Untitled Document
June 29, 2024 [GMT]
ஹாங்காங்வில் காணாமல்போன புத்தக விற்பனையாளர் சீனாவின் தடுப்புக்காவலில்!
[Sunday 2016-01-03 22:00]

சீன அரசாங்கத்தை விமர்சிக்கின்ற விதத்திலான புத்தகங்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது ஹாங்காங்கில் பல நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவர், சீனாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. ஹாங்காங் எல்லையில் உள்ள ஷென்சென் நகருக்குரிய தொலைபேசி இலக்கம் ஒன்றிலிருந்து லீ போ என்ற அந்த புத்தக விற்பனையாளர், தன்னுடன் பேசியதாக அவரது மனைவி கூறியுள்ளார். விசாரணை ஒன்றில் உதவிக்கொண்டிருப்பதாக அவர் தன்னிடம் கூறியதாகவும் லீ போ-வின் மனைவி கூறியுள்ளார். கோஸ்வே பே புக்ஸ்டோர் நிறுவனத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கடந்த இரண்டு மாதங்களில் காணாமல்போயுள்ளனர். சீன அரசாங்கத்தை விமர்சிக்கின்ற விதத்திலான புத்தகங்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்த விவகாரத்தால், ஹாங்காங்கின் சட்டரீதியான சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாக அச்சங்கள் எழுந்துள்ளன.


மதகுரு கொலை எதிரொலி: இரானிய சவுதி தூதரகத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல்
[Sunday 2016-01-03 22:00]

சவுதி அரசுக்கு எதிராக இரானில் போராட்டம் அப்படி நுழைந்த அவர்கள் தூதரக் கட்டிடத்துக்கும் தீ வைத்துள்ளனர். எனினும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியது. ஆனால் சவுதி அரேபிய ராஜ வம்சத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, அவர்களை கடுமையாக விமர்சித்ததாலேயே அவர் கொல்லப்பட்டார் என ஷேக் நிம்ரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்: - 12 பயிற்சி போலீசார் பலி!
[Sunday 2016-01-03 19:00]

ஈராக்கில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். மோசூல் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள நினெவெஹ்-வை சேர்ந்த பாதுகாப்பு படையினர் ஸ்பெய்ச்சர் ராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திக்ரிட் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். நினெவெ போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 7 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருப்பினும் தீவிரவாதிகளில் 3 பேர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 12 போலீசார் கொல்லப்பட்டனர். அதில் 3 பேர் உயர் அதிகாரிகள். நடு இரவில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 20 போலீசார் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.


ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அமெரிக்காவால் அச்சுறுத்தல்! - புடின் கவலை தெரிவிப்பு
[Sunday 2016-01-03 19:00]

தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள முக்கிய அச்சுறுத்தல்களில் அமெரிக்காவும் ஒன்று என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் பற்றிய புதிய ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கையொப்பமிட்டுள்ளார். அந்த ஆவணத்தில், உலக அளவில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ரஷ்யா தனது நிலையை உயர்த்துக்கொள்ள பார்க்கிறது. எனினும் மேற்கத்திய நாடுகளுக்கு இது எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக விவகாரங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் எதிர்தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யா மீது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் அழுத்தம் தருவதற்கு இது வழிவகுக்கும் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துபாய் தீ விபத்தில் செல்பி எடுத்த தம்பதிக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
[Sunday 2016-01-03 09:00]

துபாய் விடுதியில் நடந்த தீ விபத்தின்போது, அதன்பின்னணியில் செல்பீ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தம்பதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கோபுரம் அருகிலுள்ள 63 மாடி கொண்ட டவுன் டவன் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. பட்டாசு வெடித்ததில், ஓட்டலின் 20வது மாடியில் திடீரென தீப்பிடித்து, மற்ற மாடிகளுக்கும் பரவியது. இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில் 16 பேருக்கு காயமேற்பட்டது. இந்நிலையில், தீ விபத்து நடந்த ஓட்டலின் அருகிலுள்ள மாடியிலிருந்து ஒரு தம்பதியினர் செல்பீ எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்தனர்.


ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக்கி 17 வயது மாணவி கொலை !
[Saturday 2016-01-02 22:00]

சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சாம்ரா கேசினோவிக் என்பவர் இணைந்தார். அவர் அதில் சேர்ந்த சில மாதங்களிலேயே கொலை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி விசாரித்த போது ஆஸ்திரியா மாணவியை புதிதாக இயக்கத்தில் சேரும் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக பயன்படுத்தி வந்ததும், அங்கிருந்து தப்ப முயன்றதால் மாணவியை தீவிரவாதிகள் சுத்தியலால் தாக்கி கொன்றுவிட்டதாகவும் தெரிய வந்தது. இதேபோல் துனிசிய நாட்டுப் பெண்ணும் செக்ஸ் அடிமையாக பயன்படுத்தப்பட்டு வந்தார். அவரும் ஆஸ்திரிய மாணவியும் ஒரே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். ஆஸ்திரியா மாணவி கொலை செய்யப்பட்ட தகவலை துனிசிய பெண்தான் தப்பி வந்து வெளியிட்டதாக


சீனாவில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது!
[Saturday 2016-01-02 22:00]

சீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து மரிஜுவானா என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


சீன இராணுவத்தில் மூன்று புதிய பிரிவுகள்!
[Saturday 2016-01-02 21:00]

சீன ஆயுதப் படையில் மூன்று புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் ஆயுதப் படையை ஒருங்கிணைத்து நவீனமயப்படுத்தும் விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக மூன்று புதிய இராணுவ பிரிவுகளை அந்நாடு அமைத்துள்ளது. சீனாவின் அணு ஆயுதக்கிடங்கை கட்டுபடுத்தும் ஒரு ஏவுகணை கட்டளை பிரிவு, தந்திரோபயமாக உதவிப் படைப்பிரிவு மற்றும் புதிய இராணுவ ஜெனரல் பிரிவு ஆகியவை இந்த புதிய பிரிவுகளில் அடங்கும்.


கனடாவில் இரண்டு நாய்களினால் கடிக்கப்பட்டு கையை இழக்கும் அபாய நிலையில் வயோதிபர்!
[Saturday 2016-01-02 21:00]

கனடாவிலள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த மனிதரொருவர் அறிமுகமற்ற ஒருவரின் நாய்களினால் தனது வீட்டிற்குள்ளேயே பலமாக கடித்து தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற இச்சம்பவத்தால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு கை ஒன்றை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்மன்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 66வயதுடைய றொபின் எல்ஜி தனது இடது கையை இழக்கும் அபாய நிலையில் உள்ளார். கையில் மட்டுமன்றி இவரது கழுத்து கால்கள் மற்றும் வயிற்றிலும் நாய் கடித்துள்ளது. இவர்களது பூனையை துரத்திக் கொண்டு இரு நாய்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளன. நுழைந்த நாய்கள் பூனையை கொன்று விட்டு எல்ஜியின் மனைவி பாக்கரை தாக்கியுள்ளன. அவரையும் கடுமையாக கடித்தும் உள்ளன.


சீனா ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[Saturday 2016-01-02 16:00]

சீனாவின் வடகிழக்கு பிரதேசமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் (சற்று முன்னர்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்கடர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 580 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, பூமத்திய கோட்டின் வடக்கே 44.81 பாகையிலும், கிழக்கே 129.95 பாகையிலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் குறித்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


பிரபல சியா மதகுருவுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய சவுதி அரசு !
[Saturday 2016-01-02 16:00]

பிரபல சியா மதகுருவான நிம்ர் அல் நிம்ருக்கு சவுதி அரேபியா மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. பயங்கரவாத குற்றங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில் இவரும் அடங்குவதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சவுதி முடியாட்சியை விமர்சித்ததை அடுத்து 2012இல் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் எந்தவிதமான வன்செயல்களிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அவரது கைதை அடுத்து அந்த நாட்டின் சியா சிறுபான்மையினர் மத்தியில் போராட்டங்கள் வெடித்தன.


பாகிஸ்தானில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை!
[Saturday 2016-01-02 10:00]

பாகிஸ்தானில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரகீல் ஷெரீப் தெரிவித்துள்ளார். தீவிரவாதம், பாரட் லேன் மசூதியில் தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ் தலைமையகம் அமைந்துள்ள முல்தானில் தாக்குதல், சட்ட அமலாக்க முகமைகளின் மீது தாக்குதல், லாகூரில் மக்களை கடத்தி கொலை செய்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளனர்.


சீன நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: -அதிகாரிகள் 11 பேர் கைது!
[Saturday 2016-01-02 08:00]

சீனாவின் குவாங்டாங் மாகாணத்துக்கு உட்பட்ட ஷென்சென் நகர தொழிற் பூங்காவில் கடந்த மாதம் 20-ந் தேதி கட்டிட பணிகளுக்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த மண் குவியல் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பணியாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் உள்பட 33 கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. சுமார் 100 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்ததும் ஷென்சென் நகரின் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் தற்கொலைப் படை தாக்குதல்: - இருவர் பலி
[Saturday 2016-01-02 08:00]

ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் நேற்று தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் உள்ள லீ ஜார்டின் என்ற உணவகத்தில் புத்தாண்டு அன்று நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் தலிபான் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். இதை முறியடிக்க தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் அடிக்கடி விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே அவ்வவ்போது இருதரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


தென் ஆப்பிரிக்காவில் ஆபாசப்படம் வெளியிட்ட நண்பனின் மர்ம உறுப்பில் ஆசிட் ஊற்றிய இளம்பெண்!
[Friday 2016-01-01 18:00]

ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவின் புமலங்கா நகரைச் சேர்ந்த ஹம்ரி கோசா(25) என்ற வாலிபன் சில தினங்களுக்கு முன், தான் வழக்கமாக செல்லும் உள்ளூர் பாருக்கு சென்றிருந்தான்.


அமெரிக்க தொழிற்சாலை ஒன்றில் தொழுகையில் ஈடுபட தடை:-வெளியேறிய முஸ்லிம் பணியாளர்கள்
[Friday 2016-01-01 18:00]

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் ஒரு தொழிற்சாலையில், பணியிடத்தில் பிரார்த்தனை செய்யக்கூடாது என்றும் நோக்கில் விதிக்கப்பட்டதாக கூறப்படும் விதிகளை எதிர்த்து முஸ்லிம் பணியாளர்கள் வெளியேறியுள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் ஒரு தொழிற்சாலையில், பணியிடத்தில் பிரார்த்தனை செய்யக்கூடாது என்றும் நோக்கில் விதிக்கப்பட்டதாக கூறப்படும் விதிகளை எதிர்த்து முஸ்லிம் பணியாளர்கள் வெளியேறியுள்ளனர்.


தொடர்ந்து எரியும் துபாய் சொகுசு ஹோட்டல்!
[Friday 2016-01-01 17:00]

துபாயின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த தீ ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் தீ பரவ ஆரம்பித்து 12 மணி நேரங்கள் ஆன பின்னரும், அது அணைக்கப்படவில்லை. அங்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காணக் கூடியதாக உள்ளது என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.


தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்: - ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் உஷார் நிலையில் காவல்துறையினர்!
[Friday 2016-01-01 17:00]

ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறக் கூடும் எனும் எழுந்த அச்சத்தின் காரணமாக, நகர் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நகரின் பல இடங்களில் கூடுதல் பாதுகாப்பு. புத்தாண்டுதினக் கொண்டாட்டங்களின் போது, இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பு, பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜெர்மனியக் காவல்துறையினர் கூறுகின்றனர். நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்னர், நகரின் இரு ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கூட்டம் மிகுந்த இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.


அனைத்து குற்றங்களும் இஸ்லாமியம் என்ற பெயரால் செய்யப்படுகிறது: யாழிடி இனத்தை சேர்ந்த நாதியா முராத்
[Friday 2016-01-01 17:00]

அனைத்து குற்றங்களும் இஸ்லாமியம் என்ற பெயரால் செய்யப்படுகிறது. இஸ்லாமியம் என்ற போர்வையில், மாறு வேடமிட்ட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவள் நான் என்று ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் பாலியல் அடிமையாக சிக்கி உயிர் பிழைத்த யாழிடி இனத்தை சேர்ந்த 21 வயது பெண் நாதியா முராத் இங்கிலாந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது:- ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகள் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களில் நானும் ஒருவர். ஈராக்கில் சிஞ்ஜார் டவுனில் என்னுடைய வீட்டில் இருந்து பயங்கரவாதிகள் என்னை சிறைபிடித்தனர், பாலியல் அடிமையாக விற்பனை செய்தனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்னுடைய கிராமத்திற்குள் நுழைந்ததும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்களை கொலை செய்தனர்.


எகிப்தில் படகு கவிழ்ந்து விபத்து: - 18 பேர் பலி
[Friday 2016-01-01 13:00]

எகிப்து நாட்டின் நைல் நதியில் சென்று கொண்டிருந்த பெரிய படகு ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 18 பேர் பலியாகினர். மூழ்கிய படகில் 22 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. படகு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஊடகங்கள் நல்ல செய்திகளுக்கு அதிக இடமளிக்க வேண்டும்: - போப் பிரான்சிஸ்
[Friday 2016-01-01 09:00]

தீய வன்முறை சம்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஊடகங்கள் நல்ல செய்திகளுக்கும், ஊக்கமளிக்கும் கதைகளுக்கும் அதிக இடமளிக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் புத்தாண்டில் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாடிகன் நகரின் செயின் பீட்டர்ஸில் உள்ள தேவாலயத்தில் 10 ஆயிரம் பேர் மத்தியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். அப்போது கடந்த ஆண்டு பல்வேறு துயரங்களை அடங்கிய ஒன்றாக அமைந்ததாக கூறினார்.


அமெரிக்காவில் மூன்று மடங்கு அதிக வேகத்தில் இண்டர்நெட் சேவை வழங்கும் கூகுள்!
[Friday 2016-01-01 09:00]

அமெரிக்காவில் இண்டர்நெட் வழியாக வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகி்றது. கிட்டதட்ட 60 சதவீதம் அளவுக்கு இண்டர்நெட் டிராபிக் இதனாலேயே அங்கு ஏற்படுகிறது. 2019-ம் ஆண்டு இது 80 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இண்டர்நெட் பயன்படுத்துபவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மூன்றாண்டுகளில் அமெரிக்காவில் இண்டர்நெட் வேகம் 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.


மாணவிக்கு செக்ஸ் எஸ்.எம்.எஸ் அனுப்பிய இங்கிலாந்து எம்.பி. சஸ்பெண்ட்!
[Friday 2016-01-01 09:00]

இங்கிலாந்தை சேர்ந்த எம்.பி. சைமன் டேங்சக் (வயது 49). இவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சைமன் டேங்சக் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோச்டல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் இவரது அலுவலகத்துக்கு 17 வயது மாணவி சோப் ஹவ்லிஹான் வந்தார். தனக்கு ஏதாவது வேலை வாங்கி தரும்படி அவரிடம் கோரிக்கை விடுத்தாள். அந்த மாணவியின் கைபேசி எண்ணை வாங்கி வைத்துகொண்டு, வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த எம்.பி. அவரை அனுப்பி வைத்தார்.


சுவிஸில் தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரத்தின் விலை 9 மில்லியன் டாலர்!
[Friday 2016-01-01 08:00]

இதுவரை தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரங்களிலேய மிகவும் நுட்பமான பாகங்களைக் கொண்டு சுவிஸில் உருவாக்கப்பட்ட வாட்ச் ஒன்று கடந்த செப்டெம்பரில் விற்பனைக்காக வெளியிடப்பட்டிருந்தது. மொத்தம் 2826 பாகங்களுடனும் 57 விசேட தொழில்நுட்ப நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்ட அந்தக் கைக்கடிகாரத்தின் மணியோசை, உலக அளவில் புகழ்பெற்ற லண்டனின் பிக் பென் கோபுரத்தின் கடிகார மணியோசையை நினைவூட்டுகிறது. அதிசயிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 9 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த வாட்ச்சுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவின் நியு யார்கைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியுமே தவிர, அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.


துபாயில் உள்ள அதியுயர் கோபுரங்களில் பாரிய வெடிவிபத்து - தீயை கட்டுப்படுத்த பெரும் போராடம்: - கறுப்புநாளாக புதுவருடம் பிறந்தது Top News Top News
[Thursday 2015-12-31 23:00]

துபாய் நாட்டில் உள்ள அதியுயர் கட்டிட கோபுரங்களாக கருதப்படும் இரண்டு கோபுரங்களைில் வியாளனன்று நள்ளிரவு பாரிய வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஏற்ப்பட்ட பாரிய தீ கட்டிடங்களில் பரவியுள்ளதால் தீயணைப்பு படையினருக்கு பெரும் சவாலான போராட்டமாக மாறியுள்ளது. இவ் வெடிவிபத்து தீவிரவாத தாக்குதலாக இருக்கலாமென பல ஊடகங்கள் சந்தேகித்துவரும் நிலையில் துபாய் அரசு சார்பாக அறிவித்தல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இருந்தும் புதுவருட வானவேடிக்கைகளுக்காக பொருத்தப்பட்டிருந்த வெடிப்பொருட்களே வெடித்துள்ளதாக உள்ளுர் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. புத்தான்டு தினத்திற்கு முந்திய நள்ளிரவு வெடிப்பால் பலரும் கலலை கொண்டுள்ளனர். உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை..


இங்கிலாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் மீளக்கட்டியெழுப்ப உதவும் சிரிய அகதிகள்:
[Thursday 2015-12-31 23:00]

இங்கிலாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் மீளக்கட்டியெழுப்புவதற்கு, சிரிய அகதிகளின் குழுவொன்று, உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. வடமேற்கு இங்கிலாந்திலுள்ள றொச்டேல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு நிவாரணப் பணிகளிலேயே, சிரிய அகதிகள் ஈடுபட்டுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் உதவினர். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அகதியொருவர், வெள்ளம் பற்றிய செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்வையிட்டததாகவும், அதனைத் தொடர்ந்தே, அதில் பங்களிப்பு வழங்கத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.


நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: வான வேடிக்கையுடன் கொண்டாட்டம்!
[Thursday 2015-12-31 22:00]

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. உலகிலேயே நேரக் கணக்கின் படி, நியூசிலாந்தில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி சுமார் மணி 4.30 அளவில் நியூசிலாந்தில் ஜனவரி மாதம் 1ம் தேதி 12 மணி பிறந்துவிட்டது. இதைக் கொண்டாடும் வகையில் ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும், அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.


பல ஐரோப்பிய நகரங்களில் புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டங்களை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு!
[Thursday 2015-12-31 22:00]

பிரசல்ஸ் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு எல்லாவிதமான பொதுக் கொண்டாட்டங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பாரிஸ் நகரில் வாணவேடிக்கை கொண்டாட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. எனினும், பாரிஸின் முக்கிய கொண்டாட்ட இடமான ஷோன்ஸே லீஸே வளாகத்தில் மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாஸ்கோவில், செஞ்சதுக்கத்துக்குள் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மற்றத் தலைநகரங்களும் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாரிஸில் கடந்த மாதம் நடந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பத்தாவது சந்தேகநபர் மீதும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய அதிகாரிகள் கூறியுள்ளனர். துருக்கியின் தலைநகர் அன்காராவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா