Untitled Document
July 3, 2024 [GMT]


2 ரூபாவினால் குறைகிறது பேருந்துக் கட்டணம்!
[Saturday 2024-06-29 06:00]

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.


அமைதியாக ஒன்றுகூடும் உரிமையைப் பாதிக்கும் சட்டங்கள், கட்டுப்பாடுகள்!
[Wednesday 2024-07-03 05:00]

2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரையான ஒரு வருடகாலத்தில் இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பாதிக்கக்கூடிய வகையிலும், அதனை மட்டுப்படுத்தக்கூடிய விதத்திலும் சட்டங்களும், வழிகாட்டல்களும் உருவாக்கப்பட்டிருப்பதாக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல் சுட்டிக்காட்டியுள்ளார்.


சம்பந்தனின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி! Top News
[Wednesday 2024-07-03 05:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.


நயினாதீவுக்கு சென்ற படகு கவிழ்ந்து ஒருவர் பலி!
[Wednesday 2024-07-03 05:00]

யாழ்ப்பாணம்- குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று நேற்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இன்று இறுதி அஞ்சலி!
[Wednesday 2024-07-03 05:00]

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், அதில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.


வேட்பாளர்கள், கட்சிகள் பொது சொத்துக்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்!
[Wednesday 2024-07-03 05:00]

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ள போதிலும், தேர்தல் சட்டம் நடைமுறையிலேயே உள்ளது. எனவே குறித்த காலப்பகுதியில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளை பிரசித்தப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையோ அதற்காக பொது சொத்துக்களைப் பயன்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


பணவீக்கம் அதிகரிப்பு!
[Wednesday 2024-07-03 05:00]

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மே மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜுன் மாதம் 1.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.


தேர்தல்களில் போட்டியிடுவதில்லை- அறிவித்தார் மைத்திரி!
[Wednesday 2024-07-03 05:00]

இலங்கையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


சம்பந்தன் மறைவினால் விவாதம் ஒத்திவைக்கப்படவில்லை! - அம்பலப்படுத்தினார் சஜித்.
[Wednesday 2024-07-03 05:00]

பாராளுமன்றத்தின் புதன்கிழமை அமர்வு இரா. சம்பந்தனுக்காக ஒத்திவைக்கப்படவில்லை. கடன் மறு சீரமைப்பு தொடர்பான 3 உடன்படிக்கைகளில் இரண்டில் மாத்திரமே கைச்சாத்திடப்பட்டுள்ளன. மேலும் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்படாத நிலையிலேயே அது பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிழலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .இது பெரும் மோசடி. இது வெளிப்பட்டுள்ளதாலேயே அமர்வை ஒத்திவைத்துள்ளனரென எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


15 வயது மாணவனும் மாணவியும் 67 ஆவது மாடியில் இருந்து குதித்தனர்!
[Wednesday 2024-07-03 05:00]

கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியும் கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கண்டி நீதிமன்றத்தை கதி கலங்கச் செய்தவர் கைது!
[Wednesday 2024-07-03 05:00]

கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி! Top News
[Tuesday 2024-07-02 16:00]

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் இன்று காலை முதல் வைக்கப்பட்டுள்ளது.


என் ஒரே ஒரே நண்பர் சம்பந்தன்!
[Tuesday 2024-07-02 16:00]

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையின் போது, இரா.சம்பந்தன் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தார்.


இரா சம்பந்தனுக்கு சஜித் பிரேமதாச இரங்கல்!
[Tuesday 2024-07-02 16:00]

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது இரங்கலினை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தேசிய அரசு அமைக்க இணங்குவதி்ல்லை! - ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்.
[Tuesday 2024-07-02 16:00]

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, எந்த வகையிலுமான ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என்று இன்று நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண முன்வைத்த பிரேரணைக்குப் நாடாளுமன்ற குழு தமது ஏகமானதான அங்கீகாரத்தை வழங்கியது.


ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிய முன்னர் தீர்வு வேண்டும்!
[Tuesday 2024-07-02 16:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.


பாலி நகரில் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு- 2 பேர் படுகாயம்.
[Tuesday 2024-07-02 16:00]

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மாணவிகள் இல்லத்தில் குளியல் காட்சிகள் பதிவானதா?- விசாரணை தீவிரம்.
[Tuesday 2024-07-02 16:00]

யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குருநகர் மீனவர் முரல் தாக்கி பலி!
[Tuesday 2024-07-02 16:00]

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர், முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!
[Tuesday 2024-07-02 16:00]

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


கஜேந்திரகுமாருக்கு 3 மாத விடுமுறை!
[Tuesday 2024-07-02 16:00]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இரா.சம்பந்தனின் உடலுக்கு பாராளுமன்றத்தில் நாளை அஞ்சலி!
[Tuesday 2024-07-02 05:00]

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக நாளை புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த சம்பந்தன் ஐயாவின் குரல் மௌனித்தது!
[Tuesday 2024-07-02 05:00]

தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்த சம்பந்தன் ஐயாவின் குரல் மௌனித்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார்! - ஜனாதிபதி புகழாரம்.
[Tuesday 2024-07-02 05:00]

இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார். அவரது இழப்பு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும். என்றும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி கருத்துக்கு எதிராக பாடசாலைகள் முன் இன்று கறுப்புப்பட்டி போராட்டம்!
[Tuesday 2024-07-02 05:00]

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலைகளுக்கு முன்பாக இன்று மதியம் 1.30 மணிக்கு கறுப்பு பட்டிகளை அணிந்தவாறு போராட்டம் நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.


சிங்க கொடியை தூக்கி காட்டி,சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர்!
[Tuesday 2024-07-02 05:00]

தான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம் தமிழன். ஆனால், சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற "பல்லின-பன்மொழி-பன்மத" இலங்கையன். பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர். அப்படி சொல்லி சிங்க கொடியையும் யாழ் மேடையில் தூக்கி காட்டியவர். அதற்காக தமிழ் தேசிய வாதிகளால் கடுமையாக விமர்சிக்க பட்டவர்.


சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை பூட்டி வைத்த மருந்தக உரிமையாளர் கைது!
[Tuesday 2024-07-02 05:00]

யாழ்ப்பாணம் - இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த உரிமையாளரை பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர்.


கப்பல் திருவிழாவில் வாள்வெட்டு - மறைந்திருந்த சந்தேக நபர் கைது!
[Tuesday 2024-07-02 05:00]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கப்பல் திருவிழாவின் போது , இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.


உறவுப் பாலமாக விளங்கியவர் சம்பந்தன்!
[Tuesday 2024-07-02 05:00]

தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான உறவின் இணைப்பு பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்களின் மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா