Untitled Document
January 15, 2025 [GMT]
குழந்தைகள் பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சி!
[Wednesday 2025-01-01 16:00]

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையின் வருடாந்த குழந்தைகள் பிறப்பு 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக தீபால் பெரேரா தெரிவித்தார்.


நாகை- காங்கேசன் கப்பல் சேவை மீண்டும் நாளை ஆரம்பம்!
[Wednesday 2025-01-01 16:00]

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


ஆளும்கட்சி எம்.பிக்களுக்கு தனியார் தொழிற்சாலைக்குள் என்ன வேலை?
[Wednesday 2025-01-01 05:00]

தனியார் தொழிற்சாலையொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக அரசாங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த வலியுறுத்தினார்.


நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல! -என்கிறார் சிவிகே.
[Wednesday 2025-01-01 05:00]

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார திசாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


தெரிவுகளை ஆராய கால அவகாசம் தேவை!
[Wednesday 2025-01-01 05:00]

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய மிகவும் பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.


மஹிந்தவுக்கு பாதுகாப்பு அவசியமில்லை!
[Wednesday 2025-01-01 05:00]

மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் தனிப்பட்ட முறையிலா போரிட்டார் இன்றும் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதற்கு, விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டார் ஆகவே அவர் மீது புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்த போவதில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்தவுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


மண்ணெண்ணெய் விலை மட்டும் மாற்றம்!
[Wednesday 2025-01-01 05:00]

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


பாறையில் வான் மோதி இருவர் பலி- 16 பேர் காயம்!
[Wednesday 2025-01-01 05:00]

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளை - வியாரகல பகுதியில் பயணித்த வேன், நேற்று மாலை வீதியை விட்டு விலகி பாறையில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இளம் குடும்பஸ்தர் மயங்கி விழுந்து மரணம்!
[Wednesday 2025-01-01 05:00]

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த கிருபரஞ்சன் (வயது- 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.


பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வராத யூடியூப்!
[Wednesday 2025-01-01 05:00]

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram, YouTube மற்றும் x கணக்குகள் நேற்று மாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.இதையடுத்து, உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram மற்றும் x கணக்குகள் தற்போது மீண்டும் இலங்கை பொலிஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.


பெப்ரவரி 18 முதல் வரவுசெலவுத்திட்ட விவாதம்!
[Wednesday 2025-01-01 05:00]

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதிகளவானோர் நாட்டை விட்டு வெளியேறிய ஆண்டு!
[Wednesday 2025-01-01 05:00]

2024ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில் 312,836 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.


புலமைப்பரிசில் பரீட்சை - அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
[Tuesday 2024-12-31 15:00]

2024 செப்டம்பர் 15, அன்று நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் நேர்மையை மீறியதன் மூலம் மாணவர்கள், மற்றும் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் அரசால் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.


தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது!
[Tuesday 2024-12-31 15:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


அர்ச்சுனாவிற்கு எதிரான கட்டாணை நீடிப்பு!
[Tuesday 2024-12-31 15:00]

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அர்ச்சுனாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.கனகசிங்கம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


விகாரைகளில் இருந்து ஏன் இராணுவத்தை நீக்க வேண்டும்!
[Tuesday 2024-12-31 15:00]

விகாரைகளில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் கட்டுமான பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். விகாரைகளில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும் ? எவரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.


கப்பம் கேட்ட தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் மீது தாக்குதல்!
[Tuesday 2024-12-31 15:00]

பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், நேற்று பிற்பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்த தடை!
[Tuesday 2024-12-31 15:00]

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.


முல்லைத்தீவில் தடுப்பு முகாம்- வெளியானது வர்த்தமானி!
[Tuesday 2024-12-31 15:00]

இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமை "தடுப்பு மையமாக" பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் திங்கட்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது.


மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் கடலில் சடலமாக மீட்பு!
[Tuesday 2024-12-31 15:00]

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். -மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59) என்ற குடும்பஸ்தர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குடும்ப உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.


மட்டக்களப்பில் கரையொதுங்கிய இந்தோனேசிய மூங்கில் படகு!
[Tuesday 2024-12-31 15:00]

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு ஒன்று கரையடைந்த நிலையில் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


இரு முக்கிய அரச ஊடகங்கள் மீது சைபர் தாக்குதல்!
[Tuesday 2024-12-31 15:00]

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா!- வவுனியாவில் போராட்டம்.
[Monday 2024-12-30 16:00]

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” என கோஷம் எழுப்பி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


2025ம் ஆண்டு தமிழர்களுக்கான புதிய பாதைகளை திறந்து விடும்!
[Monday 2024-12-30 16:00]

2025ம் ஆண்டு மாற்றங்கள் நிறைந்த தமிழர்களுக்கான புதிய பாதைகளை திறந்து விடும் ஆண்டாக மலரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


இராணுவம், கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்!
[Monday 2024-12-30 16:00]

இராணுவம், கடற்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ளதோடு, விமானப்படை தளபதியின் சேவை நீடிப்பு அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது.


அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம்!
[Monday 2024-12-30 16:00]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று நடைபெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம்!
[Monday 2024-12-30 16:00]

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


ஜனவரி 2இல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!
[Monday 2024-12-30 16:00]

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.


பரம்பரைப் பதவிகளை ஒழிக்க வேண்டும்!
[Monday 2024-12-30 16:00]

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் தொழில் வல்லுநர்களுக்கு பாராளுமன்ற அணுகல் பொதுவானதாக இருப்பது போல், இலங்கையின் பௌத்த ஆலய அமைப்பில் திவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமே பதவிகளும் எந்தவொரு குடிமகனுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என ஜாதிக பரிபோகிக பெரமுன (ஜேபிபி) தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.


ஊடகவியலாளரை தாக்கியதாக கைதானவர்களுக்கு பிணை!
[Monday 2024-12-30 16:00]

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனை கடந்த 26ஆம் திகதி தாக்கி கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (30) ஆள் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர். இதன்போது ஊடகவியலாளரால் சந்தேக நபர்கள் இருவரும் சரியாக அடையாளம் காட்டப்பட்டனர்.

Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா