டமிட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக சட்டத்துக்கு முரணாக இந்த அலுவலகங்களின் விவகாரத்தில் தலையிட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.


நான் ஜனாதிபதியாவேன்! - அடித்துச் சொல்கிறார் விஜேதாச.
[Tuesday 2024-06-25 04:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சீரழிப்பவர்களின் சதித்திட்டங்களை விரைவில் அம்பலப்படுத்துவேன். நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.


வவுனியாவில் தாக்குதல்- தந்தை, மகன் காயம்!
[Tuesday 2024-06-25 04:00]

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


பாகிஸ்தானில் இருந்து வந்த பொதியில் 4 கிலோ ஐஸ்!
[Tuesday 2024-06-25 04:00]

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் 4 கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


பணவீக்கம் வீழ்ச்சி!
[Tuesday 2024-06-25 04:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 2.7% காணப்பட்டதுடன், அது மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.


சிறுமி பாலியல் பலாத்காரம் - குற்றவாளிக்கு 35 வருட சிறைத்தண்டனை!
[Tuesday 2024-06-25 04:00]

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்! Top News
[Monday 2024-06-24 17:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.


இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதாக தொழிற்கட்சி வாக்குறுதி!
[Monday 2024-06-24 17:00]

பிரிட்டனின் தொழிற்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.


கல்முனையை முடக்கிய போராட்டம் - போக்குவரத்து தடை, அரச செயலகங்கள் முடக்கம், விமானம் வட்டமடிப்பு! Top News
[Monday 2024-06-24 17:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதால், மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு தடைப்பட்டதுடன், அரச செயலகங்களும் முற்றுகையிடப்பட்டன.


ரணிலுடன் இணைந்து போட்டியா?- மஹிந்தவின் தீர்மானம்.
[Monday 2024-06-24 17:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின்னர் தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இந்தியா- இலங்கை இடையே தரைப்பாலம் - பேராயர் கடும் எச்சரிக்கை!
[Monday 2024-06-24 17:00]

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.


சரத் பொன்சேகாவிற்கு எதிராக இந்த வாரம் நடவடிக்கை!
[Monday 2024-06-24 17:00]

முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவிற்கு எதிராக கட்சி இந்த வாரம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.


காய்ச்சல் ஏற்பட்ட பெண் மரணம்!
[Monday 2024-06-24 17:00]

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று , மருந்தை உட்கொண்ட பெண் நேற்று ர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் , சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்


வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி!
[Monday 2024-06-24 17:00]

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா