Untitled Document
July 8, 2024 [GMT]


தேர்தல்களில் போட்டியிடுவதில்லை- அறிவித்தார் மைத்திரி!
[Wednesday 2024-07-03 05:00]

இலங்கையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
[Monday 2024-07-08 17:00]

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதி தேர்தலிற்கு இடைக்கால தடைவிதிக்கவேண்டும் என கோரி வர்த்தகர் சமிந்திர தயான் லெனாவ தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


வைத்தியர் அர்ச்சுனா வெளியேறினார் - சாவகச்சேரியை கலங்கடித்த போராட்டம்! Top News
[Monday 2024-07-08 17:00]

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்ற நிலையில் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.


அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!
[Monday 2024-07-08 17:00]

அத்துருகிரிய பகுதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கிளிவெட்டி பெண் படுகொலை - காதலன் உள்ளிட்ட 7 பேர் கைது!
[Monday 2024-07-08 17:00]

மூதூர் -கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மூதூர் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நாளை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


வாள்வெட்டுக் குழு குறித்து வாயை விட்டு வாங்கிக் கட்டிய பொலிஸ் அதிகாரி!
[Monday 2024-07-08 17:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிந்த போதும் அவர்களை கைது செய்ய முடியவில்லை என யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


தென்கொரியா சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் கோளாறு!- கட்டுநாயக்கவுக்கே திரும்பியது.
[Monday 2024-07-08 17:00]

தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


டொலர்களுக்கு விலை போகும் இரண்டு எம்.பிக்கள்!
[Monday 2024-07-08 17:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்றுக்கொண்டு, கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.


பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தீ விபத்து!
[Monday 2024-07-08 17:00]

கல்கிஸ்ஸை பிரிவில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நாளை பாடசாலைகள் இயங்கும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
[Monday 2024-07-08 17:00]

வழமையைப் போன்று பாடசாலைகள் யாவும் நாளை இயங்கும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நாளை செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். இந்நிலையிலேயே, கல்வியமைச்சு மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.


அரசசேவைகள் முடங்கின!
[Monday 2024-07-08 16:00]

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டதுடன் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர். அந்த வகையில், திருகோணமலை மாவட்டத்திலும் அரச சேவைகள் முடங்கியுள்ளன.


மருத்துவர் அர்ச்சுனாவைக் கைது செய்ய பொலிஸ் முயற்சி!- நள்ளிரவில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு. Top News
[Monday 2024-07-08 05:00]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை நேற்றிரவு கைது செய்வதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகளிற்கு பொதுமக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சாவகச்சேரியில் பதற்றநிலை ஏற்பட்டது.


மன்னாரில் விபத்து - அருட்தந்தை மரணம்!
[Monday 2024-07-08 05:00]

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனருமான அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் (வயது 31) உயிரிழந்தார்.


போராட்டத்தைக் குழப்பும் முயற்சியில் கேதீஸ்வரன்!
[Monday 2024-07-08 05:00]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக, தென்மராட்சி மக்களால் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பம் வகையில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை யாழ்ப்பாண பிராந்திக்க சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


இன்றும் நாளையும் சுகவீன விடுமுறைப் போராட்டம்!
[Monday 2024-07-08 05:00]

அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் இன்றும் நாளையும், சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? - இன்று விசாரணை.
[Monday 2024-07-08 05:00]

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வர்த்தகர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.


மனைவி, இரு பிள்ளைகளை காணவில்லை- கணவன் முறைப்பாடு!
[Monday 2024-07-08 05:00]

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.


சமஷ்டி தீர்வு என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்த ஒருவர் சம்பந்தன்!
[Monday 2024-07-08 05:00]

தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம் ஆகியோருக்கு அடுத்ததாக சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இறுதி வரையில் உறுதியாக இருந்த ஒருவரே சம்பந்தன் என்று புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்தார்.


சம்பள அதிகரிப்பினால் வரிச் சுமை உயரும்!
[Monday 2024-07-08 05:00]

தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.


ஒன்டாரியோவில் ஒக்டோபரில் சம்பள அதிகரிப்பு!
[Monday 2024-07-08 05:00]

ஒன்டாரியோ உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கனடா நுனாவுட் பகுதியில் அதிகூடிய சம்பளத்தொகையாக 19 டொலர்கள் காணப்படுகின்றது. கனடாவில் மிகவும் சம்பளம் குறைவான மாகாணமாக சஸ்காச்சுவான் கருதப்படுகின்றது.


கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Monday 2024-07-08 05:00]

வாகரை - கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். நீரில் மூழ்கிய நிலையிலேயே இந்த மீனவர் ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.


சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம்! Top News
[Sunday 2024-07-07 19:00]

பெருமளவு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் திருகோணமலை இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.


தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை உறுதியாகச் சொன்னவர் சம்பந்தன்!
[Sunday 2024-07-07 19:00]

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை உறுதியாகச் சொன்னவர் சம்பந்தன் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


சம்பந்தனின் இலட்சியங்களை அடைவதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்
[Sunday 2024-07-07 19:00]

சம்பந்தனின் இலக்குகளை அடைவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உறுதிபூண்டு செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.


சம்பந்தனின் நோக்கம் நிறைவேற பாஜகவும், பிரதமர் மோடியும் முழு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்!
[Sunday 2024-07-07 19:00]

சம்பந்தன் முக்கிய நோக்கத்துக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.


ஜெய்சங்கருடன் பேசுவதற்கு ஒத்திகை பார்த்த சம்பந்தன்! - சுமந்திரன் தகவல்.
[Sunday 2024-07-07 19:00]

இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதிலும் சம்பந்தன் ஆத்மார்த்தமான அளவில் உறுதியாக இருந்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.


நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு செல்வம்?- 6 எம்.பிக்கள் ஆதரவு.
[Sunday 2024-07-07 19:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் இயற்கை எய்தியுள்ளமையை அடுத்து அந்தப் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


சொந்த விருப்பத்திலேயே வழக்குத் தாக்கல் செய்தாராம் லெனாவ!
[Sunday 2024-07-07 19:00]

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும்வரை ஜனாதிபதி தேர்தலிற்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என கோரும் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வர்த்தகர் சிடி லெனாவ தான் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.


கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்கவில் கைது!
[Sunday 2024-07-07 19:00]

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்லவிருந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா