Untitled Document
January 16, 2025 [GMT]
நாடெங்கும் கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட யாழ். கொள்ளைக் கும்பல் கண்டியில் சிக்கியது!
[Thursday 2024-12-26 05:00]

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் நுழைந்து பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கிளிநொச்சியில் கோர விபத்தில் குழந்தை பலி!- தாய், தந்தை உள்ளிட்ட 3 பேர் காயம்.
[Thursday 2024-12-26 05:00]

கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.


சேதன உர இறக்குமதி மோசடி குறித்து விசாரணை!
[Thursday 2024-12-26 05:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதிலும் நடைபெற்ற மோசடிகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பிரதி விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.


கச்சதீவு குறித்து இந்தியாவுடன் பேசும் அவசியம் இல்லை!
[Thursday 2024-12-26 05:00]

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான ஒரு அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை!
[Thursday 2024-12-26 05:00]

2024 ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் 554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 72மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.


விஜேவீரவின் குடும்பத்தை பராமரிக்க ஜேவிபியா பணம் கொடுத்தது?
[Thursday 2024-12-26 05:00]

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மரணத்துக்கு பின்னர் அவரது குடும்பத்தார் கடற்படை முகாமிலேயே பராமரிக்கப்பட்டனர். அதற்கு மக்களின் வரிப்பணமே செலவிடப்பட்டது. அது தவறில்லை என்றால் ஜனாதிபதி நிதியத்திலிருந்து சட்ட ரீதியாக உதவிப் பணம் பெற்றது எவ்வாறு தவறாகுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வியெழுப்பினார்.


நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை முழுமையாக வெளியிட வேண்டும்!
[Thursday 2024-12-26 05:00]

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் முழுமையாக வெளியிட வேண்டும். உரிய விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.


உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!
[Thursday 2024-12-26 05:00]

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


குடும்பம் மீது தாக்குதல்- இருவர் வைத்தியசாலையில்!
[Thursday 2024-12-26 05:00]

இணுவில் பகுதியில், குடும்பமொன்றின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆலயம் தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.


பிரிக்ஸ் அமைப்பின் 9 புதிய நாடுகள்- இலங்கையின் கோரிக்கை நிராகரிப்பு!
[Wednesday 2024-12-25 20:00]

லேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ர‌ஷ்யா தெரிவித்துள்ளது.


கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம்!
[Wednesday 2024-12-25 20:00]

இரண்டு பிள்ளைகளும் நபரொருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். திருக்கோவில் சங்கமன்கந்த கடற்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற கடற்படைச் சிப்பாய் கைது!
[Wednesday 2024-12-25 20:00]

டி 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவற்றுடன் காணாமல் போன கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை கடற்படை முகாமிற்கு சொந்தமான பொருட்களை ஏற்றிக்கொண்டு பாரவூர்தி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த சிப்பாய் வரகாபொல – வாரியகொட பிரதேசத்தில் வைத்துக் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நாளை சுனாமி அனர்த்த நினைவு நாள்- 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த கோரிக்கை!
[Wednesday 2024-12-25 20:00]

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியடையும் டிசெம்பர் 26ஆம் திகதி நாளை காலை 9.25 மணி முதல் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 டிசம்பர் 26, அன்று நடந்த இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமைச்சர்கள் வாய் திறக்கத் தடை இல்லை!
[Wednesday 2024-12-25 20:00]

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிடுவதற்கு ஒழுங்குமுறையொன்று பேணப்பட வேண்டும் என எண்ணுவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


துப்பாக்கிச் சூட்டில் கணவன் பலி- மனைவி காயம்!
[Wednesday 2024-12-25 20:00]

குருநாகல், வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரலுவாவ பகுதியில் வீடொன்றில் தம்பதியினர் மீது இனந்தெரியாத ஒருவர் நேற்றுஇரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த தம்பதியினர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மரலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கழுத்தில் பாய்ந்த கூரிய தடியை அகற்றி மருத்துவர்கள் சாதனை!
[Wednesday 2024-12-25 20:00]

கழுத்தில் பாய்ந்த கூரிய தடியினால், உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், வைத்தியர்களால் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் காப்பாற்றப்பட்டார்.


ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகினார்!
[Wednesday 2024-12-25 20:00]

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்தலைவர் கலாநிதி செனேஷ் பண்டார தனது பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார்.அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களினால் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.


ரயில்களில் பயணிக்க ப்ரீபெய்ட் அட்டை!
[Wednesday 2024-12-25 20:00]

தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரலுக்கு முன்னதாக இந்த புதிய அட்டையை அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


மேலும் இருவருக்கு எலிக்காய்ச்சல்!
[Wednesday 2024-12-25 20:00]

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கிளீன் ஸ்ரீலங்கா பற்றி கதைக்க எதிர்க்கட்சிக்கு அருகதையில்லை!
[Wednesday 2024-12-25 05:00]

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு சிறுபான்மை பிரதிநிதியொருவரின் பெயரைக் கூட பரிந்துரைக்காத ஐக்கிய மக்கள் சக்திக்கு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தில் சிறுபான்மையினர் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு தகுதியில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


வளமான நாட்டை உருவாக்க நத்தார் தினத்தில் உறுதி பூணுவோம்!
[Wednesday 2024-12-25 05:00]

வளமான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு 101 துப்பாக்கிச் சூடுகளில் 60 பேர் பலி!
[Wednesday 2024-12-25 05:00]

2024ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.


புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
[Wednesday 2024-12-25 05:00]

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.


நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்!
[Wednesday 2024-12-25 05:00]

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம். நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள நத்தார்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களை வெளியேற்ற உடன் தடை விதியுங்கள்!- ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசர கடிதம்.
[Wednesday 2024-12-25 05:00]

“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள், பல காரணங்களை சொல்லி வெளியேற்ற முயல்கிறார்கள். ஏற்கனவே நிர்க்கதி நிலையில் வசிக்கும் மக்களை வெளியே போக சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்?”


மஹிந்தவுக்கு ஐ.எஸ் அச்சுறுத்தல் என்பது பொய்!
[Wednesday 2024-12-25 05:00]

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மக்கள் மத்தியில் அச்சமில்லாமல் செல்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்கு கோடி கணக்கில் அரசு செலவு செய்ய வேண்டிய தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.


மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கம் - பழிவாங்கும் செயல்!
[Wednesday 2024-12-25 05:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு அரசியல் பழிவாங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


தலைமன்னாரில் கைதான 17 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!
[Wednesday 2024-12-25 05:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை!
[Wednesday 2024-12-25 05:00]

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார்.


இனப்படுகொலைக்கான நீதிக்கு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்!
[Tuesday 2024-12-24 16:00]

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச ரீதியில் நீதி தேடவேண்டிய தேவை இருப்பதால் அது தொடர்பில் ஈழத் தமிழ் புலம் பெயர் பிரமுகர்கள் ஒன்றுபட்டு கூட்டாக செயற்பட வேண்டிய தேவை இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடாவில் தெரிவித்துள்ளார்.

Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா