Untitled Document
February 22, 2025 [GMT]
முக்கிய கொலைகள் குறித்த விசாரணைகளுக்கு இடையூறு செய்யும் உயர் படை அதிகாரிகள்!
[Sunday 2016-01-03 09:00]

லசந்த விக்ரமதுங்க, நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் புலனாய்வு பிரிவினர் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த கொலைகளை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பித்த உயர் இராணுவ அதிகாரிகள் இன்னமும் குறித்த பதவிகளை வகித்து வருவதனால், விசாரணைகளுக்கு இவர்கள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.


வல்வெட்டித்துறையில் கடைகள், வீடுகளில் திருடிய 16, 20 வயது இளைஞர்கள் கைது!
[Sunday 2016-01-03 09:00]

வல்வெட்டித்துறையில் களவு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 16, 20 வயதான இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் ஆதிகோயிலடியில் உள்ள அவர்களின் வீட்டில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் அவர்களின் வீட்டிலிருந்து களவாடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


கட்டுநாயக்கவில் விமானத்தின் மீது மோதியது ட்ரக்! - இறக்கை சேதம்
[Sunday 2016-01-03 09:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றுடன் கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது. சிவில் விமான சேவையின் 103வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கனரக வாகனம், கடந்த 28ஆம் திகதி இரவு இசைக்கருவிகளை ஏற்றிச் சென்ற போது ஏ 340 விமானத்தில் மோதியுள்ளது. இதன்போது விமானத்தின் இடதுபக்க இறக்கை பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.


முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடற்படைக்கு காணிகளை அபகரிக்க முயற்சி! - உரிமையாளர்கள் எதிர்ப்பு Top News
[Saturday 2016-01-02 21:00]

வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்கவுள்ளதாகவும் இதனால், காணிகளை இழப்பவர்களுக்கு சிறந்த நஷ்டஈடு வழங்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த பெரேரா உறுதியளித்த போதிலும், காணி உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழு முதல் முறையாக கூடியது! Top News
[Saturday 2016-01-02 21:00]

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழ் மக்கள் பேரவையினால் அமைக்கப்பட்டுள்ள உபகுழுவின் முதலாவது உத்தியோகப்பூர்வ இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ். நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மரியன்னை பெரிய கோவில் ஆகிய வணக்கஸ்தலங்களுக்கு சென்று உப குழுவினர் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு!
[Saturday 2016-01-02 21:00]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அழைப்பை விடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் ரஷ்ய தூதரகத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த நிலையில், தூதரகம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த தூதரகத்தினை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திறந்து வைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கான அழைப்பினை விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு! Top News
[Saturday 2016-01-02 21:00]

திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2006 ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகள், உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு நிலையத்தில் இடம்பெற்றன.


விரைவில் கைதாகிறார் ஹிருணிகா?
[Saturday 2016-01-02 21:00]

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சட்டமா அதிபர் திணைக்கள தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. ஹிருனிக்காவின் பாதுகாப்பு வாகனத்தில் தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த கைது இடம்பெறவுள்ளது. குறித்த இளைஞர் கடத்தப்பட்டவேளையில் அங்கிருந்த 11 வயது சிறுமியின் வாக்குமூலத்தின்படி இளைஞர் கடத்தப்பட்ட ஹிருனிக்காவின் முன்னிலையில் நிறுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக முன்னதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.


போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி தபால் அட்டையில் ஆர்வத்துடன் ஒப்பமிடும் மக்கள் ! Top News
[Saturday 2016-01-02 21:00]

சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தபால் அட்டையில் மக்கள் ஆர்வத்துடன் ஒப்பமிட்டு வருகின்றனர். புத்தாண்டு நாளன்று வழிபாடுகளில் ஈடுபட்ட தமிழ்மக்கள் (லண்டன்) , தபால் அட்டைப் பரப்புரையில் ஈடுபட்டிருந்த செயற்பாட்டாளர்களிடம் ஆர்வத்துடன் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி ஒப்பமிட்டுள்ளனர். கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கைதரும் நடத்தைகள் சிறிலங்கா அரச தரப்பில் இல்லாத நிலையில், இவ்விவகாரத்தினை அனைத்துலக சமூகம் நோக்கி கொண்டு செல்லும் பொருட்டு இத்தபால் அட்டைப் பரப்புரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த டிசெம்பர் 15ம் திகதி முதல் தொடங்கியிருந்தது.


கறுப்புக் கொடி வார போராட்டத்தை தொடங்கினார் கம்மன்பில! Top News
[Saturday 2016-01-02 21:00]

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் கறுப்புக்கொடி வாரம் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றினைந்த எதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதிக்குள் ஊர்ஊராக,வீடு வீடாக இந்த விடயத்தை கொண்டு செல்லப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மைத்திரியைச் சந்திக்கிறது பரணகம ஆணைக்குழு!
[Saturday 2016-01-02 21:00]

காணாமல்போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்து வரும் பரணகம ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது. பரணகம ஆணைக்குழுவின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்தநிலையில் ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


அரசாங்கத்தின் தேசிய பொங்கல் கொண்டாட்டங்களுக்கு இந்து மா மான்றம் எதிர்ப்பு!
[Saturday 2016-01-02 21:00]

தைப்பொங்கல் தினத்தை வழிபாட்டுத் தினமாக அனுஷ்டிக்குமாறும், எவ்வித கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.


அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் குவிந்த 13ஆயிரம் கார்கள்!
[Saturday 2016-01-02 21:00]

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகத்திற்கு 13 ஆயிரம் வாகனங்கள் நேற்று வந்தடைந்ததாக துறைமுக அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. மீள் ஏற்றுமதிக்காகவே சுமார் 13 ஆயிரம் வாகனங்களே நேற்று அம்பாந்தோட்டையை வந்தடைந்தன. இவ்வாறு பெருமளவான வாகனங்கள் இலங்கை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.


வட்டுவாகலில் இறால் பிடிக்க படையினர் தடை! - பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலரிடம் முறைப்பாடு
[Saturday 2016-01-02 21:00]

முல்லைத்தீவு வட்டுவாகலில் இறால்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் தடை விதித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த பெரேராவிடம் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை!
[Saturday 2016-01-02 21:00]

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு வந்தன.


மன்னார் விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்!
[Saturday 2016-01-02 21:00]

உயிலங்குளம் - அடம்பன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பரப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஆர்.சுமனசேகர, தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் ஏற்பட்ட இவ் விபத்தில் பரப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப்பு சந்தியோகு (வயது 51) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாவும் அவர் கூறினார்.


அரசாங்கம் ஆண்டு விழா கொண்டாட்டம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் திண்டாட்டம்! - அனுரகுமார திசாநாயக்க
[Saturday 2016-01-02 08:00]

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஓராண்டு நிறைவை அரசாங்கம் கொண்டாடுகின்ற நிலையில், வடக்கு கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்!
[Saturday 2016-01-02 08:00]

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பாக இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபரும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான சிவா பசுபதி நியமிக்கப்படுவார் என்று நம்பகமாக அறியவருகிறது. தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இருவரை இக்கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார்கள்.


வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு! என்கிறார் அமைச்சர் ராஜித
[Saturday 2016-01-02 08:00]

இந்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆரம்பம் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஐந்து ஆண்டுகளில் நாட்டையும் மக்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்தி நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு சென்ற மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்தி ஜனநாயக, மக்கள் நலன் பேணும் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.


தனங்கிளப்பு விபத்தில் இளைஞர் பலி!
[Saturday 2016-01-02 08:00]

சாவகச்சேரி- தனங்கிளப்பு சந்தியில் மோட்டார் சைக்கிளும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் கந்தம்மான் வீதி தனங்கிளப்பை சேர்ந்த இராசதுரை குமார் (வயது 26) என்பவரே பலியானவராவார்.


சீனா செல்லும் மகிந்தவைக் கண்காணிக்கிறது அமெரிக்கா!
[Saturday 2016-01-02 08:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் குறித்து அமெரிக்கா கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிற்கு செல்லவுள்ளார். மஹிந்தவின் சீன விஜயம் குறித்து ஏற்கனவே அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் தகவல்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன.


வட,கிழக்கில் முகாம்களிலுள்ள மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 11 ஆயிரம் வீடுகள்! - சுவாமிநாதன் உறுதி
[Saturday 2016-01-02 08:00]

வடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். விரைவில் செய்து முடிக்க வேண்டிய பல கட மைகள் எமக்கு உள்ளன. அவற்றில் பிரதானமாக வடகிழக்கு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு சிறந்த வாழ்கை சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது.


வரும் 26ஆம் திகதி அரசியலமைப்பு பேரவையாக மாறுகிறது நாடாளுமன்றம்!
[Saturday 2016-01-02 08:00]

அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் எதிர்வரும் 26ம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கும் வகையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நிறுவப்படவுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வானது, ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றம் பெற்றதாக அமையும்.


ரணிலை நிர்வாணமாகத் துரத்தியடிப்போம்! - ஞானசார தேரர்
[Saturday 2016-01-02 08:00]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆடைகள் எதுவும் இன்றி துரத்தியடிப்போம் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து நாங்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.


மகிந்தவைப் புகழ்ந்த மைத்திரி, சந்திரிகாவை மறந்தார்!
[Saturday 2016-01-02 08:00]

கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த அனைத்து ஆட்சியாளர்களும் ஒவ்வொரு வகையில் நாட்டுக்கு நல்லதையே செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எல்லா ஜனாதிபதிகள் பற்றிக் குறிப்பிட்ட போதும் சந்திரிகா குறித்து எதுவும் கூறவில்லை. 2016ம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி பொதுமக்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது.


பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நகரவாசிகளுக்கும் இடையில் நள்ளிரவில் மோதல்! - ஒன்பது பேர் காயம்
[Saturday 2016-01-02 08:00]

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பேராதனை நகரவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு புது வருடம் பிறக்கும் போது பேராதனை வர்த்தக நிலையமொன்றில் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர்கள் சிலர் சிகரெட் வாங்க முற்பட்டுள்ளனர். இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்குக் காரணமாகும். கூடுதலான விலைக்கு சிகரட் விற்கப்பட்டதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பின்னர் மோதலாக மாறியிருக்கிறது.


பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முறையிடப் புதிய திட்டம்!
[Saturday 2016-01-02 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 9ம் திகதி நேரடியாக சந்தித்து தங்களது பிரச்சினைகளை கூறுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பொது விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு காணப்படும் பிரச்சினைகள், முறைப்பாடுகளை தனிப்பட்ட ரீதியில் நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவிக்க விசேட திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியுடன் பொதுமக்கள் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பலாலியில் சர்வதேச விமான நிலையம்!
[Friday 2016-01-01 20:00]

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதற்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-


வலி.வடக்கில் வதைமுகாம் தடயங்கள் சிக்கின! Top News
[Friday 2016-01-01 20:00]

அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட பளை வீமன்காமம் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமுக்குள் வதை முகாம்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படைமுகாம் அமைந்திருந்த பகுதியில் இருந்த பொது மக்களின் வீடுகளுக்குள்ளேயே மாற்றங்கள் செய்யப்பட்டு அவை வதை முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


சிங்களவரின் பிரித்தாளும் முயற்சிக்குக் கைகொடுக்காதீர்: - மறவன்புலவு க. சச்சிதானந்தன்
[Friday 2016-01-01 20:00]

2016க்குள் ஈழத் தமிழரின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய அரசியல் தீர்வு பெற்றுத் தருவோம் எனத் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியளித்துள்ளனர். தலைவர் இரா. சம்பந்தன் மீட்டும் மீட்டும் இந்த உறுதிமொழியைக் கூறிவருகிறார். தீர்வை நோக்கிய காய்களை நகர்த்துவதாகவும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசமுடிந்தால் தீர்வு எட்டமுடியாதென்பதையும் கூறி வருகிறார். அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வழமையே. உயிர் வாழ்வே தமிழருக்கு வினாக்குறியான இக்காலத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான, மனத் தடையற்ற ஆதரவைக் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். 2016 மார்கழி வரை காலக் கெடுவை நோக்கி, கட்டிறுக்கமான செயற் திட்டத்துடனும், சிங்கள அரசியல் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணியும், முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றும், மலையகத் தமிழர்களுடன் உறவை வளர்த்தும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நீதிக்கான அழுத்தப் பின்னணியில் தீர்வை நோக்கித் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் முன்னேறுகின்றனர்.

Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா