Untitled Document
July 4, 2024 [GMT]
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி!
[Tuesday 2015-12-29 17:00]

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பாக்துன்க்வா மாகாணம் மர்தான் நகரில் தேசிய தரவுத்தள அலுவலகம் உள்ளது. இங்கு அரசுத் துறை சார்ந்த அடையாள அட்டை வேண்டி இன்று ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றான். அவனை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், தனது மோட்டார் சைக்கிளை நுழைவு வாயிலில் மோதியதுடன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் அவன் வெடிக்கச் செய்துள்ளான். அப்போது அலுவலகத்தின் கதவு, ஜன்னல்கள் நொறுங்கின. இந்த திடீர் தாக்குதலில், வாயில் அருகே நின்றிருந்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். அப்பகுதி முழுவதும் உடல்கள் சிதறிக்கிடந்தன.


ஊழல் வழக்கில் இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை!
[Tuesday 2015-12-29 17:00]

இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை அவருக்கு இன்னுமொரு நீதிமன்றத்தால் 6 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை 18 மாதங்களாக குறைத்துள்ளது. 2006 இல் பிரதமராக வருவதற்கு முன்னதாக ஜெரூசலத்தில் அவர் மேயராக இருந்தபோது நடந்ததாக கூறப்படும் வீடுமனைகளை வாங்கிவிற்கும் நடவடிக்கை ஒன்றில் நடந்த ஊழலுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 70 வயதான ஒல்மேர்ட் 2009இல் பதவி விலகினார். இஸ்ரேலின் சிறை செல்லும் முதலாவது முன்னாள் பிரதமர் இவராவார். இவர் தனது தண்டனைக் காலத்தை பெப்ரவரி 15இல் ஆரம்பிப்பார்.


பெட்ரோலிய விலை குறைவால் சவூதியின் பட்ஜெட்டில் பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு!
[Tuesday 2015-12-29 15:00]

உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. சவூதியின் புதிய மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டாலர்கள் - அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அதிகாரபூர்வ எதிர்பார்ப்பைவிட 15 சதவீதம் குறைவாகும். ஆனால், இந்த ஆண்டிற்கான செலவு 975 பில்லியன்களாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இது 13 சதவீதம் அதிகமாகும். இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்ய எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியம் ரத்துசெய்யப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோலின் விலை 50 சதவீதம் வரை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இருந்தபோதும் சர்வதேச விலைகளைவிட அது குறைவாகவே இருக்கும். டீசல், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றின் விலைகளும் உயரும்.


விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வீடுகளை இழந்த மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசு ஆதரவு!
[Tuesday 2015-12-29 15:00]

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வீடுகளை இழந்த மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசு ஆதரவு வழங்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட பகுதிகளை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மனைவி லூசியுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர், பாரிய தீ விபத்தில் உயிரிழப்புகளை தவிர்க்க போராடிய தீயணைப்பு படை வீரர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.


சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர் பகுதியில் விமானத்தாக்குதல்:
[Tuesday 2015-12-29 09:00]

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர் பகுதியில் வீழ்ந்து வெடித்த விமானக்குண்டு, அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான காணொளி தற்போது இணையத்தில் உலாவருகின்றது. நேரடியாக பதிவு செய்யப்பட்ட இந்த காணொளியில், குண்டு வீச்சையடுத்து மக்கள் பாதுகாப்பு தேடி அங்குமிங்கும் ஓடுவதையும், குண்டு வீச்சில் தீப்பிடித்த கட்டங்களின் தீயை அணைப்பதும் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் ஏழு முறை குண்டு வீழ்ந்ததாகவும், இதனால் பலர் காயமடைந்துள்ளதாகவும் டமஸ்கஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்கள் அதிகமாக இருக்கும் ஏர்பின் மற்றும் டோமா பகுதிகளில் யுத்த விமானங்கள் குண்டு வீசித்தாக்கியதாக சிரியாவில் நிலைகொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது. சிரியாவில் இடம்பெற்றுவரும் சிவில் யுத்தத்தினால், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் அவசரகால நிலை பிரகடனம்!
[Tuesday 2015-12-29 08:00]

தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் கடும் வெள்ளம் காரணமாக அவசரகால நிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. தென் அமெரிக்காவில், இந்த நூற்றாண்டில் மிகப்பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலர் தொடர்ச்சியாக தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களில் இடம்பெற்ற மோசமான வெள்ளப்பெருக்கு இதுவென ஆர்ஜென்டீனாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. வட ஆர்ஜென்டீனாவில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


எபோலா தொற்று அற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்படவுள்ள கினியா!
[Tuesday 2015-12-29 08:00]

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கினியா எபோலா தொற்று அற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளை எபோலா தொற்றானது பெரிதும் தாக்கியிருந்தது. இந்நிலையில் இந்நோய் தாக்கம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் எபோலா தொற்று அற்ற நாடாக தற்போது கினியா பிரகடனப்படுத்தப்படவுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிவித்தலை தொடர்ந்து இத்தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட கினிய மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். எபோலா தொற்று நோயினால் கினியாவில் மாத்திரம் சுமார் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அத்துடன், ஏனைய ஆபிரிக்க நாடுகளான சியரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் மேலும் 9 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.


சீன நிலச்சரிவு பேரழிவு:நிலச்சரிவு சம்பவத்துடன் தொடர்புபட்ட 12 பேர் கைது!
[Tuesday 2015-12-29 08:00]

சீனாவின் தென்பகுதியில் குவாங்டங் மாகாணத்தில் அமைந்துள்ள சென்சென் நகரில் கடந்த வாரம் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு சம்பவத்துடன் தொடர்புபட்ட 12 பேரை சீன பெய்ஜிங் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் கட்டுமான கழிவுகளை சேகரித்து வைக்கும் நிறுவனமொன்றின் நிர்வாகியும் உள்ளடங்குவதாக சீன அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சென்சென் நகரில் ஏற்பட்ட இந்த கட்டுமான பேரழிவுக்கு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டமையே காரணம் என அரசாங்கம் குற்றம் குற்றம் சுமத்தியுள்ளது.


மன
[Tuesday 2015-12-29 08:00]

பலஸ்


மலேசியாவில் 50,000 பேர் ஐஎஸ் இயக்க அனுதாபிகள்! - உளவுத்துறை மதிப்பீடு
[Monday 2015-12-28 22:00]

மலேசியாவில் ஏறக்குறைய 50,000 பேர் ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஐஎஸ் அச்சுறுத்தல் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில்,


மலேசிய நடிகை நடிகை டிஃப்பனி லியோங் புற்றுநோயால் மரணம்!
[Monday 2015-12-28 22:00]

மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரின் மீடியாகார்ப் (Mediacorp) குழுமத்தின் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகை டிஃப்பனி லியோங், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மரணமடைந்தார். கடந்த இரண்டு வருடங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார். மீடியாகார்ப் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்கு முன்பு, லியோங் மலேசியாவில் விளம்பர மாடலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


'மேலும்' ஒரு ரகசியத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டது!
[Monday 2015-12-28 21:00]

சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ் (Wikileaks) ஆகும். 2006-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த இணையத்தளம் ஆனது பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருவதையே தான் வேலையாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.அப்படியான விக்கிலீக்ஸ் வலைதளம் இன்றுவரை நாசா மறைத்த ஏலியன் ஆதாரம் பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது.


நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள்: - ஆய்வாளர்கள்!
[Monday 2015-12-28 21:00]

நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பாக்டீரியா என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட தெற்கு சுவிடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவு பற்றி கூறும்போது,


இஸ்ரேலுக்கு தாக்குதல் மிரட்டல் விடுத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி!
[Monday 2015-12-28 21:00]

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி இஸ்ரேலுக்கு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்


மியன்மாரில் இராணுவத்தை ஏளனம் செய்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்த பெண்ணுக்கு சிறை!
[Monday 2015-12-28 21:00]

மியன்மாரில் இராணுவத்தை ஏளனம் செய்து சமூக வலைத்தளம் ஒன்றில் கருத்துக்களை தெரிவித்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 6-மாதம் சிறைத் தண்டனை அளித்துள்ளது. ஜனநாயக-ஆதரவு தலைவி ஆங் சான் சூ கியின் பாரம்பரிய ஆடைகளுடன், அந்நாட்டு இராணுவத்தின் புதிய சீருடையின் நிறங்களை ஒப்பிட்டு வெளியான பேஸ்புக் கருத்து தொடர்பிலேயே கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டார். எந்தவொரு தொலைத்தொடர்பு வலையமைப்பு மூலமாகவும் அவதூறு செய்வதை தடைசெய்யும் பரந்துபட்ட அர்த்தங்களை கொடுக்கக்கூடிய சட்டம் ஒன்றினாலேயே சாவ் சாண்டி டுன் என்ற அந்தப் பெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. குறித்த பேஸ்புக் கருத்துக்களை தான் வெளியிடவில்லை என்றே அந்தப் பெண் கூறியிருந்தார்.


இரண்டாம் உலகப் போர் பாலியல் அடிமைகள் குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு!
[Monday 2015-12-28 20:00]

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் இராணுவம் பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய கொரிய பெண்களுக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பில் ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் ஒன்றை இருநாடுகளும் எட்டியுள்ளன. சியோலில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பேசிய ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷீடா, ஜப்பானிய இராணுவத்தின் பாலியல் விடுதிகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்கள் அனுபவித்த அளவிடமுடியாத வலிக்காக தான் மன்னிப்புக் கோருவதாக கூறினார். கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இழப்பீட்டு நிதியை அமைக்க டோக்கியோ ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை இறுதியானது என்றும், மாற்றியமைக்க முடியாதது என்றும், தென் கொரிய வெளியுறவு அமைச்சர் யன் பியாங் சே தெரிவித்துள்ளார். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது எஞ்சியிருப்பவர்களை இது திருப்தியடையச்செய்யுமா என்பது தெளிவில்லாமல் இருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா