Untitled Document
May 6, 2024 [GMT]
சந்திரிகாவுடனும் பேசுகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்!
[Thursday 2016-01-07 07:00]

நோர்வே அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் பேச்சு நடத்த உள்ளது. நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கே பிரன்டே ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். சந்திரிகா ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் நோர்வே அரசாங்கம் சமாதான முனைப்புக்களில் முக்கிய பங்காற்றியிருந்தது. 2005ம் ஆண்டிலேயே இறுதியாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.


பிரகீத் கடத்தல் வழக்கில் திருப்பம் - உத்தரவிட்டவரின் பெயர் அம்பலம்!
[Thursday 2016-01-07 07:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படடுள்ள இரண்டு பேர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்துமாறு உத்தரவிட்ட அதிகார தலைமை யார் என்பதை வெளியிட்டுள்ளனர். இந்த கடத்தலுக்கு, முன்னைய அரசாங்கத்தின் முன்னிலை பாதுகாப்பு முக்கியஸ்தர் ஒருவரே உத்தரவிட்டுள்ளார் என்று சீஐடி சந்தேகம் வெளியிட்டுள்ளது.


பதன்கோட் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்!
[Thursday 2016-01-07 07:00]

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது பலியான படையினரின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது அனுதாபத்தை தெரிவிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுவதற்கு இலங்கை தொடர்ந்தும் தயாராகவுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.


ஐ.எஸ் அமைப்பு குறித்து படையினர் உசார் நிலையில்! - பாதுகாப்பு அமைச்சு
[Thursday 2016-01-07 07:00]

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து பாதுகாப்பு படையினர் மிகவும் உன்னிப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தமது செயற்பாடுகளை இலங்கையில் ஆரம்பிப்பது மற்றும், இலங்கையில் தோற்றம் பெறுவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில், அவர்களின் எச்சரிக்கை குறித்து, இலங்கை பாதுகாப்பு படையினர் உஷாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.


சீனா செல்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் மகிந்த!
[Thursday 2016-01-07 07:00]

சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்வதா, இல்லையா என்று தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்‌ஷ சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ள. இந்த நிலையில், திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


மேலும் பல இடங்களை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம்! - பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல்
[Thursday 2016-01-07 07:00]

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில், மேலும் பல இடங்களை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


புலம்பெயர் புலிகளைத் திருப்திப்படுத்தவே இராணுவ அதிகாரிகள் கைது! - விமல் வீரவன்ச
[Thursday 2016-01-07 07:00]

புலம்பெயர் விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்துவதற்காகவே ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வாளர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது என்று விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரிகளையும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவாவையும் நேற்று சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.


2015இல் கொலைகள், குற்றங்கள் குறைவு! - என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
[Thursday 2016-01-07 07:00]

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கொலைகள், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தற்கொலை சம்பவங்களில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அவர் பெற்றோரின் தவறினாலே பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.


ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும் தமிழருக்கு எதிரான சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள்! - சர்வதேச அறிக்கை Top News
[Wednesday 2016-01-06 19:00]

கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் பிரிட்டன் பிரதமர் இலங்கை வந்தபோது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று 'உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம்' அமைப்பு தெரிவித்துள்ளது.


ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை - இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது!
[Wednesday 2016-01-06 19:00]

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவரிடம், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இனத்தவரான இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி கிரித்தலவில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமில் பணியாற்றி வருகிறார்.


போர் விமானக் கொள்வனவு - விமானப்படைக்குத் தெரியாதாம்!
[Wednesday 2016-01-06 19:00]

ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக பாகிஸ்தானுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது குறித்து தாம் எதனையும் அறியவில்லை என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படை பேச்சாளர் சந்திம அல்விஸ் இதனை தெரிவித்துள்ளார். தமக்கு இது குறித்து அரசாங்கம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


6000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் அரிசியை சாப்பிட்ட ஆதி மனிதன்! Top News
[Wednesday 2016-01-06 19:00]

6000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள் அரிசியை உணவாகச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர் என்று அண்மைய அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஹோமோ சபியன்ஸ் கால மனிதர்களே இவ்வாறு அரிசியை உணவாக சாப்பிட்டுள்ளனர். பலாங்கொட- இலுக்கும்பர பிரதேசத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட்ட குகை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது.


காயமுற்ற பெண் யானையை காப்பாற்ற மனிதர்களை தேடி வந்த ஆண் யானை! Top News
[Wednesday 2016-01-06 19:00]

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான பெண் யானையை காப்பாற்ற, மனிதர்களை வசிக்குமிடத்துக்கு தள்ளிக் கொண்டு வந்து ஆண் யானை ஒன்று தீவிர முயற்சி எடுத்த சம்பவம் வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அந்த யானையை காப்பாற்றும் நோக்கில் ஆண் யானை ஒன்று மனித நடமாட்டம் உள்ள பிரதேசத்திற்கு பெண் யானையை தள்ளிக்கொண்டு வந்துள்ளது.


உயர்பாதுகாப்பு வலயம், தேசிய பாதுகாப்பு என்ற பெயர்களில் தமிழினப்படுகொலையின் தடயங்களை மூடிமறைக்கப்படுகின்றதா?
[Wednesday 2016-01-06 19:00]

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு என்றும் தமிழின அழிப்பின் தடயங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சமீபத்தில், முள்ளிவாய்க்கால் வட்டுவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடலங்கள் அப்பகுதியில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமது சொந்தக் காணிகளை படையினர் தரமறுப்பதோடு, அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்ற அப்பகுதி மக்களின் கருத்து இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அதனைச் தங்களுக்கு சொந்தமாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தலதா மாளிகையில் நவாஸ் ஷரிப்! Top News
[Wednesday 2016-01-06 19:00]

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் தலதா மாளிகை தியவடன நிலமே பிரதிப் நிலங்க தேல பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு செய்தார்.


விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரத் திட்டமாம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்
[Wednesday 2016-01-06 19:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி கொண்டு வர முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்-


யுவதியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற இளைஞருக்கு அபராதம் செலுத்த உத்தரவு!
[Wednesday 2016-01-06 19:00]

யுவதி ஒருவரின் புகைப்படத்தை நிர்வாணமாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி பணம் கோரிய இளைஞனுக்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.


கைதடிப் பாலத்தில் தமிழ் இராணுவச் சிப்பாய் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயம்!
[Wednesday 2016-01-06 19:00]

கைதடி, கோப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்தில் வைத்து தமிழ் இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைதடி பாலத்தில் வைத்து இடைமறித்த இனந்தெரியாத குழுவினர் அவரை கொட்டன்களால் தாங்கியுள்ளனர்.


வதைமுகாம் அல்லவாம், மருத்துவ ஆய்வுகூடமாம்! - இராணுவப் பேச்சாளர்
[Wednesday 2016-01-06 19:00]

வலிகாமம் வடக்கில்,இராணுவ முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ ஆய்வுக் கூடத்தையே சித்திரவதை முகாம் என சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார். 'மருத்துவ ஆய்வு கூடத்தை விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே கூரையில் முட்கம்பிகளை அமைத்தோம். தற்போது, மக்கள் அந்த இடத்தில் மீளக்குடியேறியதையடுத்து, அந்த கம்பிகளை அகற்றி, வீட்டைச் சுத்தப்படுத்தியுள்ளோம்' என்றார்.


கிழக்கில் அடைமழை- மூன்று மாவட்டங்களிலும் வெள்ளம்! Top News
[Wednesday 2016-01-06 19:00]

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல் இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 58.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.


மன்னாரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு! Top News
[Wednesday 2016-01-06 19:00]

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்துக்கு முன்னால் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை மன்னார் பொலிஸார், இன்று காலை மீட்டனர். மன்னார், சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடீஸ்வரன்(வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறது இலங்கை!
[Wednesday 2016-01-06 07:00]

எட்டு ஜே.எப்-17 போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் இலங்கை விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.


சிவா பசுபதி குறித்து சந்தேகம் கிளப்பும் சிங்கள ஊடகம்!
[Wednesday 2016-01-06 07:00]

முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதி இலங்கைக்கு மேற்கொண்டள்ள பயணம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் தெரிவித்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிவா பசுபதி விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் என்றும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.


இவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதி 10 வீதத்தினால் அதிகரிப்பு!
[Wednesday 2016-01-06 07:00]

கடந்த ஆண்டு நடந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு கூடுதலாக 10 வீத மாணவர்களை உள்ளீர்க்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வாவின் தகவல்படி. உயர்தரத்தில் மேலதிகமாக தொழில்நுட்ப பாடநெறியும் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இராணுவத்தைக் காட்டிக் கொடுத்த மேஜர் ஜெனரலுக்கு மீண்டும் பதவியாம்!
[Wednesday 2016-01-06 07:00]

இராணுவத்தை காட்டிக் கொடுத்த இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு மீளவும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அமெரிக்க சட்டநிபுணர் ஒருவருக்கு சத்தியக் கடதாசி வழங்கிய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரே மீளவும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார். இந்த இராணுவ மேஜர் ஜெனரலை கடந்த அரசாங்கம் பணி நீக்கியிருந்தது. அரசியல்வாதி ஒருவரின் உறவினரான இந்த மேஜர் ஜெனரல் மற்றும் அவரது குடும்பத்திற்கு பிரிட்டன் அரசியல் தஞ்சம் வழங்கியிருந்தது.


அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை! - பிரதமர் ரணில் தகவல்
[Wednesday 2016-01-06 07:00]

எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


புதிய அரசியலமைப்பு தனிஈழத்தை உருவாக்கும்! - என்கிறது பொது பலசேனா
[Wednesday 2016-01-06 07:00]

புதிய அரசியல் அமைப்பு தனிஈழத்தை அமைக்கும் அடிப்படையில் அமையும் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,


போரின்போதும், ஐநாவிலும் பாகிஸ்தான் அளித்த உதவியை மறக்க முடியாது! - மைத்திரி
[Wednesday 2016-01-06 07:00]

எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனான பாகிஸ்தானுடனான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா