Untitled Document
February 19, 2025 [GMT]
யாழ். பல்கலைக்கழக விவகாரம் - கல்வியமைச்சு தீர்வு வழங்குமாம்!
[Wednesday 2025-01-29 04:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

உணவுப் பண்பாட்டு ஆக்கிரமிப்பு குறித்து கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்!
[Wednesday 2025-02-19 05:00]

ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்று உணவுப் பண்பாடும் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது. ஆனால், மதப் பண்பாட்டில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற நாம், உணவுப் பண்பாட்டில் நிகழும் ஆக்கிரமிப்புகள் குறித்துக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.


வடக்கிற்கு அதிக நிதி- ஏனைய மாகாணங்களுக்கு இல்லையா?
[Wednesday 2025-02-19 05:00]

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு பகுதியில் பாலம் நிர்மாணிப்புக்கு 1000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.


தந்தையும் மகளும் துப்பாக்கிச் சூட்டில் பலி!
[Wednesday 2025-02-19 05:00]

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


கொத்து, பிரைட் ரைஸ், தேநீர் விலைகள் உயர்ந்தன!
[Wednesday 2025-02-19 05:00]

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கடலாமையுடன் கைது!
[Wednesday 2025-02-19 05:00]

யாழ்ப்பாணம் - குருநகர் இறால் வளர்ப்புத்திட்டம் பகுதியில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை!
[Wednesday 2025-02-19 05:00]

சமீபத்திய வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று குற்றம் சாட்டினார்.


அரியாலையில் டிப்பர் மோதி சைக்கிளில் சென்றவர் பலி!
[Wednesday 2025-02-19 05:00]

யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழம் சந்தி அருகில் நேற்று மாலை டிப்பர் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துவிச்சக்கரவண்டியில் வீதியால் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஹர்ஷவுக்கு கொழும்பு தலைவர் பதவி வழங்கப்படாதது கட்சியின் கொள்கை முடிவு!
[Wednesday 2025-02-19 05:00]

கட்சியின் கொள்கை காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கட்சியின் கொழும்பு தலைமைப்பதவி வழங்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.


மருமகன் தாக்கி மாமனார் மரணம்!
[Wednesday 2025-02-19 05:00]

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.


முன்னாள் எம்.பி மகனுடன் கைது!
[Wednesday 2025-02-19 05:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிரகுமார அபேசேகர மற்றும் அவரது மகன் சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது!
[Tuesday 2025-02-18 16:00]

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


பளையில் பெற்றோல் குண்டு வீச்சு!
[Tuesday 2025-02-18 16:00]

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் நேற்று நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.


போலி விசாவில் கனடா செல்ல முயன்ற கணவன்- மனைவி கைது!
[Tuesday 2025-02-18 16:00]

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மீண்டும் ஆரம்பமாகிறது கப்பல் சேவை!
[Tuesday 2025-02-18 16:00]

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.


குடும்பஸ்தர் கொலை தொடர்பான மூவர் கைது!
[Tuesday 2025-02-18 16:00]

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மாணவி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது!
[Tuesday 2025-02-18 16:00]

வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்ததாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.


பாண் விலை 10 ரூபாவினால் குறைந்தது!
[Tuesday 2025-02-18 16:00]

கோதுமை மாவின் விலை கிலோகிராமுக்கு ரூ.10 குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் பாணின் விலையை ரூ.10 குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மல்லாவியில் போதையில் மாணவிகளுடன் தவறாக நடந்த பொலிஸ்!
[Tuesday 2025-02-18 16:00]

முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!
[Tuesday 2025-02-18 16:00]

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.


எரிபொருள் மீதான வரிகளை நிச்சயம் குறைப்போம்!
[Tuesday 2025-02-18 16:00]

எதிர்காலத்தில் எரிபொருள் மீதான வரிகளை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் நிச்சயம் எடுக்குமென அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.


ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தலைகீழாக கவிழ்ந்த டெல்டா விமானம்- 17 பேர் காயம்!
[Tuesday 2025-02-18 06:00]

கனடாவின் ரொறன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் Delta Air Lines விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் மினியாபொலிஸ் (Minneapolis) நகரிலிருந்து புறப்பட்ட விமானம், பனி படர்ந்த ஓடுபாதையில் தலைகீழாகக் கவிழ்ந்தது விபத்து ஏற்பட்டது. அந்த விமானத்தில் 80 பேர் இருந்தனர்.


உள்ளூராட்சி தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 187 வாக்குகளுடன் நிறைவேறியது!
[Tuesday 2025-02-18 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களின்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்தவொரு வாக்கும் பயன்படுத்தப்படவில்லை.


நிறைவேறிய சட்டமூலத்தை சான்றுப்படுத்தினார் சபாநாயகர்!
[Tuesday 2025-02-18 06:00]

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.


ஏப்ரல் நடுப்பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல்!
[Tuesday 2025-02-18 06:00]

ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும். அச்சமடையாது தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும் என்று சபைமுதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


இலங்கை, வடகொரியாவாக மாறுவதை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!
[Tuesday 2025-02-18 06:00]

ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் செயற்பாடுகளை அராசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. இலங்கை, வடகொரியாவாக மாறுவதை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


வடக்கிற்கான பட்ஜெட் - புகழ்ந்து தள்ளிய அர்ச்சுனா!
[Tuesday 2025-02-18 06:00]

இம்முறை வரவு செலவுத்திட்டத்தை நாம் வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமாவே கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.


சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!
[Tuesday 2025-02-18 06:00]

2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.


வவுனியா - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் பலி!
[Tuesday 2025-02-18 06:00]

வவுனியா - மன்னார் வீதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். திங்கட்கிழமை மாலை குறித்த நபரும் மற்றொருவரும் பறயநாலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர்.


பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன துப்பாக்கி மீட்பு!
[Tuesday 2025-02-18 06:00]

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


3 வயது குழந்தையும் தாய்மாமனும் தவறுதலாக கிணற்றில் விழுந்து பலி!
[Tuesday 2025-02-18 06:00]

யாழ்ப்பாணம் - சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்பானா, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற 03 வயது ஆண் குழந்தையும், கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்ற தாய் மாமனுமே உயிரிழந்தனர்.

 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா