Untitled Document
June 26, 2024 [GMT]
இலங்கைக்குத் தொடர்ந்து உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!
[Saturday 2016-01-23 08:00]

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் உரிமைகள் தொடர்பில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் நாக்கோஆ சுவிட்ஸர்லாந்து டேவோவில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் தாம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் தேவைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மூன்றாவது பிள்ளை பெற்றுக் கொள்ளும் படையினருக்கான வெகுமதியை நிறுத்தியது அரசு!
[Saturday 2016-01-23 08:00]

மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் படைவீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த கொடுப்பனவை வழங்கியிருந்தது. எனினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி வருவோருக்கு பிறக்கும் மூன்றாவது பிள்ளைக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.


யாழ்ப்பாண இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[Saturday 2016-01-23 08:00]

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்கப் பொலிஸார் தெரிவித்தனர்.


கொண்டு செல்ல பணம் இல்லாததால் யாழ். வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் காத்திருந்த சடலம்!
[Saturday 2016-01-23 08:00]

குடும்ப வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சூசைராசா (வயது 56) என்பவரின் சடலமே வீட்டின் வறுமைச் சூழ்நிலையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக் கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.


போர் பற்றிய புலனாய்வு இரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கையில்!
[Saturday 2016-01-23 08:00]

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் போர் இரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரின் இரகசியங்கள் மற்றும் ஆழ ஊடுருவித் தாக்கும் படைப் பிரிவு, விசேட படையணிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் தகவல்களைப் பெற்றுக் கொள்ள ஹூசெயன் முயற்சித்துள்ளார். வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைத்திருந்த கடிதம் ஒன்றின் ஊடாக ஹூசெய்ன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். எனினும், வன்னிப் போர் தொடர்பிலான அனைத்து புலனாய்வுத் தகவல்கள் மதிப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள ஹூசெய்ன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.


ஊழல் செய்தவர்களைத் தண்டிப்பதில் தாமதம்! - சம்பிக்கவும் விசனம்
[Saturday 2016-01-23 08:00]

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு காலதாமதமாவது அதிருப்தியை அளிப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களை தண்டிப்பதில் தற்போதைய அரசாங்கம் தெளிவான காலதாமதத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த காரணத்தினால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை புதிய அரசாங்கம் தண்டிக்கும் என்ற மக்கள் எதிர்பார்ப்பு சிதைந்துள்ளது.


கூட்டு எதிர்க்கட்சியை சிதைக்க இரகசிய சதியாம்! - கம்மன்பில கூறுகிறார்
[Saturday 2016-01-23 08:00]

கூட்டு எதிர்க்கட்சியை சிதைப்பதற்கு இரகசிய சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு நெருக்கமான தரப்புக்கள் இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சியை சிதைக்க முயற்சிக்கின்றன. கூட்டு எதிர்க்கட்சியினால் உருவாக்கப்பட உள்ள அரசியல் முன்னணியின் தலைவர் யார் என்பதனை இன்னமும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைமைத்துவ குழு தீர்மானிக்கவில்லை. புதிய அரசியல் முன்னணியின் தலைமை பதவி தொடர்பில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாக பிரச்சாரம் செய்து அதன் ஊடாக கூட்டு எதிர்க்கட்சியை சிதைக்க சிலர் முட்டாள்தனமாக முயற்சிக்கின்றனர்.


யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரைச் சந்தித்தார் கவிப்பேரரசு வைரமுத்து! Top News
[Friday 2016-01-22 20:00]

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனை கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்துப் பேசினார். இன்று மாலை 7 மணியளவில், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கவுள்ளார்.


முதலமைச்சரைச் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கக் கோரி யாழ். நகரில் இளைஞர் உண்ணாவிரதம்! Top News
[Friday 2016-01-22 19:00]

வடமாகாண முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட விடுங்கள், என கோரி இளைஞர் ஒருவர், யாழ்.நகரில் தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினார். வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞனே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தார்.


வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்! Top News
[Friday 2016-01-22 19:00]

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா வன்னி-இன் விந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இந்த கூட்டம் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேலும் பலர் கலந்து கொண்டனர்.


கொழும்பு வந்த இந்திய விமானந்தாங்கிக் கப்பலை பார்வையிட்ட அமைச்சர்கள், படை அதிகாரிகள்! Top News
[Friday 2016-01-22 19:00]

கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள இந்தியக் கடற்படையின்


நல்லாட்சியின் நரித்தனங்கள் !!
[Friday 2016-01-22 19:00]

சிறிலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை 'நல்லாட்சி' என பிரகடனப்படுத்திய சிங்கள தேசத்தின் புதிய ஆட்சியாளர்கள், அதன் ஓராண்டு நிறைவினை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். நல்லாட்சியின் நாயகனாக சிறிலங்காவின் அரசுத் தலைவர் மைத்திரி சித்திரிக்கப்படுகின்றார். ஆட்ட நாயகனாக ரணில் விக்கரமசிங்கே இருக்கின்றார். போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தனது பிரசன்னத்தினை உறுதிப்படுத்த இனநல்லிணக்கம், பொறுப்புகூறல் என்ற பெயர்களில் ஜெனீவாவில் களத்தினை திறந்த மேற்குலகம், கொழும்பு நோக்கி படையெடுத்தது ஜெனீவாக் களமுனையின் இறுக்கம், அனைத்துலக அரங்கில் இருந்து சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுகின்ற நிலை தோன்ற விழித்துக் கொண்டது சிங்கள அரசு.


மன்னாரில் ஓடு பிரித்து இறங்கிய கொள்ளையர்களின் தாக்குதலில் மூவர் படுகாயம்! - பணம், நகைகள் திருட்டு Top News
[Friday 2016-01-22 19:00]

மன்னார்- எழுத்தூரில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு ஒன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கி விட்டு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


முள்ளியவளை உழவர் விழாவில் பங்கேற்கிறார் கவிஞர் வைரமுத்து!
[Friday 2016-01-22 19:00]

முல்லைத்தீவில் நடக்கவுள்ள வடமாகாண விவசாய அமைச்சு நடத்தும் உழவர் விழாவில் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்கவுள்ளார். வட மாகாண அமைச்சின் ஏற்பாட்டில் நாளை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது. இந்தத நிகழ்வில் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். உழவர்களை கௌரப்படுத்தும் இவ்விழாவில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.


சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த யாழ். பொலிசாருக்கு பிரித்தானியா உதவி!
[Friday 2016-01-22 19:00]

யாழ்ப்பாண பொலிசாருக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த யாழ்ப்பாண பொலிசாருக்கு பிரித்தானியா, ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த உதவிகள் வழங்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.


கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கும் நிர்வாகம் Top News
[Friday 2016-01-22 19:00]

கிளிநொச்சி அறிவியல் நகா் பகுதியில் அமைந்துள்ள வானவில் (மாஸ்) ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியா்கள் இன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய ஆளணி முகாமையாளா் ஒருவர் காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிா்ப்புத் தொிவித்தே தாங்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக ஊழியா்கள் தொிவித்துள்ளனா்.


ஜனாதிபதி பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது!
[Friday 2016-01-22 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக் கொண்டிருந்த வாகனம் பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்துச் சம்பவத்தினால் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐ.நா அதிகாரிகளுடன் விக்னேஸ்வரன் கலந்துரையாடல்! Top News
[Friday 2016-01-22 18:00]

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி லயோரி விசேபேர்க் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினர். வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், வடமாகாண மக்களின் பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கை புலம்பெயர் தமிழர்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.


யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களின் கல்வீச்சில் பெண் காயம்!
[Friday 2016-01-22 18:00]

யாழ்.போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் அந்தப் பெண் தலையில் படுகாயமடைந்தார். வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர்.


சாவகச்சேரியில் 11 பேரைக் கடித்துக் குதறிய வெறிநாய்!
[Friday 2016-01-22 18:00]

சாவகச்சேரி சிவன் கோவில் பிரதேசத்தில் 11 பேரை கடித்த விசர் நாய், இன்று இறந்துவிட்டது. இந்த விசர் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 11 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேரையும் கடித்த நாய், இன்று காலையில் இறந்துவிட்டதையடுத்து, அங்கு சென்ற தென்மராட்சிப் பிரதேச கால்நடை வைத்தியதிகாரி க.இரகுநாதன், நாயின் தலையை வெட்டி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளார். வீடொன்றில் வளர்க்கப்பட்ட இந்த நாய் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேரையே கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளியேன்! - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்
[Friday 2016-01-22 07:00]

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய சம்பந்தன் தலைமையில் உழைப்போம்! - விக்னேஸ்வரன் Top News
[Friday 2016-01-22 07:00]

அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்து செயற்படுவோம். எல்லோருமாக சேர்ந்து மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய தலைவர் சம்பந்தன் தலைமையில் உழைப்போம் என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.


பேரவை உள்ளி்ட்ட அனைத்து தரப்புகளினதும் கருத்துகளை பெற்றே தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும்! - கூட்டமைப்பு முடிவு Top News
[Friday 2016-01-22 07:00]

தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியல் தீர்வுத் திட்டம் தயா ரிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.


காணாமற்போனோர் தொடர்பான ரணிலின் அறிவிப்பு குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்புவோம்! - சம்பந்தன்
[Friday 2016-01-22 07:00]

காணாமல் போனோர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து அந்த பிரச்சினைக்கான தீர்வாகாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக காணாமற்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடப்பட்ட போது, கருத்து வெளியிட்ட பெண் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய கருத்தினால் மிகவும் மனவேதனையடைந்துள்ளதாகவும் அவருடைய பேச்சு குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் கேட்டார்.


ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
[Friday 2016-01-22 07:00]

ஐ. நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை முழுமையாக அமூல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை வரவேற்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய குழு தெரிவித்துள்ளது.


தமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி! - சுவிஸ் பேட்டியில் ரணில்
[Friday 2016-01-22 07:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து தலைநகர் டாவோஸ் நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உள்ளூர், வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசினார்.


முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார் ஹசன் அலி?
[Friday 2016-01-22 07:00]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹாபிஸ் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை நியமிக்க கட்சித் தலைமை எடுத்த தீர்மானத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


அரசியலுக்கு வரத் தயார்! - கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு
[Friday 2016-01-22 07:00]

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா