Untitled Document
May 15, 2024 [GMT]
உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தனித்தே போட்டி! - தினேஸ் திட்டவட்டம்
[Tuesday 2016-01-12 07:00]

உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி நிச்சயமாக போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். மறைந்த அரசியல்வாதியும் தொழிற்சங்கத் தலைவருமான பிலிப் குணவர்தனவின் 115ம் சிறார்த்த தின நிகழ்வுகளில் நேற்று பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையில் சுதந்திரக் கட்சி 9 திருத்தங்களை முன்வைப்பு!
[Tuesday 2016-01-12 07:00]

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 9 திருத்தங்களை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்த சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்பட்டது.


4200 கோடி ரூபா பெறுமதியான உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக் கல்லை இலங்கையில் இருந்து கடத்த முயற்சி!
[Tuesday 2016-01-12 07:00]

உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இரகசியமான முறையில் குறித்த இரத்தினக் கல்லை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியை முறியடிக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இரத்தினக்கல் அதிகாரசபையின் தலைவர் அசாங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபை ஆளும்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் - அவைத்தலைவர், அமைச்சர்கள் புறக்கணிப்பு?
[Monday 2016-01-11 18:00]

வட மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் 4 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. வடமாகாண சபை அமர்வுக்கு முன்னதாக நடைபெறும் குழுக்கூட்டம் வடமாகாண சபையில் இன்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.


போர் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்! - இந்தியாவின் கருத்துக்கு இலங்கை பதிலடி
[Monday 2016-01-11 18:00]

போர் சூழ்நிலை இல்லாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. பாதுகாப்பு தந்திரோபாயம் குறித்து சிறிதளவு அறிந்தவர்களாலும் இதனை விளங்கிக் கொள்ளமுடியும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிடமிருந்து தாக்குதல்கள் விமானங்களை இலங்கைகொள்வனவு செய்ய முயல்வது குறித்து இந்தியா தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அதிபர் இடமாற்றத்தைக் கண்டித்து வவுனியா பாடசாலை மாணவர்கள் போராட்டம்! Top News
[Monday 2016-01-11 18:00]

வவுனியா கன்னாட்டி கணேசபுரம் அ.த.க.பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும் பெற்றோர் மற்றும் மாணவர்களால் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வவுனியா, கன்னாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாடசாலை முன்றலில் காலை இரண்டு மணிநேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடுக்குமாறு நீதிவான் உத்தரவு!
[Monday 2016-01-11 18:00]

குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்தி வரும் விசாரணைகளுக்கு இராணுவம் தடையேற்படுத்துமாயின் இராணுவ தளபதிக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் 185 வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யுமாறு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். பிரகீத் எக்நேலியகொட காணாமல் போனமை சம்பந்தமான அடிப்படை வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.


விக்டோரியா மாகாண சபாநாயகருடன் சம்பந்தன் சந்திப்பு! Top News
[Monday 2016-01-11 18:00]

இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண நாடாளுமன்றின் சபாநாயகர் டெல்மோ லங்குலரிற்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது அரசியல் கைதிகள் விவகாரம், மீள்குடியேற்றம், இனப்பிரச்சனை, அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.


சாட்டி கடலில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்!
[Monday 2016-01-11 18:00]

வேலணை- சாட்டி கடலுக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் வாகனம் ஒன்றில் சாட்டி கடற்கரைக்கு சென்று அங்கு கடலில் குளித்தனர். இதில் யாழ்ப்பாணம், நான்காம் குறுக்கு வீதியைச்சோந்த ஜோன் பொஸ்கோ ஸ்ரீதரன் (வயது 44) என்பவர் கடலில் மூழ்கியுள்ளார். இதனை கூட நின்றவர்கள் எவரும் கவனிக்காத நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


யாழ். தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் குருதிப் பெருக்கால் மரணம்!
[Monday 2016-01-11 18:00]

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்க நேற்று மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின்போது அதிக குருதிப்பெருக்கு ஏற்பட்டு பெண் ஒருவர் மரணமானார். திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான வெற்றிவேலு இலட்சுமி (வயது 54) என்பவரே அதிக குருதிப்பெருக்கு காரணமாக மரணம் அடைந்தவராவார்.


வெலிமடையில் பதற்றம் - விசேட அதிரடிப்படை குவிப்பு! Top News
[Monday 2016-01-11 18:00]

பண்டாரவளை, வெலிமடை பிரதான வீதி, டயரபாவிலுள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது, பொது மக்கள் நேற்று மாலை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து விசேட அதிரடி படையினர் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தாம் குற்றவாளிகள் இல்லை என்கின்றனர் வித்தியா கொலை சந்தேகநபர்கள்!
[Monday 2016-01-11 18:00]

நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறினர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


மணற்கொள்ளையைக் கட்டுப்படுத்தக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்! Top News
[Monday 2016-01-11 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் கொள்ளையை கட்டுப்படுத்துமாறு கோரியும் லொறி உரிமையாளர்களுக்கு மணல் ஏற்றுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள லொறி உரிமையாளர்கள் மட்டக்களப்பு அரசடியில் தமது லொறிகளை நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஒருவரை மட்டும் விடுவித்து ஏமாற்றுகிறது நல்லாட்சி அரசு! - சிவாஜிலிங்கம் விசனம்
[Monday 2016-01-11 17:00]

நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவரை மாத்திரம் விடுவித்து விட்டு மற்றவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மாணவனின் தாக்குதலில் அதிபர் காயம்! - முடிவெட்டச் சொன்னதால் வந்த வினை
[Monday 2016-01-11 17:00]

மாணவனின் தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலை உதவி அதிபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுப்பகுதியில் தாக்குதல்களுக்கு இலக்கான, அவர், காலி காராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவி அதிபர் மீதே அந்த மாணவன், விக்கெட்டினால் தாக்கியுள்ளார்.


பசு வழிபாடு - திருக்கோயில்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
[Monday 2016-01-11 12:00]

சைவ சமயத்தவர்களாகிய நாம் பசுக்களை வழிபடுகிறோம். நாளாந்தம் வழிபடுகிறோம். எனினும் தைப்பொங்கலுக்கு அடுத்த நாளான பட்டிப் பொங்கல் நாளே சிறப்பாகப் பசுக்களின் திரு நாள். சைவ சமயத்தவருக்கு மட்டுமான விழா நாள், திரு நாள். திருக்கோயில்களில் ஆண்டுக்கு ஒரு நாளில் அடியார்கள் சார்பில் பசுக்களை வழிபட்டு, போற்றி, வாழ்த்தும் வழமை ஈழத்தில் இல்லை. திருக்கோயில்களில் நமதில்லப் பசுக்களை அழைத்துச் சென்று பூசை செய்வோம். போற்றுவோம், வழிபடுவோம். ஒரே நாளில் அனைத்துத் திருக்கோயில்களிலும் பசுக்களை வழிபடுவோம்,. பட்டிப் பொங்கல் நாளான தை, 2 (16.01.2016) சனிக்கிழமை நண்பகல் பசுக்களை நீராட்டுவோம். நீறிடுவோம். சந்தணப் பொட்டிடுவோம். குங்குமம் அணிவிப்போம். பசுக்களின் கழுத்தில் பூமாலை சூட்டித் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்வோம். தூபம், தீபம் காட்டுவோம். மலர் தூவுவோம். தெய்வமாக எண்ணி வழிபடுவோம். திருக்கோயிலில் கஞ்சியும் பழங்களும் கொடுப்போம்.


இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றங்கள் அறிவிப்பு!
[Monday 2016-01-11 07:00]

இராணுவ உயர் பதவிகளில் கடந்த 9ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிழக்கு, வன்னி, முல்லைத்தீவு கட்டளைத் தளபதிகளுக்கான பதவிகள் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச் செயலாளராக கடமையாற்றி வந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


மங்களவின் விமர்சனத்தால் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் விசனம்! - நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை புறக்கணிப்பு
[Monday 2016-01-11 07:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை பகிஸ்கரிக்கத் தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விமர்சனம் செய்த காரணத்தினால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஒரு வாக்கையேனும் அளிக்காதவர்கள் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்கின்றனர் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.


இனிமேலும் தமிழ், முஸ்லிம்களைப் புறக்கணிக்க முடியாது! - சம்பிக்க ரணவக்க
[Monday 2016-01-11 07:00]

தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் வகையில் இனியும் செயற்பட முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் இனவாத அடிப்படையிலேயே அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகார ரீதியிலும் பெரும்பான்மை சிறுபான்மை என்ற அடிப்படையிலேயே முன்னைய ஆட்சியாளர்கள் நடந்துகொண்டனர்.


வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விசேட நிதியம்!
[Monday 2016-01-11 07:00]

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட நிதியமொன்றை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதி களை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரை யாடுகை யிலேயே பிரதமர் மேற்கண்ட வாறு கூறினார்.


கைதான புலனாய்வு அதிகாரிகளுக்கு இராணுவம் உதவவில்லையாம்! - உறவினர்கள் விசனம்
[Monday 2016-01-11 07:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் கைதான இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு இராணுவத்தின் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை என உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இராணுவத்தினரும் உதவிகளை வழங்காத காரணத்தினால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


புதிய நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வருகிறது வித்தியா கொலை வழக்கு!
[Monday 2016-01-11 07:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுதுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.


மற்றைய தமிழ்க் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சிவராஜா ஜெனிபன்
[Monday 2016-01-11 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போல, மற்றைய தமிழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருவதாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய சிவராஜா ஜெனிபன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தக் காலப்பகுதியில், அவரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஜெனிபனுக்கு, ஜனாதிபதி தான் பதவியேற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.


புலிகளை விடுவித்து இராணுவத்தை தண்டிப்பதே அரசின் நோக்கம்! - என்கிறார் மகிந்த
[Monday 2016-01-11 07:00]

விடுதலை புலிகளை விடுதலை செய்வதும் எமது இராணுவத்தை தண்டிப்பதுமே இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தேவை. அதற்கு ஜனாதிபதியும் சிறந்த எடுத்துக்காட்டு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் உறுப்பினர் சிவராஜா திலீபனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மரணதண்டனையை ரத்துச் செய்ய முடியாது - அடம்பிடிக்கிறார் நீதியமைச்சர்!
[Monday 2016-01-11 07:00]

மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே நாட்டின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட முடியாது. சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது. மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை மீறப்பட்டுள்ளது! - அனுரகுமார திசநாயக்க
[Monday 2016-01-11 07:00]

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டபோதே ஜே.வி.பியின் தலைவர் இதனைக் கூறினார்.


தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 42ஆவது நினைவு நாள் - யாழ்ப்பாணத்தில் அஞ்சலி! Top News
[Sunday 2016-01-10 19:00]

தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 42 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் முற்ற வெளியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது.


காணாமற்போன உறவுகளுக்கு மரணச்சான்றிதழ் பெற 48 பேர் மட்டுமே விண்ணப்பம்!
[Sunday 2016-01-10 19:00]

காணாமல்போன தமது உறவுகளுக்காக கடந்த ஆண்டில் 48 பேர் மாத்திரமே இறப்புப் பத்திரத்தை கோரி பதிவு செய்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் காணாமல்போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா