Untitled Document
June 26, 2024 [GMT]
சுன்னாகம் பகுதி கிணறுகளின் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல! - அமைச்சர் ஹக்கீம் அறிவிப்பு
[Wednesday 2016-01-27 19:00]

சுன்னாகத்தை அண்டிய பகுதிகளிலுள்ள நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சுன்னாகம் குடி நீர் தொடர்பிலான பிரச்சனை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளமையானது கவலையளிக்கின்றது.


போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டுப் பங்களிப்பை நிராகரிக்க முடியாது! - என்கிறார் ரணில்
[Wednesday 2016-01-27 19:00]

யுத்தக் குற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டு பங்களிப்பினை முற்று முழுதாக நிராகரிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


போரின் போது யுத்த சூனிய வலயமே இருக்கவில்லையாம்! - புதுக்குண்டு போடுகிறார் பரணகம
[Wednesday 2016-01-27 19:00]

இறுதிக் கட்ட போரில் 40,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறும் கற்பனைக் கதைகளே என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டதில்,40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு கிடையாது என தெரியவந்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்த சூன்ய வலயமென்று ஒன்று இருக்கவில்லை. யுத்த சூன்ய வலயமொன்றை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் இணங்கவில்லை.


பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் யாழ்.செயலகத்தில் முக்கிய கூட்டம்! - மீள்குடியமர்வு குறித்து ஆராய்வு Top News
[Wednesday 2016-01-27 19:00]

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி தலைமையில், முப்படை தளபதிகள் மற்றும் மாவட்டச் செயலர் மற்றும் பிரதேச செயலருடன் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலய மீள்குடியேற்றம் தொடர்பான எந்தவொரு விடயமும் பேசப்படவில்லை என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


தமிழ் மாணவர்கள் ஒன்றாரியோ சட்டமன்றத்தைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடு: Top News
[Wednesday 2016-01-27 19:00]

இந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஒன்றாரியோ சட்டமன்றத்தில் சபை அமர்வு இடம்பெறும் மண்டபம் மற்றும் அதன மண்டபங்கள் போன்றவற்றைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் ஒன்றை ஒன்றாரியோக் கண்சவேட்டிவ் கட்சி செய்துள்ளது. இதில் 11ம் வகுப்பிலும் அதற்கு மேலான கல்வியை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கற்போரும் இதில் பங்குபற்றலாம் எனவும் இதன் மூலம் அவர்கள் சட்ட மன்றம் பற்றிய அறிவைப் பெறுவதோடு கல்லூரி, பாடசாலை விடுமுறையான கோடைகால மாணாக்கர்களிற்கான வேலைவாய்ப்புக்கள் பெறுவதற்கான அறிவையும் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! - திடீர் சுகவீனமாம்
[Wednesday 2016-01-27 19:00]

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் சுகயீனமுற்றிருந்த அவர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல் நீடிப்பு! Top News
[Wednesday 2016-01-27 19:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட நான்கு பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். இந்த நான்கு பேரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியபோதே, நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


யாழ். பல்கலைக்கழகத்தில் விகாரை தேவையாம்! - சிங்கள மாணவர்கள் சுவரொட்டி Top News
[Wednesday 2016-01-27 19:00]

யாழ்.பல்கலைக்கழக முன்றலில், விகாரை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌத்த மாணவர் ஒன்றியம், இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளது. யுத்தகாலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் தமிழ் மாணவர்களே படித்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து, தற்போது, குறிப்பிடத்தக்களவு சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.


கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு! - நாயைக் குளிப்பாட்டச் சென்றவரும் நீரில் மூழ்கி மரணம்.
[Wednesday 2016-01-27 19:00]

படகில் இருந்து தவறி கடலுக்குள் வீழ்ந்த மீனவரின் சடலம், இன்று கரையொதுங்கியதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். குருநகரைச் சேர்ந்த றொபேர்ட் அல்பன் (வயது 38) என்ற மீனவரே சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மீனவர், நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற போது, படகிலிருந்து தவறி கடலுக்குள் வீழ்ந்தார். மற்றைய மீனவர்கள் இவரைக் கடலில் தேடியபோதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று சடலம் கரையொதுங்கியது.


யாழ்ப்பாணத்தில் யுவதியை வெள்ளை வானில் கடத்தப் போவதாக எச்சரித்தவர்கள் கைது!
[Wednesday 2016-01-27 19:00]

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில் யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை,யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினர்.


வடக்கில் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்! - சனல் 4 பணிப்பாளர்
[Wednesday 2016-01-27 07:00]

வடக்கில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஜோன் ஸ்னோ வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


ஆழஊடுருவும் அணி பற்றிய தகவல்கள் ஐ.நாவுக்கு வழங்கப்படாது! - ஜனாதிபதி உறுதி
[Wednesday 2016-01-27 07:00]

ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர் காலத்தில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் கோரியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.


சித்தார்த்தனும் ஸ்கொட்லாந்து செல்கிறார்!
[Wednesday 2016-01-27 07:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ள நிலையில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் இன்றைய தினம் அங்கு செல்லவுள்ளார்.ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பயணமாகியுள்ள நிலையில், அவருடன் இணைந்து கொள்வதற்காகவே சுமந்திரனும் சித்தார்த்தனும் அங்கு செல்லவுள்ளனர்.


மேலும் பல வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் கொழும்பு வருகின்றன!
[Wednesday 2016-01-27 07:00]

கடந்த ஆறுமாத காலத்தில் வெளிநாடுகளின் 25 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. இலங்கை வரலாற்றில் இவ்வாறான போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிடிருப்பது இதுவே முதற்தடவையாகும் என்று கடற்படை அறிவித்துள்ளது.


அக்கரைப்பற்று பகுதியில் வைத்து கொல்லப்பட்டாரா எக்னெலிகொட? - தொலைபேசி பதிவுகளால் சந்தேகம்
[Wednesday 2016-01-27 07:00]

ராஜகிரியவில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அக்கரைப்பற்று பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரகீத் கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இது தொடர்பான முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர்.


ஒருசிலரின் தவறுகளுக்காக முழு இராணுவமும் அவமானப்பட முடியாது! - ஜனாதிபதி
[Wednesday 2016-01-27 07:00]

ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக முழு இராணுவமும் அவமானப்பட வேண்டியதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றமற்றவர்கள் குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது. இராணுவத்தின் மீது ஐந்து குற்றச்சாட்டுக்களை சர்வதேச சமூகம் சுமத்தியுள்ளது. இலங்கைப் படையினருக்கு அவமரியாதை ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட முடியாது.


போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவரா? - தினேஸ் குணவர்த்தன கேள்வி
[Wednesday 2016-01-27 07:00]

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் நிலைப்பாடு குறித்த இலங்கை அரசாங்கம் உறுதியான ஒரு பதிலை வழங்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.


பூநகரி விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்!
[Wednesday 2016-01-27 07:00]

பூநகரி -முழங்காவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஆறு பிள்ளைகளின் தாய் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார். சாவகச்சேரி கட்டுக்காணியைச் சேந்தவரான வசந்தகுமார் திருவதனா (வயது 39) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.


வெலிக்கடைச் சிறையில் கம்பி எண்ணுகிறார் ஞானசார தேரர்! - இரண்டு நாட்களில் வெளிவருவாராம்.
[Wednesday 2016-01-27 07:00]

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது. நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


முறைகேடாக கடற்படையில் சேர்க்கப்பட்ட யோஷிதவின் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு 2 கோடி ரூபா செலவு!
[Wednesday 2016-01-27 07:00]

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, வெளிநாடுகளில் பெற்ற பயிற்சிகளுக்காக அரசாங்கம், 220 இலட்சம் ரூபாயைச் செலவழித்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான நேரத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு பதிலளித்தார்.


அதிகாரப் பகிர்வு யோசனை தயாரிக்க வடக்கு மாகாணசபையும் விசேட குழுவை உருவாக்கியது!
[Tuesday 2016-01-26 20:00]

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை தயாரிக்க வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.


ஞானசார தேரருக்கு விளக்கமறியல்! - ஹோமகம நீதிமன்றம் முன் பிக்குகள் போராட்டம் Top News
[Tuesday 2016-01-26 19:00]

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஞானசார தேரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


ஊடகவியலாளர்கள் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்! Top News
[Tuesday 2016-01-26 19:00]

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் மற்றும் ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டமை போன்ற விடயங்களில் விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


யாழ் மருத்துவபீடத்தில் வவுனியா மாணவி சாதனை: - எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டார்
[Tuesday 2016-01-26 19:00]

யாழ் பல்கலைகழகத்தில் 20.01.2016 நடைபெற்ற 31ஆவது பட்டமளிப்பு விழாவில் வவுனியாவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவியான செல்வி தணிகை சிவகுமார் (திருமதி.தணிகை சசிகாந்) சிறப்பு வைத்திமானி பட்டத்தை பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஐந்து துறைசார் தங்க பதங்கங்களை பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்ததை தண்டிக்கொண்ட தமிழ் மாணவர் என்ற பெருமையையும் தனதாக்கி யாழ் பல்கலைகழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். குழந்தை மருத்துவம், மகப்பேற்று மருத்துவம், பொது மருத்துவம், மருத்துவ சிகிச்சை போன்ற துறைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்று ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதுடன் மேலதிகமாக இரண்டு நினைவு பரிசில்களையும் வென்றுள்ளார்.


தமிழில் பேச முடியாமைக்கு மன்னிப்புக் கோரினார் சந்திரிகா! Top News
[Tuesday 2016-01-26 19:00]

தனக்கு தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனமை வருத்தமளிப்பதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.


மக்களின் ஆணையை தட்டிக்கழிக்க முடியாது! - சுமந்திரன்
[Tuesday 2016-01-26 19:00]

பிற்போக்கு சக்திகளுக்கு இடம்கொடுத்து, நல்லதொரு செயல்முறைக்கு முன்வைத்த காலை அரசாங்கம் பின்வைக்கக் கூடாது, அதனை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்துவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசுதின விழா! Top News
[Tuesday 2016-01-26 19:00]

இந்தியாவின் 67 ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இந்திய துணைத் தூதுவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இந்திய தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் உரை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் மதகுருமார்கள், கல்விமான்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


சர்வதேச சமூகத்தின் தொடரும் முண்டுகொடுப்புக்களே சிங்களத்தின் உறுதி மீறல்களுக்கு காரணம்! - அனைத்துலக ஈழத்தமிழர் மாக்களவை!!
[Tuesday 2016-01-26 19:00]

ஒப்பந்தங்களை கிழித்தெறிவதும்

Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா