Untitled Document
July 8, 2024 [GMT]


ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளை களமிறக்கும் புடின்?
[Wednesday 2024-07-03 06:00]

கிம் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனை தாக்குவதற்கு ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களை நிலைநிறுத்த விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியப் போரில் அதன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பியாங்யாங் தனது சொந்த நிலத்தடி போர்க் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. கிம் இல்-சுங் தனது இராணுவத்தை உருவாக்க உத்தரவிட்டிருந்தார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் நீண்டு கொண்டிருக்கும் அந்த சுரங்கங்கள் 1970யில் கண்டுபிடிக்கப்பட்டது.


பிரித்தானியாவில் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும்: புதிய அரசு அறிவிப்பு!
[Monday 2024-07-08 18:00]

பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள லேபர் அரசு, உடனடி நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது. அவ்வகையில், பிரித்தானியாவில் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என, புதிதாக பதவியேற்றுள்ள சேன்ஸலர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய சேன்ஸலராக பதவியேற்றுள்ள ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves), தன் கட்சியின் சுலோகமான பிரித்தானியாவை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்னும் சுலோகத்தை செயல்படுத்தும் வகையில், பிரித்தானியாவில் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி!
[Monday 2024-07-08 18:00]

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. தீவிரவலதுசாரி கட்சியானஆர்எல் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.


கனடாவில் வாடகை வீடு பெறுவதில் இப்படியொரு சிக்கலா?
[Monday 2024-07-08 18:00]

கனடாவில் பெண் ஒருவர் வளர்க்கும் நாய் காரணமாக வாடகை வீடு ஒன்றை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சேவைகளை வழங்கி வரும் நாயை, பல வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க மறுப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.


மருத்துவம் பார்க்க வசதி இல்லை: குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை!
[Monday 2024-07-08 18:00]

பாகிஸ்தானில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் பிறந்து 15 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தந்தை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வாழ்ந்து வந்த தாயாப் என்ற நபரின் மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.


கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு முக்கிய பொறுப்பு!
[Monday 2024-07-08 06:00]

பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை பதவியேற்கிறார். இதனிடையே, அவரது கேபினட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவரை அமைச்சராக நியமித்துள்ளார். அவரது புதிய பிரித்தானிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர் லிசா நேண்டி (Lisa Nandy) இடம்பிடித்துள்ளார். மேலும், கெய்ர் ஸ்டார்மர் அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார்.


இளம் வயதினர் இனி இணையத்தில் அதை பார்வையிட முடியாது: அமுலுக்கு வரும் கடவுச்சீட்டு!
[Monday 2024-07-08 06:00]

இளம் வயதினர் இணையத்தில் ஆபாசப் படங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஸ்பெயின் நாடு புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. குறித்த செயலி அல்லது கடவுச்சீட்டால் இனி ஆபாசப் படங்களை அணுகுவோரின் வயதை உறுதி செய்யலாம் என்பதுடன், அவர்கள் செலவிடும் நேரத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்றே கூறப்படுகிறது.


தென் கொரியாவில் கிம்ச்சி சாப்பிட்ட 1000 பேருக்கு உடல்நல பாதிப்பு: எச்சரிக்கை விடுத்த அரசு!
[Monday 2024-07-08 06:00]

தென் கொரியாவில் நோரோ வைரஸ் கிருமி தாக்கியதில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவின் நம்வோன் நகரில், நோரோ வைரஸ் கிருமி தாக்கிய kimchi சாப்பிட்டதால் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது. வெள்ளிக்கிழமை வரை கிட்டத்தட்ட 1000 வழக்குகள் உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


உக்ரைனில் ரஷ்ய கண்ணிவெடிகளை அகற்ற களமிறங்கும் ஆசிய நாடு!
[Sunday 2024-07-07 17:00]

உக்ரைன் மற்றும் பிற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பொருட்டு கம்போடியாவுடன் இணைந்து தங்கள் நாடு செயல்படும் என்று ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் Yoko Kamikawa சனிக்கிழமை Phnom Penh விஜயத்தின் போது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். கம்போடியாவில் சுமார் மூன்று தசாப்தகால சண்டையின் போது மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன.


கனடியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
[Sunday 2024-07-07 17:00]

கனடியர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. Desjardins என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சுவிற்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்!
[Sunday 2024-07-07 17:00]

சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, சுவிஸ் பெடரல் அரசு, மாகாணங்கள், சுவிஸ் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் இணைந்து புதிய புகலிட யுக்தி ஒன்றை உருவாக்கி வருதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை தொடர்பில் எச்சரிக்கை!
[Sunday 2024-07-07 17:00]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வெப்ப அலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு இடங்களில் இவ்வாறு வெப்ப அலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கனடாவின் மிகப்பாரிய குழந்தைகள் துஷ்பிரயோக வழக்கு: ரூ.2314 கோடி இழப்பீடு!
[Sunday 2024-07-07 08:00]

கனடாவின் மிகப்பாரிய குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டலில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை இழப்பீடு அறிவித்துள்ளது. கிழக்கு கனடாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான நூற்றுக்கணக்கானவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை 104 மில்லியன் கனேடிய டொலர்களை ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.2314 கோடி) வழங்கும் என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல்: இஸ்ரேலிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கேட்கும் ஹமாஸ்!
[Sunday 2024-07-07 08:00]

காசாவில் போர்நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனால் இஸ்ரேல் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் தனது முக்கிய கோரிக்கையை கைவிட்டு, காஸாவில் கட்டம் கட்டமாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கான அமெரிக்காவின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பேச்சுவார்த்தைக் குழுவில் அங்கம் வகிக்கும் அதிகாரி சனிக்கிழமை இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளியினர்: 29 பேர் எம்.பி.களாக வெற்றிபெற்று சாதனை!
[Sunday 2024-07-07 08:00]

இந்த முறை பிரித்தானிய பொதுத்தேர்தல் இந்திய வம்சாவளியினருக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஏனெனில், இம்முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 பேர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாகியுள்ளனர். இதில், தொழிலாளர் கட்சி அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அதன் எண்ணிக்கை 19 ஆகும். இதில் 12 பேர் முதல் முறையாக எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, 6 பெண்கள் உட்பட சீக்கிய சமூகத்திலிருந்து 12 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.


நேட்டோ நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
[Saturday 2024-07-06 16:00]

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த 2022-ல் அந்த நாடு மீது போர் தொடுத்தது.


பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நாள்: விவாதத்துக்குரிய திட்டம் ரத்து!
[Saturday 2024-07-06 16:00]

பிரித்தானியாவின் பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றதன் முதல் நாள், ரிஷி சுனக் நிறைவேற்றத் துடித்த, செலவு அதிகம் கொண்ட திட்டம் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மிக மோசமான திட்டத்திற்கு அதிகம் செலவு செய்வதை அப்போதே எதிர்த்து வந்துள்ள கெய்ர் ஸ்டார்மர், அந்த தொகையை ஆட்கடத்தல் குழுக்களை ஒழிக்க பயன்படுத்த இருப்பதாகவும், அதனால் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவில் நுழைவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.


"சமூக நீதிக்காக குரல் கொடுப்பேன்" – உமா குமரன்!
[Saturday 2024-07-06 16:00]

சமூக நீதிக்காக குரல் கொடுப்பேன் என பிரித்தானியாவின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றி தொடர்பில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… தொலைக்காட்சியை தெரிவு செய்தமைக்கும் எனக்கு வாக்களித்தமைக்கும் நன்றி பாராட்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.


கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 தங்கக்கட்டிகள் தொடர்பில் பொலிசார் கூறும் தகவல்!
[Saturday 2024-07-06 16:00]

கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது தெற்காசிய நாடுகளுக்கோ கடத்தப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.


அமைச்சரவையை அமைத்த கெய்ர் ஸ்டார்மர்: முதல் பெண் நிதியமைச்சர் நியமனம்!
[Saturday 2024-07-06 08:00]

ஜூலை 5, வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் அதிகார மாற்றம் ஏற்பட்டது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சியிடம் தேர்தலில் தோல்வியடைந்தது. சில மணி நேரம் கழித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் நாட்டின் 58வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.


ரிஷி சுனக் மாமனாரின் வார்த்தைகளை கடைப்பிடிக்கவில்லை: பரவும் மீம்ஸ்!
[Saturday 2024-07-06 08:00]

ரிஷி சுனக் அவரது மாமனார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வார்த்தைகளைக் கடைபிடிக்காததால் தான் தேர்தலில் தோல்வியடைந்ததாக மீம்ஸ்கள் பரவிவருகின்றன. பிரித்தானிய பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் பழமைவாதக் கட்சி படுதோல்வி அடைந்தது. ரிஷி சுனக், தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys) இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது தெரிந்ததே.


பொது நிகழ்ச்சியில் மார்பகங்களைக் காட்டிய நார்வே அமைச்சர்: பிரதமர் பாராட்டு!
[Saturday 2024-07-06 08:00]

பொது நிகழ்ச்சியில் சட்டையை தூக்கி மார்பகங்களைக் காட்டிய பெண் அமைச்சரை அந்நாட்டு பிரதமர் பாராட்டியுள்ளார். நார்வே நாட்டைச் சேர்ந்த லுப்னா ஜாஃபரி (Lubna Jaffery) என்ற 40 வயது பெண், அந்நாட்டின் கலாச்சார மற்றும் பாலின சமத்துவ அமைச்சராக உள்ளார். இந்நிலையில் நேற்று நார்வேயில் ஒஸ்லோ (Oslo Pride) என்ற பெயரில் பெருமைப்படுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து பாலினத்தவர்களும் கலந்து கொண்டனர்.


பிரிட்டன் தேர்தலில் சாதனைபடைத்த ஈழத் தமிழ் பெண்!
[Friday 2024-07-05 18:00]

பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் (Uma Kumaran) வெற்றிபெற்றுள்ளார். அதன்படி தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமாகுமரன் (Uma Kumaran) , லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் (Uma Kumaran) தனதாக்கிகொண்டுள்ளார்.


அரசு அமைக்க அழைப்பு விடுத்த மன்னர்: முறைப்படி பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்!
[Friday 2024-07-05 18:00]

மகத்தான வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ள லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர், முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார். 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனிப்பெரும்பான்மை பெற 326 இருக்கைகள் போதும் என்னும் நிலையில், 412 இருக்கைகளுடனும், 9.6 மில்லியன் வாக்குகளுடனும், தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது லேபர் கட்சி.


பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றால்...? - ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம்!
[Friday 2024-07-05 18:00]

பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த விடயம் ஜேர்மனிக்கு அச்சத்தை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் முதல் சுற்றுத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், அக்கட்சி வெற்றி பெறுமானால், அந்த வெற்றி பிரான்சுடனான உறவை பாதிக்கலாம் என்ற அச்சம் ஜேர்மனிக்கு அச்சம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வரலாற்றை புரட்டிப்போட்ட பிரிட்டன் பொதுத் தேர்தல்!
[Friday 2024-07-05 18:00]

2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார். 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உத்தரவாதம் இல்லை!
[Friday 2024-07-05 06:00]

கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த ஆண்டு பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மாற்றங்கள் கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர வதிவிடம் (Permanent Residency) கிடைப்பது உத்தரவாதம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கனடாவில் வேலை செய்வதற்கும், பட்டப்படிப்புக்குப் பிறகு நாட்டில் நிரந்தரமாக குடியேறுவதற்கும் பல வழிகள் இருந்தாலும், கனடாவின் சட்டதிட்டங்களும் அதில் கொண்டுவரப்படும் மாற்றங்களும் அதனை எளிதாக பேர் அனுமதிப்பதில்லை.


பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட செல்லப்பிராணிகள்!
[Friday 2024-07-05 06:00]

பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது. ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர். ஆனால், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், வாக்காளர்கள் இந்த நாய்களை வாக்குச்சாவடிகளுக்கு வெளியே கட்டி வைத்தனர்.


காற்று மற்றும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மாவு!
[Friday 2024-07-05 06:00]

உலகில் அதிகரித்து வரும் உணவுப் பற்றாக்குறைக்கு, ஃபின்லாந்தைச் சேர்ந்த சோலார் ஃபுட்ஸ் (Solar Foods) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய தீர்வைக் கண்டறிந்துள்ளது. இந்நிறுவனம் சோலீன் (Solein) என்ற புரதப் பொடியை (Protein Powder) தயாரித்துள்ளது. இந்த பொடியை மனிதர்கள் உட்கொள்ளலாம் என்று நிறுவனம் கூறுகிறது.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா