Untitled Document
November 14, 2024 [GMT]
சர்ச்சைக்குரிய கலைநிகழ்ச்சியை நடத்தியதற்கு மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மன்னிப்புக் கோரினர்! Top News
[Monday 2015-12-28 20:00]

கடந்தவாரம் கொழும்பில் நடந்த உலகப் புகழ்பெற்ற பாடகர் என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு தாம் வருந்துவதாக முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்


தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முன்மொழிந்துள்ளது!
[Monday 2015-12-28 20:00]

நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களுக்கான செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் இன அழிப்புக் குற்றத்தினை முன்னிறுத்தி பன்னாட்டு நீதிதளத்தில் போராடுதல், போர்க்கைதிகளின் விடுதலையை வற்புறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தல்,தமிழீழத்துக்கான அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கு உலகம் முழுதுமுள்ள தமிழரை ஒன்று திரட்டுதல் , தமிழீழ மக்களுக்கென மெய் நிகர் (விர்ருவால்) அரசாங்க சேவைகளைத் தொடங்குதல் ஆகிய முக்கிய யோசனைகள் அங்கு முன்மொழியப்பட்டுள்ளது. அரசவை உறுப்பினர்களும் மேலவை உறுப்பினர்களும் இடையில் இடம்பெற்றிருந்த இணைந்த கூட்டத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கெனப் பல புதிய நுண்ணிய கருத்துக்கள் முன்மொழியப்பட்டுள்ளன.


கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு! Top News
[Monday 2015-12-28 20:00]

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றது.


அன்டனோவ் விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு! - ஜனவரி 12 இல் விசாரணை ஆரம்பம்
[Monday 2015-12-28 20:00]

அண்டனோவ் விமானம் விடுதலைப் புலிகளின் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி முதல் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. 15 வருடங்களுக்கு முன்னர் படையினரை ஏற்றிக்கொண்டு பலாலியில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த அண்டனோவ் விமானம் வில்பத்து வனப் பகுதியில் வைத்து புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியது. இந்த சம்பவத்தில் ரஷ்ய விமானி உட்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 32 பேர் பலியாகினர்.


மகிந்த உள்ளிட்ட 24 எம்.பிக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை!
[Monday 2015-12-28 20:00]

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில், தான் உள்ளிட்ட 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை, மாவரல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் மக்களை சந்தித்தபோது நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.


பருத்தித்துறைக் கடலில் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி!
[Monday 2015-12-28 20:00]

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது. இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். ஒருவர் நீந்திக் கரைசேர்ந்தார்.


ஜனவரி 1முதல் பொலித்தீன் பாவனைக்குத் தடை!
[Monday 2015-12-28 20:00]

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடைசெய்யப்படவுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனே இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவை கொண்ட பொலித்தீன் பொதிகள், பயன்பாட்டுக்கே எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.


கொத்மலையில் பாரவூர்தி மோதி பெண் பலி! Top News
[Monday 2015-12-28 20:00]

நுவரெலிய நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் பாதையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் 31 வயதான வரதராஜ் சந்திரகலா என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.


வித்தியா படுகொலை - மரபணு அறிக்கை இன்றும் சமர்ப்பிக்கப்படவில்லை!
[Monday 2015-12-28 20:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார். இன்றைய தினம் புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா