Untitled Document
September 19, 2024 [GMT]


அமைதி நடவடிக்கை பலனளித்தால் மட்டுமே அடுத்தகட்டத்திற்கு செல்வோம்: சிரியா போராளிக்குழு தலைவர் அறிவிப்பு
[Friday 2016-02-12 17:00]

உள்நாட்டுப் போரால் கடந்த ஐந்தாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நேற்றுகூடி ஆலோசனை நடத்தினர்.சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒருவாரத்துக்குள் வெள்ளை கொடி ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மனித கடத்தல் தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
[Thursday 2024-09-19 18:00]

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களுக்கு மக்கள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக அந்நாட்டு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரித்துள்ளது. இந்த ஆள் கடத்தல்கள் தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களை குறிவைத்து நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுவிஸில் யாழ் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம்!
[Thursday 2024-09-19 18:00]

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலாந்தில் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த இலங்கை இளம் குடும்பஸ்தர் அவர் வசித்து வந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 34 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்த நிலையில் இரு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீனாவில் நாயால் கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்!
[Thursday 2024-09-19 18:00]

சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியை பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கரு கலைந்துள்ளது. கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக யான் என்ற பெண் வேதனை அடைந்துள்ளார்.


முடிவுக்கு வரும் 75 ஆண்டுகால பயணம்: திவாலான அமெரிக்க நிறுவனம்!
[Thursday 2024-09-19 18:00]

அமெரிக்காவில் 1946ம் ஆண்டு துவங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம், திவாலானதன் காரணமாக தனது 75 ஆண்டுகால பயணத்தை முடிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான டப்பர்வேர், காற்று புகாத சமையல் பாத்திரங்கள், டிஃபன் பாக்ஸ்கள் தயாரிப்பதன் மூலம் பெரும் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பே உயர்ந்த இடத்தில் உள்ளது.


லெபனான் நாட்டை உலுக்கியுள்ள இரண்டாம் அலை வெடிப்பு!
[Thursday 2024-09-19 06:00]

லெபனான் நாட்டில் நேற்று நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதன் தொடர்ச்சியாக கையடக்க ரேடியோ வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. லெபனான் நாட்டின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்திய பேஜர்கள் நாட்டின் பல பகுதிகளில் வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் இந்த வெடிப்பு சம்பவத்தில் சிறுமி உட்பட 8 பேர் வரை உயிரிழந்ததுடன், 3000 பேர் வரை படுகாயமடைந்தாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட தாய், மகன்!
[Thursday 2024-09-19 06:00]

பிரித்தானியாவில் தாயுடன் சேர்த்து 9 வயது சிறுவனும் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கார்ன்வாலில் தாயுடன் உயிரிழந்த ஒன்பது வயது சிறுவனின் குடும்பம், அவரை "சேட்டைக்காரன்" என்று விவரித்துள்ளது. டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் செப்டம்பர் 7 அன்று 31 வயதான டாஸ்மின் பேட்டர்சன்(Tasmin Paterson) மற்றும் அவரது மகன் ஹட்சன் பேட்டர்சன்(Hudson Paterson) ஆகியோரின் உயிரிழப்பை உறுதிப்படுத்தினர்.


காரில் மறைத்து வைக்கப்பட்ட வெடி மருந்து: டிரம்ப் மீது மீண்டும் வைக்கப்பட்ட குறி!
[Thursday 2024-09-19 06:00]

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது தொடர் தாக்குதல் குறி வைக்கப்படுவதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதிக்கான போட்டியில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது இரு தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கொலை முயற்சி துப்பாக்கி சூடு தாக்குதல் நாட்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை!
[Wednesday 2024-09-18 17:00]

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன.


உலகளவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்!
[Wednesday 2024-09-18 17:00]

சீனாவின் யுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு பின் அது உலக அளவில் பரவியதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறான ஒரு நிலையில் எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கான சலுகை!
[Wednesday 2024-09-18 17:00]

கனடாவில் அடகு கடன் தொடர்பான சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மத்திய அரசாங்கம் இது தொடர்பான சட்ட திருத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு கொள்வனவு செய்வதனை இலகுவாக்கும் வகையில் இந்த புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.


லெபனானில் பேஜர்கள் வெடித்தில் வெளியான புதிய தகவல்!
[Wednesday 2024-09-18 17:00]

லெபனானில் பேஜர்கள் வெடித்தில் 9 பேர் பலியானதுடன் 3000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவத்தில்ன் பின்னனியில் இஸ்ரேல் இருப்பது அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.


உச்சம் தொட்ட வறட்சி: 200 யானைகளை அழிக்க திட்டம்!
[Wednesday 2024-09-18 07:00]

தீவிர வறட்சி காரணமாக 200 யானைகளை அழிக்க ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது. நான்கு தசாப்தங்களில் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள ஜிம்பாப்வே, தனது மக்களுக்கு உணவு வழங்க உதவுவதற்காக 200 யானைகளை அழிக்க திட்டமிட்டுள்ளது. ஜிம்பாப்வேவின் இந்த முடிவு, அண்டை நாடான நமீபியா தீவிர வறட்சியின் காரணமாக 83 யானைகள் உள்பட 160 வனவிலங்கு பிராணிகளை அழிக்க இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து வெளிவந்துள்ளது.


பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு அச்சுறுத்தல்: 11 வயது புளோரிடா சிறுவன் கைது!
[Wednesday 2024-09-18 07:00]

புளோரிடாவில் பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்திய சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் இரண்டு உள்ளூர் பள்ளிகளில் கூட்டு துப்பாக்கி சூடு நடத்துவதாக அச்சுறுத்தியதற்காக 11 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


லெபனானில் நிலைகுலைந்த ஹிஸ்புல்லாஹ்: பேஜர்கள் வெடித்ததில் 8 பலி!
[Wednesday 2024-09-18 07:00]

லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு பயன்படுத்திய பேஜர்கள் வெடித்ததில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். லெபனான் நாட்டின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்து இருப்பதுடன், பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு போராளிகள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


நாட்டு மக்களுக்கு புடின் விடுத்த வேண்டுகோளால் எழுந்த பெரும் சர்ச்சை!
[Tuesday 2024-09-17 18:00]

ரஷ்யா நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த நாட்டு மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


பாரிஸில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரம்!
[Tuesday 2024-09-17 18:00]

பாரிஸில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக இடம்பெற காரணமாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார பணிகள் நாளை (18-09-2024) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ”Merci” எனும் ஒற்றை வார்த்தையுடன் கூடிய பதாகைகள், சுவரொட்டிகளை நாளை முதல் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கும்.


டிரம்ப்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த நபர்!
[Tuesday 2024-09-17 18:00]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் காத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.


அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல்!
[Tuesday 2024-09-17 18:00]

அமெரிக்காவில் இந்துகோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் மெல்வில்லே பகுதியில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இக்கோவில், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2-வது மிகப்பெரிய கோவில் என சிறப்பை பெற்றுள்ளது.


வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: பயணிகளின் கடைசி வார்த்தைகள் இதுதான்!
[Tuesday 2024-09-17 06:00]

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்தவர்களின் “கடைசி வார்த்தைகள்” குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான பொது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் நோக்கமாக, இந்த விபத்து குறித்த விவரங்களை ஆராய்ந்து, இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆகும்.


விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த விமான பணிப்பெண்!
[Tuesday 2024-09-17 06:00]

விமானத்தில் ஏறும் போது 3 குழந்தைகளுக்கு தாயான விமான பணிப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இத்தாலியின் Reggio Calabria விமான நிலையத்தில் சனிக்கிழமை மதியம் விமானத்தில் ஏற சென்ற விமானப் பணிப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான 57 வயது கேப்ரியல்லா கரியோ(Gabriella Cario) ITA ஏர்வேஸ் விமான சேவைக்கு பிறகு Sabaudia-வுக்கு வீடு திரும்பி கொண்டிருந்தார்.


பொதுமக்களை வேகமாக வெளியேற்றும் ரஷ்யா!
[Tuesday 2024-09-17 06:00]

உக்ரைனிய படைகளுடன் நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமங்களை ரஷ்யா வெளியேற்றி வருகிறது. உக்ரைனிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் சில கிராமங்களை ரஷ்யா வெளியேற்ற தொடங்கி இருப்பதாக உள்ளூர் மேயர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது, குர்ஸ்க் பகுதியில் உக்ரைனிய படைகளின் திடீர் தாக்குதல் தொடங்கிய 6 வாரங்களுக்கு பிறகு வந்துள்ளது.


ஒரே நாளில் 1000 தடவை அழைப்பு: காதலனை தொல்லை செய்த பெண்ணுக்கு சிறை!
[Monday 2024-09-16 18:00]

பிரித்தானியாவில், முன்னாள் காதலனுக்கு ஒரே நாளில் 1000 தடவை அழைப்பெடுத்து தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபி கால்வில் [Sophie என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.


பைடன், கமலா ஹாரிஸை படுகொலை செய்ய யாரும் முயற்சி செய்யவில்லை: எலான் மாஸ்க்!
[Monday 2024-09-16 18:00]

ஜோபைடனையோ அல்லது கமலா ஹாரிஸையோ கொலை செய்ய யாரும் முயற்சி கூட செய்யவில்லை என அலான் மாஸ் தெரிவித்துள்ளமை சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மைதானத்தை ஒட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது.


டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன் ஆதரவாளர்?
[Monday 2024-09-16 18:00]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன் ஆதரவு செயற்பட்டாளர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயான் வெஸ்லே ரூத் என்ற 58வயது நபரே, டிரம்பினை கொல்வதற்கு திட்டமிட்டார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


கட்டார் மன்னர் கனடா விஜயம்!
[Monday 2024-09-16 18:00]

கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இந்த வாரம் கடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இரண்டு நாள் பயணமாக அவர் கடாவிற்கு வருகை தருவார் என என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தனது முதல் அதிகாரப்பூர்வ கனடா விஜயத்தின் போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க உள்ளார்.


லண்டனில் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்!
[Monday 2024-09-16 06:00]

கிழக்கு லண்டன் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு லண்டனில் நிகழ்ந்த கத்திக்குத்து கொலை சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயது மதிப்புள்ள பெண் ஒருவர், டவர் ஹாம்லெட்ஸில்(Tower Hamlets), டக்கெட் தெருவில்(Duckett Street) உள்ள வீட்டில், ஞாயிறு காலை 1:17 மணிக்கு கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.


அமெரிக்காவில் 63 வயது ஆணின் பிறப்புறுப்பில் வளர்ந்த எலும்பு!
[Monday 2024-09-16 06:00]

அமெரிக்காவில் முழங்கால் வலியால் சிகிச்சை பெற வந்த 63 வயதான மனிதருக்கு அதிர்ச்சியளிக்கும் நோயறிதல் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 63 வயதான மனிதர் ஒருவர் முழங்கால் வலியால் சிகிச்சை பெற வந்த போது அதிர்ச்சியளிக்கும் விதமாக பெனிலின் ஓசிஃபிகேஷன்(penile ossification) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தார்.


அணு ஆயுதம் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்!
[Monday 2024-09-16 06:00]

அணு ஆயுத காலத்தின் தொடக்கத்தில் அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஏலத்தில் $3.9 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1939 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(Albert Einstein) எழுதிய கடிதம், அண்மையில் நடந்த கிறிஸ்டியின்ஏலத்தில்(Christie's auction) அதிர்ச்சியூட்டும் விதமாக $3.9 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா