Untitled Document
January 26, 2025 [GMT]
மட்டக்களப்பில் கடுமையான கடற்கொந்தளிப்பு! - மீன்பிடித் தொழில் முடங்கியது Top News
[Tuesday 2015-12-29 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்பட்டதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்திருந்தனர். இதனால், மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக முடங்கியதுடன் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான பூநொச்சிமுனை, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், பாலமுனை மற்றும் நாவலடி உட்பட பல இடங்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.


நிர்வாணமாக வீதியில் செல்ல விரும்புகின்றனரா? - ஜனாதிபதி கேள்வி
[Tuesday 2015-12-29 18:00]

இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வௌியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டிய அவர், இந்த நாட்டில் கலாச்சாரச் சீரழிவே ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்க அழைக்கப்பட்டுள்ளார்.
[Tuesday 2015-12-29 18:00]

யாழ்-அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் (New Jersey) வசிக்கும் திரு, திருமதி நிர்மலா ஞானசேகரன் செல்லையா தம்பதியினரின் புதல்வன் செல்வன் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் நியூ ஜெர்சிக்கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2015 ம் ஆண்டின் அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம் உட்பட்ட பல்வேறுபட்ட தெரிவுப் போட்டிகளிலும் முதல் இடம் பெற்று அமெரிக்க ஜனாதிபதி Barack Obama வினால் கெளரவிக்கப்படும் நிகழ்வில் பங்கேற்பதற்கென 2016 பங்குனி 5ம் திகதி அமெரிக்கத் தலைநகரில் (Washington D.C .) அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு (White House) அழைக்கப்பட்டுள்ளார்.


அகில இலங்கை அளவில் சிறந்த பிரதேச செயலகமாக குச்சவெளிப் பிரதேச செயலகம் தெரிவு! Top News
[Tuesday 2015-12-29 18:00]

இலங்கையின் தேசிய உற்பத்தி அபிவிருத்தி அமைச்சினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த பிரதேச செயலகத் தெரிவில், 2014- 2015ஆம் ஆண்டின் சிறந்த பிரதேச செயலகமாக குச்சவெளி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 313.37 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இரண்டாவது பெரிய பிரதேசமாக குச்சவெளி பிரதேசம் காணப்படுகின்றது.


திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி!
[Tuesday 2015-12-29 18:00]

திருகோணம​லை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதியம்மன்கேணி பகுதியில், இடம்பெற்ற விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதான எஸ்.நவரத்தினம் என்பவர் நேற்று உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், துவிச்சக்கர வண்டியை செலுத்தி வந்த மேற்படி நபர், படுகாயமடைந்தார்.


கூட்டமைப்பை பலவீனப்படுத்த முயன்றால் பேரவையில் இருந்து வெளியேறி விடுவோம்! - சித்தார்த்தன்
[Tuesday 2015-12-29 18:00]

தமிழ் மக்கள் பேரவை பரந்துபட்ட அளவில் மக்கள் பங்குகொள்ளும் அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் அபிப்பி்ராயங்களைப் பெற்றுக் கொண்டு தீர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலேயே இணைந்து கொண்டிருக்கிறோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு புதிய நீதிவானிடம்!
[Tuesday 2015-12-29 18:00]

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கை நடத்தி வரும் ஊர்காவற்றுறை நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வவுனியா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்துக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் பதவியேற்கவுள்ளார்.


பருத்தித்துறையில் மீனவரின் சடலம் கரையொதுங்கியது!
[Tuesday 2015-12-29 18:00]

பருத்தித்துறை முனைப் பகுதியிலிருந்து நேற்று அதிகாலை கடலுக்குச் சென்று காணாமற்போன மீனவர், முனை வெளிச்ச வீட்டுக்கு அருகிலிருந்து இன்று அதிகாலை, சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். முனைப் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது 42) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.


பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Tuesday 2015-12-29 18:00]

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான ஹரனுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தியபோது, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.றியாழ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


அடைக்கலநாதனுக்கு நாவடக்கம் வேண்டும்: - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
[Tuesday 2015-12-29 17:00]

எதிரிகள், துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டதே


கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு இந்த வாரம் கூடுகிறது!
[Tuesday 2015-12-29 09:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் காரணமாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை உடன் கூட்ட வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலே இந்தக் கூட்டம் கூடவுள்ளதாகவும் ரெலோவின் செயலாளர் ஹென்ரி மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் மக்கள் பேரவையில் ஒருபோதும் இணையாது ரெலோ! - செல்வம் அடைக்கலநாதன்
[Tuesday 2015-12-29 09:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ ஒருபோதும் தமிழ் மக்கள் பேரவையில் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அந்த இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். வவுனியாவில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


ஊடகவியலாளரைத் தாக்கியது சரத் பொன்சேகா தான்! - தாய்நாட்டிற்கான இராணுவம் அமைப்பு குற்றச்சாட்டு
[Tuesday 2015-12-29 09:00]

போர்க்காலத்தில் ஊடகவியலாளர் கீத் நொயாரை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட குழுவினரே தாக்கியதாக தாய்நாட்டிற்கான இராணுவம் அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் அந்த அமைப்பின் இணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன இதனைத் தெரிவித்தார்.


புத்தாண்டில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி! - கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு
[Tuesday 2015-12-29 09:00]

புத்தாண்டில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதற்காக வரும் 9ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தலைமையில் விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.


ஹிருனிகாவிடம் 500 மில்லியன் ரூபா கேட்டு வழக்குத் தொடுக்கிறார் கம்மன்பில!
[Tuesday 2015-12-29 08:00]

தனக்கு எதிராக அவதூறான செய்திகளை பரப்பியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கவிருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.


அரசியலமைப்புத் திருத்தம் - மக்களின் கருத்தறிய 24 பேர் கொண்ட குழு நியமனம்!
[Tuesday 2015-12-29 08:00]

அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்காக மக்கள் கருத்தறிவதற்காக 24 பேரடங்கிய குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதிகள் உள்ளடங்குவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அரசியலமைப்பை திருத்தி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


பல்லேகலவில் நேற்றிரவு நிலஅதிர்வு - மக்கள் பீதி!
[Tuesday 2015-12-29 08:00]

கண்டி, பல்லேகலே பிரதேசத்தில் நேற்றிரவு நில அதிர்வு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 10. 16 அளவில் பல்லேகலே பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நிலத்தின் கீழ் பாரிய சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் பிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த சத்தம் நில அதிர்வாக இருக்கலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பளையில் சூறைக்காற்றினால் மீளக்குடியேறிய மக்களின் தற்காலிக குடியிருப்புகள் சேதம்! Top News
[Tuesday 2015-12-29 08:00]

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுகிழமை இரவு வீசிய பலத்த காற்று காரணமாக பளை இத்தாவில் பகுதியில் மக்களின் தற்காலிக வீடுகளின் கூரைகள் சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்துள்ளனா். இத்தாவில் கோவில் காடு பகுதியில் நள்ளிரவு வீசிய பலத்த காற்றினால் 12 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.


புத்தாண்டில் இலங்கைக்குப் படையெடுக்கவுள்ள வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள்!
[Tuesday 2015-12-29 08:00]

2016ஆம் ஆண்டில் உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர், இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், ஜனவரி மாதத்திலேயே இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.


சிகிரியாவின் புராதன சாந்து தட்டு பெயர்ந்து வீழ்ந்தது! Top News
[Tuesday 2015-12-29 08:00]

சிகிரியாவில், புராதன சாந்துத் (பதாம) தட்டு உடைந்து விழுந்துள்ளது. சாந்துத் தட்டில், சுமார் ஒன்றரை அடி பரப்பளவான பகுதியே நேற்று உடைந்து விழுந்துள்ளது. இது தொடர்பிலான விவரங்களை, கொழும்பில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளுமாறு சிகிரியாவில் கடமையிலிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்தை உன்னிப்பாக கண்காணிக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்!
[Monday 2015-12-28 21:00]

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்கா அவதானித்து வருவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக வழிமுறைகளில் உரிமைகளை பெறுவதற்கான மக்கள் செயற்பாடுகளை அமெரிக்கா வரவேற்கும். ஆனாலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயலாற்றுவது அவசியம் என அமொிக்கா எதிர்ப்பார்ப்பதாக தூதரக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.


தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைய வேண்டிய அவசியம் இல்லை! - மாவை சேனாதிராஜா
[Monday 2015-12-28 21:00]

தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தமிழரசு கட்சியின் தலைவரான, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் இரகசியமாக கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. வெளியில் சொல்லப்படும் கருத்து நாங்கள் அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள்


மழையில் இடிந்து விழுந்த கொட்டிலுக்குள் மாட்டினார் வயோதிபர்! - படுகாயத்துடன் மீட்பு Top News
[Monday 2015-12-28 20:00]

மட்டக்களப்பு வாகரையில் நேற்று இரவு மழையுடன் கூடிய கடும் காற்றினால் தற்காலிகக் கொட்டில் உடைந்து விழுந்ததில் அதில் உறங்கிக் கொண்டிருந்த வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோறளைப்பற்று வடக்கு அபிவிருத்தி ஒன்றியத்தில் காவலாளியாக கடமையாற்றுகின்ற கண்டலடி வாகரையைச் சேர்ந்த க.கந்தசாமி (வயது 63) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.


புதிய அரசியல் யாப்பு செயற்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அக்கறை: - அமைச்சர் மனோ கணேசன் அறிவிப்பு
[Monday 2015-12-28 20:00]

முழு பாராளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இச்சூழ்நிலையில், புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் தேசிய செயற்பாட்டில் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்புணர்வுடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. இது கடந்த காலங்களின் தூரநோக்கற்ற அரசியல் அக்கறையீனம் காரணமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேளைகளில் மலையக தமிழ் மக்கள் உதாசீனப்படுத்தப்பட்ட வரலாற்றில் இருந்து மாறுபட்ட புதிய வரலாறு ஆகும்.


மட்டக்களப்பில் பச்சைமிளகாய் கிலோ 1200 ரூபா! Top News
[Monday 2015-12-28 20:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளன. ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவாக விற்கப்படுகின்றது.ஏனைய உள்ளுர் மரக்கறிகளும், பீர்க்கு 200, கறிமிளகாய் 600, வெண்டைக்காய் 200, கத்தரிக்காய் 200, போஞ்சிக்காய் 400, கரட் 200 ரூபா என அதிக விலையில் விற்கப்படுகின்றன.


சர்ச்சைக்குரிய கலைநிகழ்ச்சியை நடத்தியதற்கு மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மன்னிப்புக் கோரினர்! Top News
[Monday 2015-12-28 20:00]

கடந்தவாரம் கொழும்பில் நடந்த உலகப் புகழ்பெற்ற பாடகர் என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு தாம் வருந்துவதாக முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்


தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முன்மொழிந்துள்ளது!
[Monday 2015-12-28 20:00]

நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களுக்கான செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் இன அழிப்புக் குற்றத்தினை முன்னிறுத்தி பன்னாட்டு நீதிதளத்தில் போராடுதல், போர்க்கைதிகளின் விடுதலையை வற்புறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தல்,தமிழீழத்துக்கான அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கு உலகம் முழுதுமுள்ள தமிழரை ஒன்று திரட்டுதல் , தமிழீழ மக்களுக்கென மெய் நிகர் (விர்ருவால்) அரசாங்க சேவைகளைத் தொடங்குதல் ஆகிய முக்கிய யோசனைகள் அங்கு முன்மொழியப்பட்டுள்ளது. அரசவை உறுப்பினர்களும் மேலவை உறுப்பினர்களும் இடையில் இடம்பெற்றிருந்த இணைந்த கூட்டத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கெனப் பல புதிய நுண்ணிய கருத்துக்கள் முன்மொழியப்பட்டுள்ளன.


கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு! Top News
[Monday 2015-12-28 20:00]

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றது.


அன்டனோவ் விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு! - ஜனவரி 12 இல் விசாரணை ஆரம்பம்
[Monday 2015-12-28 20:00]

அண்டனோவ் விமானம் விடுதலைப் புலிகளின் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி முதல் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. 15 வருடங்களுக்கு முன்னர் படையினரை ஏற்றிக்கொண்டு பலாலியில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த அண்டனோவ் விமானம் வில்பத்து வனப் பகுதியில் வைத்து புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியது. இந்த சம்பவத்தில் ரஷ்ய விமானி உட்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 32 பேர் பலியாகினர்.


மகிந்த உள்ளிட்ட 24 எம்.பிக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை!
[Monday 2015-12-28 20:00]

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில், தான் உள்ளிட்ட 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை, மாவரல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் மக்களை சந்தித்தபோது நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.

Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா