Untitled Document
November 21, 2024 [GMT]
 
தெற்காசிய நாடொன்றில் மகள்களை திருமணம் செய்யும் தந்தைகள்!
[Wednesday 2023-12-06 18:00]

மண்டி பழங்குடியினர் இனத்தில் மகளை திருமணம் செய்துகொள்ளும் விநோத பழக்கம் ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக திருமணம் என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டது. பெரும்பான்மை மக்களிடம் தந்தை, சகோதர, சகோதரிகளிடையே திருமணம் செய்யும் பழக்கம் இல்லை.


வெளிநாடொன்றில் நடக்கும் விநோத திருமணம்!
[Thursday 2023-11-30 18:00]

உலகளவில் விசித்திரமான திருமண மரபுகள் உள்ளன. அதில் பல திருமண மரபுகள் நமக்கு அச்சரியத்தையும், சுவராஸ்யத்தையும் தருகின்றன. அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்காவில் வொடாபே என்ற பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பழங்குடியினரில், மக்கள் மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வதுதான் அவர்களின் வழக்கம்.


மெஸ்ஸியின் “ஜேர்சிகள்” 10 மில்லியன் டொலருக்கு ஏலம்!
[Saturday 2023-11-25 18:00]

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கு ஏலம் விடப்படவுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது.


குழந்தை பெற்ற ஓரினத் தம்பதி!
[Tuesday 2023-11-21 18:00]

ஸ்பெயின் தேசத்தை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி ஒன்று, தங்களுக்கான வாரிசை, தங்கள் இருவர் உடலிலும் சுமந்து பெற்றுள்ள சம்பவம், தன் பாலீர்ப்பாளர்கள் மத்தியில் அறிவியல் சாதனையாக அறியப்படுகிறது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்ளவும், நவீன மருத்துவத்தின் உதவியோடு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் ஐரோப்பிய சட்டங்கள் அனுமதிக்கின்றன.


இரு கருப்பைகள் கொண்ட அதிசய பெண்!
[Saturday 2023-11-18 18:00]

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட அதிசய பெண்ணாக உள்ளார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு திருமணமாகி , 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.


டைனோசர் காலத்தைச் சேர்ந்த பாலூட்டி இனம் கண்டுப்பிடிப்பு!
[Tuesday 2023-11-14 18:00]

டைனோசர் காலத்தைச் சேர்ந்த முட்டையிடும் பாலூட்டி இனமான எகிட்னா என்ற விலங்கை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். பப்புவா நியூ கினியா நாட்டிலுள்ள சைக்கிளுப்ஸ் மலையில் கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட எச்சத்தை ஆய்வு செய்த போது அது எகிட்னா என்ற விலங்கின் எச்சம் என ஆய்வாளர்களினால் கண்டுப்பிடிக்கப்பட்டது.


காய்கறி உணவு மட்டுமே உண்ணும் விசித்திர முதலை!
[Monday 2023-11-13 18:00]

கேரளாவில் உள்ள கோவில் குளமொன்றில் வாழ்ந்து வந்த காய்கறி உணவு மட்டுமே உண்ணும் முதலை உயிரிழந்தபோது, அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று அதற்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தலைப்புச் செய்தியானது. கேரளாவில் உள்ள அனந்தபத்மநாபசுவாமி கோவில் குளத்தில் Babia என்று பெயரிடப்பட்ட முதலை ஒன்று வாழ்ந்துவந்தது. அந்த முதலை, கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை மட்டுமே, அதாவது, காய்கறி உணவை மட்டுமே உண்டு வாழ்ந்ததால், மக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுவந்தார்கள்.


7 தலைமுறையாக தீபாவளி கொண்டாடமல் இருக்கும் விசித்திர கிராமம்!
[Saturday 2023-11-11 18:00]

கடந்த 7 தலைமுறைகளாக தீபாவளி பண்டிகையை கொண்டாடமல் இருக்கும் கிராமம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ரனஸ்தலம் அருகே புன்னானா பாலம் என்ற கிராமத்திலேயே இந்த சம்பவம் 7 தலைமுறைகளாக நடந்துக்கொண்டு இருக்கிறது.


மூழ்கிய கப்பலில் புதையல்: உரிமை கொண்டாடும் மூன்று நாடுகள்!
[Thursday 2023-11-09 07:00]

கொலம்பியாவில் டன் கணக்கில் தங்கம், வெள்ளி, மரகதங்களுடன் கடலில் மூழ்கிய கப்பலை மீட்டெடுக்குமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். கொலம்பியாவில் 17ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய கப்பலின் எச்சங்கள் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான அந்த கப்பலில் கிட்டத்தட்ட ரூ. 6.5 லட்சம் கோடி மதிப்பிலான 200 டன் தங்கம், வெள்ளி மற்றும் மரகதங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், நீருக்கடியில் உள்ள அந்த பொக்கிஷங்களை மீட்கும் தேசிய பணியை கொலம்பியா அறிவித்துள்ளது.


முதியவர்களுக்கான வீடியோ கேமை அறிமுகப்படுத்திய 87 வயது ஜப்பான் மூதாட்டி!
[Tuesday 2023-11-07 19:00]

ஜப்பானை சேர்ந்த 87 வயது மூதாட்டி ஒருவர், வீடியோ கேமை அறிமுகப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக சாதனை படைப்பதற்கும், எந்தவொரு விடயங்களை புதிதாக கற்றுக் கொள்ளவும் வயது ஒரு தடையில்லை என்றே சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் ஜப்பானில் நடந்துள்ளது.


அமெரிக்க பெண்மணிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவந்த கனவு!
[Wednesday 2023-11-01 18:00]

லொட்டரியில் பரிசு விழுந்ததாக கனவு கண்ட ஒரு பெண், தூக்கத்திலிருந்து கண் விழித்தபோது, தங்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்திருப்பதாக அவரது கணவர் கூற, வியப்பில் ஆழ்ந்துள்ளார். சார்லஸ் ((Charles Wolthuis, 78) ஜீன் (Jean) தம்பதியர் அமெரிக்காவின் மிச்சிகனில் வாழ்ந்துவருகிறார்கள். சார்லஸ் லொட்டரிச்சீட்டு வாங்கும் வழக்கம் உடையவர்.


ஹெலிகாப்டர் மூலம் பொழியப்பட்ட பண மழை: எங்கு தெரியுமா?
[Thursday 2023-10-26 18:00]

கமில் பார்ட்டோஷெக் என்பர் செக் குடியரசு நாட்டில் டெலிவிசன் ஷோ நடத்தி வருகின்றார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்குத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின் "Onemanshow: The Movie" படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.


கடற்கரையோரம் கரையொதிங்கிய விசித்திர உயிரினம்!
[Saturday 2023-10-21 16:00]

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby). அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.


பெண்களை பார்த்தாலே அஞ்சும் விசித்திர மனிதர்!
[Friday 2023-10-20 18:00]

ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். நம்மில் சிலருக்கு வித்தியாசமான விஷயங்களை கண்டு காரணம் இல்லாமல் மனதில் பயம் எழுவது உண்டு, அந்த வகையில் சிலருக்கு குறிப்பிட்ட விலங்குகளை கண்டால் பய உணர்வு ஏற்படும், சிலருக்கு இரத்தத்தை கண்டால் மனதில் பய உணர்வு ஏற்படும்.


உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்!
[Thursday 2023-10-12 19:00]

அமெரிக்காவின் - கலிபோர்னியா மாநிலத்தில் விவசாயிகளுக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கிடையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இது 50ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


128 ஆண்டுகளுக்கு பிறகு கைதியின் உடல் அடக்கம்: நடந்தது என்ன?
[Tuesday 2023-10-10 18:00]

அமெரிக்காவின் பென்சில் வெனியா மாகாணத்தில் உள்ள சிறைக்கைதியின் உடலானது 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1895 -ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான ஒருவர் சிறையில் உயிரிழந்தார். இவர், சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை வெளியில் சொல்லாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார்.


பூமியைவிட்டு விலகிச் செல்லும் நிலா!
[Tuesday 2023-10-03 18:00]

நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதாகா தெரிவிக்கபட்டுள்ளது. இந்த உண்மை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் தகல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் சென்று தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் பதித்தார்கள்.


கூகுள் மேப்பில் கூட இல்லாத பல ரகசிய இடங்கள்!
[Saturday 2023-09-30 16:00]

தற்போதைய காலத்தில் உலகில் எந்த மூலைக்கு செல்ல திட்டமிட்டாலும் எவர் துணையும் இன்றி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடங்களுக்கு துல்லியமாக செல்ல முடியும். ஆனால் கூகுள் மேப்பில் இல்லாத பல ரகசிய இடங்கள் இன்னும் உலகில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய வெள்ளரிகளை விளைவித்து பிரித்தானியர் சாதனை!
[Sunday 2023-09-24 08:00]

பிரித்தானிய தோட்டக்காரர் ஒருவர் 30 பவுண்டுகள் எடை கொண்ட மிகப்பெரிய வெள்ளரிக்காயை விளைவித்துள்ளார். Worcestershireயின் மால்வேர்ன் நகரில் நடந்த பிரித்தானிய தேசிய இராட்சத காய்கறிகள் சாம்பியன்ஷிப்பில் வின்ஸ் சோடின் (50) என்பவர் பங்குபெற்றார்.


உலக சாதனை படைத்த வெங்காயம்!
[Wednesday 2023-09-20 18:00]

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார்.


பிரான்சில் ஏலத்திற்கு வரும் டைனோசர் எலும்புக்கூடு!
[Tuesday 2023-09-19 06:00]

15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது. அமெரிக்காவின் வையோமிங் மாகாணத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் டைனோசர் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


தலை இல்லாமல் காவலுக்கு இருந்த காவலாளி: அதிர்ந்துபோன இணையதளம்!
[Tuesday 2023-09-12 19:00]

கடை ஒன்றில் காவலாளியாக இருந்த மனிதர் தலையில்லாமல் காணப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தியுள்ளது. இன்று இணையத்தில பல நம்பமுடியாத சம்பவங்களை அவதானித்து வருகின்றோம். வினோதங்கள் அடங்கிய இந்த இணையத்தில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


பேய்கள் அதிகம் உலாவும் பிரித்தானிய நகரம்!
[Wednesday 2023-09-06 18:00]

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிக்கும் 31 சதவீதத்தினர் பேயை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அமானுஷ்ய கதைகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதிலும் முக்கியமாக பேய்கள் குறித்த கதைகள் தான் எங்கும் ஆக்கிரமித்திருக்கும்.


மரத்தின் சாபத்தால் கண் பார்வை இழந்து வாழும் விசித்திர குருட்டு கிராமம்!
[Saturday 2023-09-02 08:00]

இது ஒரு பசுமையான மலைகளால் சூழப்பட்ட மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு அழகான கிராமம். ஆனால் அந்த அழகை கண்களால் ரசிக்க முடியாத துரதிஷ்டசாலிகள் அந்த கிராம மக்கள். ஏனென்றால் அந்த கிராமத்தில் யாரும் கண்ணால் பார்க்க முடியாது. அவர்கள் பிறக்கும் போது நன்றாக இருக்கிறார்கள். குழந்தை பருவத்திலும் கண்பார்வை நன்றாக இருக்கும். ஆனால் வயதாக ஆக அவர்கள் கண்பார்வை இழக்கிறார்கள். அவர்கள் குருடர்களாக மாறுகிறார்கள்.


ஜேர்மனியில் பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன்!
[Friday 2023-08-25 19:00]

ஜேர்மனியின் ஹார்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன் ஒருவரை நேரில் பார்த்துள்ளதாக சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜேர்மன் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபர் குடியிருந்து வருவதாக நம்பப்படுகிறது. அந்த மர்ம மனிதரின் புகைப்படத்தை இரு மலையேறும் பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.


கண்களுக்கு தண்ணீர் தெரியாத விசித்திர நதி!
[Sunday 2023-08-20 07:00]

நதி என்றால் நிறைய தண்ணீர் ஓடும். நடுவில் அழகான மணல் திட்டுகள் இருக்கும். ஆனால், ரஷ்யாவில் உள்ள ஒரு நதியில் அப்படி எதுவும் இல்லை. தண்ணீரின் தடயமே தெரியவில்லை. அப்படியென்றால் அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை என்றுதானே அர்த்தம்.. மழைக்காலங்களில் மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறீர்களா..? ஆனால் அப்படி இல்லை. இந்த ஆற்றில் பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. குறைந்த பட்சம் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கற்கள் பெரிய பாறைகள். அதனால்தான் இது 'ஸ்டோன் ரிவர்' அல்லது ஸ்டோன் ரன் என்று அழைக்கப்படுகிறது.


16 வயது சிறுவனை காதலித்து கரம்பிடித்த 41 வயது பெண்!
[Monday 2023-08-14 06:00]

இந்தோனேசியாவில் தோழியின் 16 வயது மகனை 41 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனைச் சேர்ந்த 41 வயதான மரியானா என்ற பெண், 16 வயதுடைய கெவின் என்ற சிறுவனுடன் சிறு வயது முதலே பழகி வந்துள்ளார்.


நண்பனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி!
[Wednesday 2023-08-09 06:00]

அமெரிக்காவில் புற்று நோயால் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுமி தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் எம்மா எட்வர்ட் என்ற 10 வயது சிறுமி லுகேமியாவால் இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு டேனியல் மார்ஷல் கிறிஸ்டோபர் “டிஜே” என்ற தன்னுடைய அன்பான நண்பனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்!
[Sunday 2023-08-06 08:00]

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து அசத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் கடந்த மாதம் ஜூலை 31ம் திகதி 10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத மர்ம பொருள்!
[Monday 2023-07-31 18:00]

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலுள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில வாரங்களுக்கு முன்பு ராட்சத உலோகப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள் ஆகும்.

Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா