Untitled Document
June 26, 2024 [GMT]
அமெரிக்க நிறுவனத்தின் ராக்கெட் கீழே விழுந்து நொறுங்கியது!
[Monday 2016-01-18 16:00]

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் 'ஜேசன் 3' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது. சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எந்திரங்கள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை தனியாருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வந்தன.இந்நிலையில், அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தின் கேப் கனவெரல் விமானப்படை நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து 23 பிரிவுகளை கொண்ட ஒன்பது நிலைகளில் இயங்கும் "ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9" ராக்கெட் கடந்த மாதம் புறப்பட்டு சென்றது. அதில் தகவல்தொழில்நுட்பம் தொடர்பான 11 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தன.


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கர்கள் கடத்தப்பட்டதனை உறுதிப்படுத்திய அமெரிக்கா!
[Monday 2016-01-18 10:00]

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சில அமெரிக்கர்கள் கடத்தப்பட்டுள்ளதாக பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.கடத்தப்பட்டவர்களை கண்டறிதல் மற்றும் மீட்பதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஈராக்கிய அரசுக்கு வழங்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத அறிக்கையில், பாக்தாத்தின் தெற்கு பகுதியில் மூன்று அமெரிக்கர்கள் மற்றும் ஈராக்கின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்வெளியில் பூத்த ஜின்னியா மலர்: - ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நாசா விஞ்ஞானி
[Sunday 2016-01-17 21:00]

விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலர் குறித்த படத்தை நாசா விஞ்ஞானி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.பூமியிலிருந்து 250 மைல் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இங்கு மலர்கள் வளர்ப்பிற்கான சோதனையை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிக்கிரமாக சோதனை செய்தது.இந்நிலையில் அங்கு பூத்துள்ள ஜின்னியா என்ற மலரின் புகைப்படத்தை விஞ்ஞானி ஸ்காட் கெல்லி ட்விட் செய்துள்ளார்.


ஈரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
[Sunday 2016-01-17 19:00]

ஈரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளது, தமது நாட்டுக்கும் இதர உலகத்துக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது என அதிபர் ஹஸன் ரௌஹானி கூறியுள்ளார். சர்வதேச அணுசகதி கண்கணிப்பு அமைப்பு, ஈரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, அது தொடர்பில் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. இதன் பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தின் உரையாற்றியபோதே அதிபர் ரௌஹானி இதைத் தெரிவித்தார்.


சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பெண்கள்,சிறுமிகள் உட்பட 400 பேர் கடத்தல்!
[Sunday 2016-01-17 19:00]

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை இன்று கடத்திச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் நேற்று பீரங்கி வாகனங்களுடன் வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும், வாள்களால் தலைகளை வெட்டித் துண்டித்தும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், சிரியா ராணுவப்படை மற்றும் அதிபரின் ஆதரவாளர் படைகளை சேர்ந்த சுமார் 300 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததாகவும் முன்னர் செய்தி வெளியானது.


ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: - 11 பேர் பலி
[Sunday 2016-01-17 14:00]

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் இன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது 10 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆயினும் அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.


அமெரிக்காவில் உள்ள வளைகுடா நீரோடையில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கடல் ஆமைகள்!
[Sunday 2016-01-17 14:00]

அமெரிக்காவில் வட கரோலினாவின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள வளைகுடா நீரோடையில் 130 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.வட கரோலினா முழுவதும் காலநிலை மாற்றத்தால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த கடல் ஆமைகளை மீட்கும் பணியை வட கரோலினாவின் வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்திருந்தது.குறித்த பகுதியில் நிலவிய அதிக குளிர் காரணமாக, நூற்றுக்கணக்கான பச்சைக் கடல் ஆமைகள், கடற்கரையில் மிந்தவாறும் கரையோரத்தில் ஒதுங்கிய நிலையிலும் காணப்பட்டிருந்தன.இதனையடுத்து குறித்த ஆமைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கடற்கரையிலிருந்து கரை நோக்கி சுமார் 15


கிறிஸ்தவ போதகர் உள்ளிட்ட நான்கு அமெரிக்க கைதிகளை விடுவித்த ஈரான்!
[Sunday 2016-01-17 13:00]

வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் செய்தியாளர் , கிறிஸ்தவ போதகர் மற்றும் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் உள்ளிட்ட நான்கு அமெரிக்க கைதிகளை நேற்று ஈரான் விடுதலை செய்துள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.நேற்று ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நேற்று அறிவித்திருந்தன.இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ஈரான் செய்தியாளர் ஜேசன் ரெசெய்ன், இடாஹோவின் போதகரான சயித் அபெடினி, மிக்சிகன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் அமீர் ஹெக்மரி மற்றும் நுஷ்ரத்துல்லாஹ் கோஸ்ரவி ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மலேசியாவின் பல மாநிலங்களில் இஸ்லாமிய அரசுக் கொடியை பறக்கவிட்டவர் கைது! -
[Sunday 2016-01-17 09:00]

தம்மால் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர், தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக மலேசிய போலிஸார் கூறியுள்ளனர். தலைநகர் கோலாலம்பூரில் ஒரு வணிக மையத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த நபர் ஒரு மலேசிய பிரஜையாவார்.அவரது வீட்டில் கத்தியும், இஸ்லாமிய அரசின் ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்ட்தாகவும், மலேசியாவின் பல மாநிலங்களில் அவர் இஸ்லாமிய அரசுக் கொடியை பறக்கவிட்டிருக்கிறார் என்றும் போலிஸார் கூறுகின்றனர்.


அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு தேசிய அறிவியல் பதக்கம்: - ஒபாமா வழங்குகிறார்
[Sunday 2016-01-17 09:00]

அமெரிக்க நாட்டில் அறிவியல், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு, அந்த நாட்டு அரசு தேசிய பதக்கம் வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு தேசிய பதக்க பட்டியலில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில், ஒருவர், அமெரிக்காவில் வசித்து வரும், டாக்டர் ராகேஷ் கே ஜெயின். இவர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர். இவர் அறிவியல் துறையில் சாதனை படைத்ததற்காக அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


புர்கினா ஃபாசோவில் ஹோட்டல் மீது தாக்குதல்: - 23 பேர் பலி
[Sunday 2016-01-17 09:00]

புர்கினா ஃபாசோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஒரு ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தியவர்களில் இரண்டு பெண்கள் உட்பட நாலவர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிபர் கிறிஸ்டியன் கபோர் கூறுகிறார். இதையடுத்து தலைநகர் ஔகடௌகுவிலுள்ள ஹோட்டல் ஸ்பெளிண்டிட் மீதான முற்றுகைத் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலில் 18 நாடுகளின் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேற்கத்திய நாட்டு மக்களிடம் பிரபலமான அந்த ஹோட்டலில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 26 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.முடிந்த அளவுக்கு ஆட்களை சுட்டுக் கொன்ற பிறகு, அந்தத் தீவிரவாதிகள் ஹோட்டலுக்கு தீ வைத்தனர் என, உயிர் தப்பியவர்கள் கூறுகின்றனர்.


சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 135 பேர் ஒரேநாளில் பலி
[Sunday 2016-01-17 09:00]

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 135 பேர் உயிரிழந்தனர்.கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் பீரங்கி வாகனங்களுடன் வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 85 பேரும், சிரியா ராணுவப்படை மற்றும் அதிபரின் ஆதரவாளர் படைகளை சேர்ந்த 50 பேரும் என 135 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த கோரக்காட்சியை நேரில் பார்த்த சிலர் பலி எண்ணிக்கை இருநூறை எட்டியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.


ஜெனிவா நகரில் UBS வங்கியில் நள்ளிரவில் பாரிய கொள்ளை! - 4 நாட்களாக தேடுதல்
[Saturday 2016-01-16 09:00]

சுவிஸின் ஜெனிவா நகரில் UBS என்ற வங்கி இயங்கி வருகிறது. இதே பகுதியில் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வீடும் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அந்த ஊழியரையும் அவரது மனைவியையும் சிறை பிடித்துள்ளனர். பின்னர், அருகில் இருந்த வங்கிக்கு வந்த கொள்ளையர்கள் மில்லியன் கணக்கில் பிராங்குகளை மூட்டை கட்டி அள்ளிச்சென்றுள்ளனர். இந்த தகவல் நேற்று காலை 8 மணியளவில் வெளியானதை தொடர்ந்து, அந்நகர பொலிசார் வங்கியின் முன்னால் திரண்டு விசாரணையை மேற்கொண்டனர்.


இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு உதவத் தயார்: - பான் கி மூன் அறிவிப்பு
[Saturday 2016-01-16 09:00]

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உதவத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜரிக் கூறும்போது, "இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் பான் கி மூன் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறார். பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க, தேவையான அறிவுரைகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்" என்றார்.


கூகுளின் கனேடிய பொறியியல் தலைமையகத்தில் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ விஜயம் மேற்கொண்டார்!
[Saturday 2016-01-16 08:00]

கூகுளின் புதிய கனேடிய பொறியியல் தலைமையகம் மற்றும் வாட்டலூ பல்கலைக்கழத்திற்கு கடந்த வியாழக்கிழமை கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ விஜயம் மேற்கொண்டார். அங்கு கூகுள் பணியாளர்களை நேரில் சந்தித்து கைகுலுக்கிய ஜஸ்ரின் ரூடோ நீர் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட முதலீடு குறித்து அறிவித்தார். இதன்போது உரையாற்றிய பிரதமர் , நாம் தற்போது வட்டலூ பல்கலைக்கழகத்தில் இருக்கின்றோம். இந்த பல்கலைக்கழகமானது கண்டுபிடிப்புக்களின் முக்கிய மையமாக காணப்படுகின்றது. தெற்கு ஒன்ராறியோ நீர் கூட்டமைப்புக்கு 12 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்


சோமாலியாவின் தெற்கில் ஆப்பிரிக்க ஒன்றிய படைத்தளத்தை அல் சபாப் அமைப்பு கைப்பற்றியது!
[Saturday 2016-01-16 08:00]

கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. சோமாலியாவில் சேவைக்காக அனுப்பப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றிய கென்ய படையினர் பலரது சடலங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்ததை தாம் பார்த்ததாக எல் அட்டே நகர வாசிகள் கூறியுள்ளனர்.


சர்
[Friday 2016-01-15 23:00]

சர்


ஹவாய் தீவில் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்!
[Friday 2016-01-15 21:00]

ஹவாய் தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு பேர் இருந்தனர்.பயிற்சியில் ஈடுபட்ட இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இந்த விபத்து காரணமாக அதில் இருந்த 12 பேர் நிலைமை என்ன என்று தெரியவில்லை.


பிரான்சில் புதிய மருந்து கண்டுபிடிப்பு பரிசோதனை: - ஒருவர் உயிரிழப்பு 5 பேர் கவலைக்கிடம்
[Friday 2016-01-15 21:00]

பிரான்சில் மருத்துவ பரிசோதனையில் பெரிய அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. பரிசோதனையில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஐந்து பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில்


அமெரிக்க டாலரில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரிக்கை!
[Friday 2016-01-15 19:00]

அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக நாட்டின் பண தாள்களில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்கார்மெண்டோ பகுதியில் வசிக்கும் மருத்துவம் மற்றும் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் மைக்கேல் நியூடௌ உள்ளிட்ட பலர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்க டாலர் பணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாக்கியம் கடந்க 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத சுதந்திர சட்டத்துக்கு எதிராக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


துருக்கியில் குர்தி மக்கள் மீதான ராணுவ தாக்குதலை கண்டித்து பிரகடனம் செய்த 12 பேராசிரியர்கள் கைது!
[Friday 2016-01-15 19:00]

துருக்கியில் குர்தி மக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் மத்தியில் பிரகடனம் செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குர்து மொழி பேசும் மக்கள் பெரும்பாலும் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இருப்பினும் இந்த நாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கிய குர்திஸ்தான் என்ற தனி நாடு கோரி சில கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். துருக்கி நாட்டில் உள்ள போராட்டக் குழுவினர் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், குர்தி மக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் மத்தியில் பிரகடனம் செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கி போலீசார் தெரிவித்துள்ளனர்.


ஜப்பான் நாட்டின் நகானோ பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து: - 14 பேர் பலி
[Friday 2016-01-15 12:00]

ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நகானோ பகுதியில் பேருந்து ஒன்று சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாயினர்.ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள யமனோச்சி நகரில் உள்ள பனிச்சறுக்கு போட்டிகள் நடைபெறும் பிரபல ஸ்கிரிசார்ட்டிற்கு 41 சுற்றுலாபயணிகள் ஒரு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற பஸ் நகானோ மலைப்பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளானது.


தீவிரவாதி மசூத் அசார் பாதுகாப்பு காவலில் இருப்பதை உறுதி செய்த பாக். அமைச்சர்!
[Friday 2016-01-15 12:00]

பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தலைவர் மவுலானா மசூத் அசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில் இது உறுதி செய்யப்படவில்லை, பாதுகாப்பு காரணங்களுக்காக இது பகிரங்கப்படுத்தப்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இந்நிலையில், மசூத் அசார் தடுப்புக்காவலில் இருப்பதாகக் கூறிய பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ராணா சனனுல்லா அவரை கைது செய்யவில்லை என்பதை உறுதி செய்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராணா,


சிங்கப்பூரில் திருட்டில் ஈடுபட்ட இந்தியருக்கு 7 ஆண்டு சிறை - 12 கசை அடி!
[Friday 2016-01-15 12:00]

சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையாக கைது செய்யப்பட்ட இந்தியர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்ததோடு, 12 கசை அடி வழங்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.சிங்கப்பூரைச் சேர்ந்தவர் அலி யூசுப் சாய்பூ (35). வெளிநாட்டு பணத்தை மாற்றி தரும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒரு கார் நிறுத்தத்தில், தனது இரண்டு வயது மகனுடன் இருந்தார்.அப்போது அங்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவிச்சந்திர சாகரன் (28), தட்சிணாமூர்த்தி பெருமாள் (29), அண்ணாதுரை ராமன் (43) மற்றும் 4 பேர் சேர்ந்து, அலியின் காரை உடைத்து, அவரை தாக்கியதோடு, காரில் இருந்த 6,24,036 சிங்கப்பூர் டாலர் மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடி சென்றுவிட்டனர்.


உலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் இந்தியர்கள்: - ஐ.நா. தெரிவிப்பு
[Thursday 2016-01-14 20:00]

உலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் இந்தியர்கள்தான் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் தனி அமைப்பு நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளதாக ஐ.நா. தெரிவிக்கிறது. உலகில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கையை ஐ.நா. கணக்கெடுத்து உள்ளது. அதன் படி 2015ம் ஆண்டின் நிலவரப்படி உலக அளவில் 24 கோடியே 40 லட்சம் பேர் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இதில் இந்தியர்கள் மட்டும் கோடியே 60 லட்சம் பேர் என்றும், இப்படிப் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது என்றும், இவர்கள் படிப்பு, தொழில், வேலை வர்த்தகம் தொடர்பாக வெளிநாட்டில் புலம் பெயர்ந்துள்ளனர் என்றும் ஐ.நா. அறிவித்துள்ளது.


அமெரிக்காவில் அதிஷ்டலாப சீட்டில் நூற்று ஐம்பது கோடி டாலர்கள் மூன்று பேருக்கு கிடைத்தது!
[Thursday 2016-01-14 17:00]

அமெரிக்க வரலாற்றில் லாட்டரி சீட்டு ஒன்றில் மிகப்பெரிய முதல் பரிசு மூன்று பேருக்கு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.அமெரிக்க லாட்டரியின் பெரும் தொகை மூன்று பேருக்கு கிடைத்தது.நூற்று ஐம்பது கோடி டாலர்கள் பெறுமதியான அந்த பரிசை வென்றவர்கள் பற்றிய விபரம் தெரியவில்லை, ஆனால், அவர்கள், ஃபுளோரிடா, டென்னெஸ்ஸி, கலிபோர்னியா ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர்.அந்த சீட்டுக்கான இறுதி நாள் நெருக்க பல அமெரிக்கர்கள் சீட்டுகளை வாங்க முண்டியடித்திருந்தனர்.ஒட்டுமொத்தமாக மேலும் அதிக பணத்தை ஸ்பானிய லாட்டரி நிறுவனமான எல் கோர்டோ வழங்குகிறது, அவை வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் பகிரப்படும்.


தென்சூடானில் 14 இலட்சம் சிறுவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்பு: - ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நல நிதியம்
[Thursday 2016-01-14 16:00]

தென்சூடானில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக 14 இலட்சம் சிறுவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நல நிதியம் செய்தி வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நல நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி படையினர் கடந்த 2 ஆண்டுகளாக போரிட்டு வருகினர்.


துருக்கியில் கார் குண்டு தாக்குதல்: - 5 பேர் பலி-39 பேர் காயம்
[Thursday 2016-01-14 16:00]

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த செவ்வாய் அன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தேடுதல் வேட்டையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதுபோலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தெற்கிழக்கு பகுதியில் உள்ள சினார் நகரில் குர்திஸ் தீவிரவாதிகள் நேற்று நள்ளிரவில் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். காவல் நிலையம் மீதும், அதன் அருகில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா