|
|
|
|
|
சசிகலாவிடம் போன 2 சீனியர்கள்: அதிமுகவில் கிளம்பிய சூறாவளி!
[Friday 2026-10-16 16:00]
|
அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில், பல பரபரப்பு நடவடிக்கைகள் கட்சிக்குள் நடந்து வருகின்றன.. இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக சீனியர்கள் நடத்திய முக்கிய ஆலோசனைகளும், எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் இப்போது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. அதிமுகவுக்குள் தற்போது நடந்துவரும் இந்த நகர்வுகள் குறித்து பிரத்யேகமான தகவல் ஒனறு நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..! நாளை அக்டோபர் 17-ந்தேதி 55-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது அதிமுக. இந்த நாளை நினைவுகூர்ந்துவிட்டு, அனைவரும் ஒன்றிணையும் காலம் வந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.
|
|
|
|
|
ஆதவ் அர்ஜுனா - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணம் என்ன?
[Tuesday 2026-11-17 07:00]
|
டெய்சி மார்ட்டின் குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சியில் பயணிப்பதும், ஆதவ் அர்ஜுனா தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணித்து வருவதும் ஆதவ் - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மாவுமான திலகவதி கூறியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
|
|
|
|
|
“புயல் எப்போது கரையைக் கடக்கும்” - வானிலை ஆய்வு மையம் தகவல்!
[Monday 2026-11-16 16:00]
|
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (16.11.2026) மதியம் 01:15 மணி நிலவரப்படி வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவுள்ள நிலையில், நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
|
|
|
|
செக்கானூரணி காவல் நிலைய சம்பவம்: மருத்துவ பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்கள்!
[Monday 2026-11-16 16:00]
|
தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான பாலகிருஷ்ணன், செக்கானூர் காவல் நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
|
|
|
|
|
விரைவில் திமுக ஆட்சி உதயமாகத்தான் போகிறது: மு.க.ஸ்டாலின்!
[Monday 2026-11-16 16:00]
|
திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் சகோதரர் இல்லத் திருமண விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக விமர்சித்தார். மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்குப் பதிலாக ஏமாற்றமே கிடைத்துள்ளதாகக் கூறினார்.
|
|
|
|
|
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - டெய்சி விவாகரத்து!
[Monday 2026-11-16 16:00]
|
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் ஆதவ் அர்ஜூனா. இவர் லொட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதியின் மகள் டெய்சி என்பவரை 2012 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்திருந்தார். Arise Investments நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வரும் டெய்சியின் சொத்து மதிப்பு, ரூ.162.14 கோடி என ஆதவ் அர்ஜுனா 2026 தேர்தல் பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
|
|
|
|
|
மதுரை போலீஸிடமே கண்ணாமூச்சி ஆடும் 21 கோடி கொள்ளையன்!
[Monday 2026-11-16 07:00]
|
மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காதலியும், தந்தையும் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மட்டும் இடத்தை மாற்றி மாற்றி பதுங்கி வருகிறார். 4 நாட்களாகியும் அவரைப் பிடிக்க முடியாததால், தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் தொடர்ந்து போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர். மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் உள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் கடை திறக்கப்பட்டது.
|
|
|
|
|
கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம்!
[Monday 2026-11-16 07:00]
|
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்திருக்கும் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கட்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்து குறித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை அறிக்கை கேட்டிருப்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.
|
|
|
|
|
புத்தக கொள்முதல் முறைகேடு: கமிட்டியில் இடம்பெற்றிருந்த 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
[Monday 2026-11-16 07:00]
|
புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக துணை தலைமை நூலகர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது. அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய பெயர்களில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.
|
|
|
|
|
சூரனை வதம் செய்யும் முருகப்பெருமான்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!
[Sunday 2026-11-15 15:00]
|
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது. முருகர் சூரபத்மனை வதம் செய்வதை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கியது.
|
|
|
|
|
தனிஷ்க் கொள்ளை: நிஷாந்த் பதுங்கியுள்ள இடத்தை போட்டுக்கொடுத்த மீனாட்சி?
[Sunday 2026-11-15 15:00]
|
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், போலீசாரின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கொடுத்த முக்கியத் தகவலின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி நிஷாந்தை போலீசார் மிக நெருங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை நகைக்கடையின் லிப்ட் பராமரிப்புப் பகுதி வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர், சுமார் 10 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார்.
|
|
|
|
|
செக்கானூரணி காவல் நிலைய விவகாரம்: 3 போலீசாருக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்!
[Sunday 2026-11-15 15:00]
|
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், கடந்த 2ஆம் தேதி (02.11.2026) தேவாரத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டி – மதுரை சாலையில் லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாந்தூர் அருகே லாரியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் ஏலக்காய் 60 மூட்டைகள் தீக்கிரையானதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
|
|
|
|
|
பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் : இருவர் கைது!
[Sunday 2026-11-15 15:00]
|
சென்னை கொடுங்கையூரில் அரசு பேருந்து நடத்துநரை நான்கு இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி, முன்விரோதம் காரணமாக 2சி வழித்தட அரசுப் பேருந்தின் நடத்துநர் நித்தியானந்தன் என்பவருக்கும் நான்கு இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்கள் நடத்துநர் நித்தியானந்தனைத் தாக்கியதுடன், அவரது காதைக் கடித்தும், முதுகில் கத்தியால் தாக்கியும் உள்ளனர்.
|
|
|
|
|
வங்கக்கடலில் நாளை மாலை வலுப்பெறும் தீவிர புயல்!
[Sunday 2026-11-15 15:00]
|
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாலை புயலாக மாறக்கூடும். மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.
|
|
|
|
|
செஞ்சி சிறுமியின் குடும்பத்தை விஜய் ஏன் சந்திக்கவில்லை? - நேரில் சென்ற கனிமொழி கேள்வி!
[Saturday 2026-11-14 16:00]
|
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதாவை மீட்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை விஜய் ஏன் நேரில் சந்திக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராம குளக்கரை தெருவில் வசிக்கும் வடிவேலு- பவானி தம்பதியினரின் ஏழு வயது மகள் ஹேமலதா. இவர் கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு காணாமல் போனார்.
|
|
|
|
|
ஓய்வூதிய திட்டம் 23 ஆண்டுகளுக்கு மேலாக மறுப்பு: அரசு ஊழியர்கள் அதிரடி முடிவு!
[Saturday 2026-11-14 16:00]
|
பழைய ஓய்வூதிய திட்டம் 23 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்பட்டு வருகிறது.. குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.இது போன்ற கோரிக்களை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் மாநில அளவில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டையில் பேட்டி அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் 45-வது ஆண்டு துவக்க விழா மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது.
|
|
|
|
|
”இணையத்தால் இதயங்களை இணைப்போம்”: தமிழகத்தில் 2100 பேர் பங்கேற்பு!
[Saturday 2026-11-14 16:00]
|
திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ’இணையத்தால் இதயங்களை இணைப்போம்’ நிகழ்ச்சியை தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தொடங்கி வைத்தார். திருச்சி சமயபுரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இணையத்தால் இதயங்களை இணைப்போம் நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தில் இருந்து 2100 பேர்கள் பங்கேற்றார்கள்.
|
|
|
|
|
ஜெம் வீரமணி விவகாரம்: வெளியான பகீர் வாக்குமூலம்!
[Saturday 2026-11-14 16:00]
|
சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், ஏழு போக்சோ வழக்குகள் மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு வழக்கு என மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக ஜெம் வீரமணி, காந்தி, மகேந்திர சிம்மன், கணேசன், பார்த்திபன், லாசர், பாபு, சக்திவேல், சீனிவாசன் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
|
|
|
|
தமிழகத்தில் மோசமான நிலைமை: நெல் – அரிசி – பருப்பு வைத்துக்கொள்ள திடீர் கட்டுப்பாடு!
[Saturday 2026-11-14 07:00]
|
தமிழகத்தில் அரிசி, பருப்பு, நெல் விலைகள் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய நெல், அரிசி, பருப்புகளை இருப்பு வைக்க அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பி அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நெல் அல்லது அரிசியை மொத்தமாக விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் அதிகபட்சமாக 2 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நெல் அல்லது அரிசியை இருப்பு வைக்கலாம். சில்லரை விலைக்கு விற்பனை செய்வோர் ஒவ்வொரு கடையிலும் அதிகபட்சமாக 8 மெட்ரிக் டன் வரை இருப்பு வைக்கலாம்.
|
|
|
|
|
ஸ்ரீவைகுண்டம் முதல் கள்ளக்குறிச்சி வரை: பாலியல் வழக்குகளில் சிக்கிய தவெக நிர்வாகிகள்!
[Saturday 2026-11-14 07:00]
|
கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்கு பெண் வாக்காளர்கள் முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் சிங்க பெண் படை ஆரம்பித்தார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தவெக நிர்வாகிகள் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். பெண் கலெக்டர், மகளிரணி நிர்வாகிகள் என தவெக நிர்வாகிகளிடம் யாரும் தப்பவில்லை. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிராக அவர்களின் நிர்வாகிகள் செய்த அட்ராசிட்டி இதோ.
|
|
|
|
|
சென்னையில் ஐ.டி இளைஞர்களை குறி வைத்த நைஜீரியன்: மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்தவர் அதிரடி கைது!
[Saturday 2026-11-14 07:00]
|
சென்னை தாம்பரம், பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐ.டி ஊழியர்களுக்கு 'மெத்தம்பெட்டமைன்' போதைப்பொருள் விற்று வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த பல்லாவரம் பகுதியில் ஐ.டி ஊழியர்களுக்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க ஐ.டி ஊழியர் ஒருவர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதை கண்டறிந்தனர்.
|
|
|
|
|
ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்: விசாரிக்க எனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை - வன்னி அரசு சொன்ன வார்த்தை!
[Friday 2026-11-13 16:00]
|
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் அறிக்கை கேட்டால், விசாரிக்க தயாராக உள்ளேன் என்று கூறிய வன்னி அரசு, ஆட்சியர் பத்மஜா சட்டத்தின் படி செயல்படுவதாக தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
|
|
|
|
|
"சிறுமிக்கு பாலியல் தொல்லை, வெட்கமா இல்லையா?" - விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!
[Friday 2026-11-13 16:00]
|
குழந்தைகள் நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
|
|
|
|
|
செஞ்சி சிறுமி பெற்றோரின் வங்கிக் கணக்கு, செல்போன்கள் ஆய்வு!
[Friday 2026-11-13 16:00]
|
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். சிறுமி காணாமல் சென்றது குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்த வழக்கைக் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
|
|
|
|
|
ரசகுல்லா என நினைத்து வெடிகுண்டை கடித்த நபர் உயிரிழப்பு!
[Friday 2026-11-13 16:00]
|
மத்தியபிரதேச மாநிலத்தில், தனக்கு ரசகுல்லா எனக்கூறி வழங்கபட்டை வெடிகுண்டை கடித்த 35 வயதான ராஜேந்திர பரோதியா உயிரிழந்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சந்தா கிராமத்தை சேர்ந்த 35 வயதான ராஜேந்திர பரோதியா குடும்பத்தினருடன் உணவருந்தி விட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் அமர்ந்து தீ மூட்டியுள்ளார். இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த ராம்பகத் பரோதியா என்ற கிராமவாசி, அவருக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
|
|
|
|
|
விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்: திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்!
[Friday 2026-11-13 07:00]
|
அரசு ஊழியர்கள் பலர், விஜய் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.. நிர்வாகத்தை பொறுத்தவரையில் எம்ஜிஆர் சந்தித்த சிக்கல்களை இப்போது விஜய் சந்திக்கிறார். கட்சியை நடத்துவதைப் பொறுத்தவரையில் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சில சிக்கல்களும் இப்போது விஜய்க்கு இருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார். Retroluxe என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "2026 பொதுத்தேர்தலில் விஜய்க்கு வாக்களித்த அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இன்று விஜய் அரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் பதிவான தபால் வாக்குகள்.
|
|
|
|
|
பாலியல் தொல்லை + ஜாதி சொல்லி திட்டுகிறார்: கோவை தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் நிர்வாகி புகார்!
[Friday 2026-11-13 07:00]
|
கோவை காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது ஆசைக்கு இணங்காமல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜாதி ரீதியாக திட்டி கட்சியை விட்டு செல்லும்படி மிரட்டுவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அந்த தவெக பெண் நிர்வாகி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ''நான் தவெகவில் காரமடை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றின் செயலாளராக இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். தவெகவில் முதல் மீட்டிங் நான் தான் செய்தேன். தேர்தல் முடிந்து ஒரு மாதம் இருக்கும். காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினார்.
|
|
|
|
|
IPS அருண் உள்பட 7 போலீஸ் அதிகாரிகள் வழக்கில் சேர்ப்பு: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ட்விஸ்ட்!
[Friday 2026-11-13 07:00]
|
பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான 'போக்சோ' வழக்கில் இன்று சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்பட 2 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவார்கள். இதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு: 'ஜெம் கிரானைட்ஸ்' தொழிலதிபரான ஜெம் வீரமணி 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
|
|
|
|
|
எஸ்பி வேலுமணிக்கு சிக்கல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிய மத்திய அரசு கிரீன் சிக்னல்!
[Thursday 2026-11-12 18:00]
|
மிக நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் எஸ்பி வேலுமணி. தற்போது அதிமுக எம்எல்ஏவாக உள்ளார்.
|
|
|
|
|
|
|