Untitled Document
April 2, 2025 [GMT]
 
113 வது வயதில் பாட்டி மரணம் - இறுதி சடங்கில் 100 பேரப்பிள்ளைகள் !
[Tuesday 2016-01-12 14:00]

தமிழ்நாடு - தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த 113 வயது பாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகளில் அவரது 100 பேரப்பிள்ளைகள் கலந்து கொண்டனர். இது குறித்து பாட்டியின் 65 வயது பேரன் வெங்கடாசலம் (வயது 65) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூறியதாவது - 113 வயது பாட்டியின் பெயர் கிருஷ்ணாம்மாள் சேலம் மாவட்டம் சவூரியூரில் மே 26, 1902, ஆண்டு பிறந்தவர் பின்னர் சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த தாத்தா முனுசாமியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் மகள் தான் சரஸ்வதி இவரில் இருந்து தான் எங்கள் தலைமுறை தொடங்குகிறது. கிருஷ்ணம்மாள் பாட்டி வாழும் காலம் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.அதற்கு காரணம் அவரது உணவு மற்று வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்தான்.அவ்ர்ஒரு காய்ச்சல் தலைவலி என எந்த நோயினாலும் பாதிக்கபட்டது கிடையாது. என கூறினார்.


இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
[Monday 2016-01-11 17:00]

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே, ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும். சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.


உடற்பயிற்சி செய்வதையே ஒரு நிமிட சாதனையாக்கியுள்ளார் இவர்! Top News
[Monday 2016-01-11 14:00]

சாதரணமாக தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது உடலுக்கும், மனதிற்கும் நன்மை பயக்க கூடிய ஒன்று. ஆனால் இங்கு ஒருவர் உடற்பயிற்சி செய்வதையே சாதனையாக்கியுள்ளார் அந்த உடற்பயிர்ச்சியிலேயே அசாதாரணமான திறமையை வெளிபடுத்தியிருக்கிறார் 40 பவுண்டு எடையுள்ள பேக்கை முதுகில் சுமந்து கைகளை மடக்கி இவர் செய்திருக்கும் பயிற்ச்சி பாராட்டுக்குரியது. இந்த சாதனையை ஒரு நிமிடம் விடாமல் செய்து கின்னசில் இடம் பிடித்துவிட்டார் ! இதுவரை செய்து இருந்த சாதனையை முறியடித்து வெற்றி பெற்றிருக்கிறார். இவர் செய்த உடற்பயிற்சியை நீங்களும் பாருங்கள்.


அதிகமாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில்..? - எதிலுமே முதலிடம்தான்!
[Monday 2016-01-11 11:00]

எந்நாட்டு மக்கள் அதிகளவில் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் போன்றவை குறித்த ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது. போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.


தோஷம் இருப்பதாக கூறி ஏமாற்றி 40க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
[Monday 2016-01-11 10:00]

தமிழ்நாடு - கோவையைச் சேர்ந்த வாலிபர் தோஷம் இருப்பதாகவும் இதைக் கழிக்கவேண்டும் என்றும் கூறி ஏமாற்றி 40க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற ஒரு வாலிபர் மாணவியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அழைத்துச் சென்றார். பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து விசாரித்த போது மாணவியை கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.


நேபாலில் நாளொன்றிற்கு டொலர் ஒன்றுடன் வாழும் தம்பதியர்!
[Monday 2016-01-11 07:00]

பெரும்பாலான பிரிட்டிஷ் கொலம்பிய இளம் சமுதாயத்தினர் கட்டணங்களை செலுத்த திண்டாடும் வேளையில் தம்பதியர் இருவர் ஒரு வருடத்திற்கும் மேலாக நாளொன்றிற்கு ஒரு டொலர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியா, ஓக்கநாகன் என்ற இடத்தை சேர்ந்த டானிக்கா மற்றும் நேதன் றெயிட் இருவரும் திருமணம் செய்து நான்கு வருடங்களின் பின்னர் 2014ல் நேபால் சென்றனர். எளிமையான சாகசம்மிக்க வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையில் சென்றனர். நேபால் மக்களிடமிருந்து தாங்கள் ஏராளமான விடயங்களை கற்று கொண்டதாக தெரிவித்துள்ளனர். அனைவரும் ஒன்றாக சமைக்கின்றனர், ஒன்றாக ஆடைகளை கழுவுகின்றனர் சேர்ந்த ஆடிப்பாடுகின்றனர். இவை அனைத்தும் குடும்பம் ஒன்றாக இணைந்து ஐக்கியமாக இருக்க வழி வகுக்கும் என நேபால் மக்கள் கருதுகின்றனர் என ஸ்கைப் மூலம் CTVசெய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.


ஒரே ஒரு மாணவிக்காக ஜப்பான் நாட்டில் செயல்படும் ரயில் நிலையம்!
[Saturday 2016-01-09 08:00]

ஜப்பான் நாட்டில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக அங்குள்ள ஒரு ரயில் நிலையம் செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அந்நாட்டு ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் நாட்டிற்கு மேற்கு திசையில் Hokkaido என்ற தீவுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு Kami-Shirataki என்ற ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் நகரை விட்டு தொலைவில் அமைந்துள்ளதால் அதனை நிரந்தரமாக மூடிவிட 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர்,ரயிலில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டு இதே ரயிலில் வீடு திரும்புவது ரயில் நிலையத்திற்கு தெரியவர அதனை மூடிவிடும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.


பிரேசில் சிறையில் கழிவறை வழியாக தப்ப நினைத்து மலத்தில் மாட்டிக் கொண்ட கைதி!Top News
[Friday 2016-01-08 19:00]

பிரேசில் நாட்டின் சிறையில், கழிவறை வழியாக தப்ப முயற்சி செய்த ஒரு கைதி மலத்தில் மாட்டிக் கொண்ட கொடுமை நடந்துள்ளது. சிறையிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு கைதி, இதுவரை யாரும் யோசிக்காத ஒரு வழியை கண்டுபிடிக்க நினைத்து, கடைசியில் அவர் தேர்ந்தெடுத்தது கழிப்பறை. ஆம் கழிப்பறை வழியாக தப்ப நினைத்த அவர், அதில் இறங்கி விட்டார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. அதன்பின் ஒரு வழியாக மற்ற கைதிகள் அவரை, மேலே பிடித்து இழுத்துவிட்டனர். உடலெங்கும் மனித கழிவுகளை அப்பிக்கொண்டு


செயற்கை ஆணுறுப்பு மூலம் கன்னித்தன்மையை இழந்து சாதனை படைத்த முகமது அப்பாட்!
[Friday 2016-01-08 07:00]

சிறுவயதில் விபத்தின் மூலம் தனது மர்ம உறுப்பை இழந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த முகமது அப்பாட் தனது 43 வயதில் செயற்கை ஆணுறுப்பு மூலம் தனது கன்னித்தன்மையை நடிகை சார்லோட் ரோஸிடம் இழந்து சாதனை படைத்துள்ளார். 6 வயதில் தனது மர்ம உறுப்பை விபத்தின் மூலம் இழந்த முகமது அப்பாட்டுக்கு மருத்துவர்கள் பயோனிக் என்ற 8 இன்ச் நீளமுடைய உறுப்பை பொருத்தி சாதனை படைத்து முகம்மதின் வாழ்க்கையில் ஒளியேற்றினர். நடிகையும் பாலியல் சுதந்திர பிரச்சாரகருமான சார்லட் ரோஸ் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது முகமதுவின் பேட்டியை பார்த்து அவருடன் டேட்டிங் செல்ல சம்மதித்துள்ளார்.


கர்நாடகாவில் இரண்டு தலை பாம்பை விற்க முயன்ற 3 பேர் கைது!
[Friday 2016-01-08 07:00]

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள பனம்பூர் காவல் துறையினர் கலங்கரை விளக்கம் அருகே இரண்டு தலை பாம்பை விற்க முயன்ற மூன்று பேரை கைது செய்தனர். நேற்று ஊடகங்களிடம் இது குறித்து பேசிய நகர காவல்துறை ஆணையர் சந்திர சேகர் குற்றவாளிகள் அன்வர்(30) புட்டுர் தாலுகா நெல்யாடிவை சேர்ந்தவர், வெங்கடேஷ்(27) பெங்களூருவில் உள்ள கனகபுராவை சேர்ந்தவர் மற்றும் கஜேந்திரன்(64) கேரளாவில் திருவணந்தபுரத்தை சார்ந்தவர் என கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை அறிவித்தார். குறிப்பிட்ட நபருக்கு இரண்டு தலை பாம்பை விற்க இன்னோவா காரில் காத்திருந்த போது காவல் துறையினர் இந்த மூவரையும் கைது செய்தனர்.


தாயார் விருந்துக்கு சென்றாராம் - 4 மாத குழந்தையின் முகம்-கால் சதைகளை சாப்பிட்டது எலிக்கூட்டம்:
[Thursday 2016-01-07 18:00]

மெக்சிகோ நகரை சேர்ந்தவர் லிஸ்பெத் ஜெரோனிமா புயுண்டெஸ் முன்குயா (வயது 18 ) இவர் அகோல்மேன் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் தனது 4 மாத பெண் குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு பூட்டி விட்டு ஒடுமா நகராட்சியில் நடைபெற்ற ஒரு டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இது குறித்து பக்கத்து வீட்டு பெண்மணி லிஸ்பெத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். லிஸ்பெத் வேகமாக ஓடி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார் தனது குழந்தையை சுற்றி எலிகள் மொய்த்து கொண்டு இருந்தது. உடனடியாக குழந்தையை தூக்கினார். குழந்தையின் முகம்,கால் விரல்கள் முழுவதும் ரத்தமாக இருந்தது. எலிகள் குழந்தையின் சதைகளை சாப்பிட்டு உள்ளன.


லண்டன் வாழ் ஈழத்தமிழ் மாணவி விண்வெளிக்கு பறக்கிறார் ! Top News
[Thursday 2016-01-07 13:00]

முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது.


சாரதிகளுக்கு இன்ப அதிர்ச்சியளித்த அமெரிக்க போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
[Wednesday 2016-01-06 22:00]

போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை நிறுத்தினால் பொதுவாக சாரதிகளுக்கு கலக்கம் ஏற்படும். அப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டுப் பத்திரம் எதையும் வழங்குவதற்கு பதிலாக சாரதிகளுக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினால் எப்படியிருக்கும்? இவ்வாறானதொரு இன்ப அதிர்ச்சி, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள வீதியொன்றில் அண்மையில் பயணம் செய்த சாரதிகளுக்கு கிடைத்தது. அதுவும் 100 அமெரிக்க டொலர்கள் (சுமார் 14,000 ரூபா) பெறுமதியான நாணயத்தாள்களை சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் வழங்கினர். ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகர் அட்லாண்டாவுக்கு 96 கிலோமீற்றர் தூரத்திலுள்ள நகரமொன்றில் சிறு போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்த சாரதிகளை நிறுத்திய பொலிஸார், அவர்களுக்கு 100 டொலர் நாணயத்தாள்களை வழங்கினர்.


ஒரு கால் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்: - பலரால் உற்றுநோக்கப்படுகிறார்! Top News
[Wednesday 2016-01-06 19:00]

செல்லிடத் தொலைபேசி பழுதுபார்க்கும் தொழிலை ஆரம்பித்த அவர், தொலைபேசிகளை விற்கும் இரு நிறுவனங்களின் உரிமையாளராக விளங்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தொண்டர் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராக பணியாற்றுவதற்கு விண்ணப்பித்தார். எதிர்பார்த்ததைப் போலவே அவரை பொலிஸ் திணைக்களம் நிராகரித்தது. எனினும், மீண்டும் மீண்டும் விண்ணப்பங்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஸீ குய்மிங். தான் விபத்தினால் பாதிக்கப்பட்டு காலை இழந்ததால் தனது அனுபவமானது மற்றவர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவதற்கு உதவும் என அவர் தெரிவித்தார்.


ரொறொன்ரோவில் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அதி உயர் கட்டிடம் மேலும் உயரமாகின்றது!
[Wednesday 2016-01-06 19:00]

ரொறொன்ரோவில் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நாட்டின் அதிஉயர் கொண்டோ ரவரின் உயரம் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதென தெரியவந்துள்ளது. இக்கட்டிடம் ரொறொன்ரோவின் ஓய்வற்ற குறுக்கு சந்திப்பான புளோர் மற்றும் யங்கில் அமைய உள்ளது. ஆரம்பத்தில் 318 மீற்றர்கள் { 1,043} உயரமாக திட்டமிடப்பட்டிருந்த இக்கட்டிடம் தற்போது 340.6 மீற்றர்களாக{ 1,117} அடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கனடாவிலேயே மிக உயரமான கட்டிடமாக இது அமையவுள்ளது. 84மாடிகளை கொண்டதாக அமைகின்றது. கனடாவின் மிக உயரமான கட்டிடங்களான ரொறொன்ரோவின் ஸ்கோசியா வங்கி ரவர் அல்லது மொன்றியல் வங்கி ரவர் ஆகியனவற்றை விட உயரமான கட்டிடமாக அமைகின்றது. ஆனால் குடியிருப்பற்ற அதி உயர் ரவர்களான CN Tower மற்றும் சட்பெரியில் அமைந்துள்ள Inco Superstack ஆகியனவற்றை விட உயரமானதாக அமைய மாட்டாது.


ஒன்வொன்றாக வெளியாகும் கிறிஸ் கெய்லின் லீலைகள்:
[Wednesday 2016-01-06 07:00]

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் விவகாரம் பலர் அறிந்த விடயமாகிவிட்டது. பெண் ஊடகவியலாளரிடம் அவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது மேலும் சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆம் , ஆஸ்திரேலிய பெண்ணிடம் அவர் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்ட தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா-நியூசிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதன்போது, கெயில் உள்ளிட்ட மே.இ.தீவுகள் வீரர்களுக்கு உதவி செய்ய அவுஸ்திரேலிய பெண்மணி ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.


ஆபத்தை நோக்கி நகரும் இலங்கையா்கள்! - கடந்த வருடத்தில் H.I.V நோயாளர்கள் அதிகரிப்பு!
[Tuesday 2016-01-05 19:00]

கடந்த வருடத்தில் H.I.V நோயாளர்கள் 225 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். - 2014 ஆம் ஆண்டைவிட 2015 ஆம் ஆண்டு இந் நோயாளர்கள், அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் இயக்குனர், மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதில் 27 கர்ப்பினி பெண்கள் உள்ளடங்குகின்றனர். 15 வயது முதல் 23 வயதான இளைஞர்களிடம் எயிட்ஸ் நோய் பரவி வருது அபாயகரமானது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 27 இளைஞர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற உடல் உறவில் இருந்து விலகினால், இந்நோயை கட்டுப்படுத்த முடியும் என, சுகாதார அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.


கனடாவின் கடன்தொகை 2016 ஆம் ஆண்டில் 1.3 ட்ரில்லியன் டொலர்களாக அதிகரிக்குமாம்!
[Tuesday 2016-01-05 09:00]

இந்த கடன்தொகைக்காக செலுத்தப்படும் அதிக வட்டி குறுகிய கால பாதிப்பாக அமையவுள்ளது. இந்த கடனுக்கான வட்டியாக வருடாந்தம் 60 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் நிலையில், இந்த நிதியானது வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்தின் இந்த கடன்தொகை காரணமாக எதிர்காலத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் அச்சசம் தெரிவிக்கின்றனர். கனடாவின் கடன்தொகை 2016 ஆம் ஆண்டில் 1.3 ட்ரில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என இன்று வெளியாகியுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.கனேடிய அரசாங்கத்தின் இந்த கடனின் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பாதிப்புக்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கனடாவில் அகதிகளாக தஞ்சம் புகும் மக்களை குறிவைத்து மோசடி!
[Monday 2016-01-04 23:00]

கனடாவில் அகதிகளாக தஞ்சம் புகும் மக்களை குறிவைத்து மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவிற்கு வருகை தரும் அகதிகளுக்கு அண்மைக்காலமாக பொய்யான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கின்றன.கனேடிய குடிவரவுத் துறையில் இருந்து அழைப்பினை ஏற்படுத்துவதாக குறிப்பிடும் நபர்கள் அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரிக்கின்றனர்.


கனடாவின் அல்பேர்ட்டா நகரில் நத்தார் தாத்தா வேடத்தில் சென்று நகைக்கடையில் கொள்ளைய!
[Monday 2016-01-04 19:00]

நத்தார் தாத்தா போன்று வேடமணிந்த நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் நகைக்கடையொன்றில் கொள்ளையடித்த சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த நத்தார் தினத்துக்கு முதல்நாள் கனடாவின் அல்பேர்ட்டா நகரிலுள்ள நகைக்கடையொன்றுக்கு முழுமையான நத்தார் தாத்தா வேடமணிந்த நிலையில் நபர் ஒருவர் வந்தார். ஆனால், அவர் பரிசுப் பொருட்கள் எதையும் கொடுக்கவில்லை. மாறாக, துப்பாக்கியொன்றைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்திய அவர், அங்கிருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் ஹம்மர் ரக வாகனமொன்றின் மூலம் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


பாம்பு விஷத்தை முறிக்கும் அதிசய புற்றுமண்! - ஐய்யன் கோயிலில் கிடைக்கிறது!
[Monday 2016-01-04 07:00]

நம் முன்னோர்கள் கோயில்களை வெறும் வழிபாட்டு தலமாக மட்டும் அமைக்காமல் நம்முடைய வாழ்கையின் பல நிலைகளிலும் உதவக்கூடிய ஒரு முழுமையான அமைப்பாக இயங்கும்படி நிறுவியிருக்கின்றனர். பஞ்ச காலத்தில் காத்துக்கொள்ள கோபுர கலசங்களில் நவதானிய விதைகளை வைத்தனர், பெருவெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தடிமனான கற்களால் ஆன மிகப்பெரிய மதில்களை அமைத்தனர், ஆன்றோர்கள் வாழ்ந்து கல்வி போதிக்கும் இடமாகவும், தீராத நோய்களையும் குணமாக்கும் மருத்துவ கூடமாகவும் கூட கோயில்கள் இருந்திருக்கின்றன.


அமெரிக்காவில் அபூர்வம்! இரு வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்!
[Monday 2016-01-04 07:00]

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் புத்தாண்டிற்கு ஒரு நிமிடம் முன்னர் ஒரு குழந்தையும், புத்தாண்டின் ஒரு நிமிடம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்த அபூர்வம் நிகழ்ந்துள்ளது. நம்ம ஊர்ல புது டிரஸ் போட்டுட்டு,


பிரித்தானியாவில் 35 மில்லியன் பவுண்ட் ஜாக்பாட் பரிசை இழந்த தம்பதியர்:
[Saturday 2016-01-02 08:00]

பிரித்தானியாவின் லீசெஸ்டர் பகுதியில் லட்சாதிபதியாகும் அரிய வாய்ப்பை தங்களது கவனக்குறைவால் தம்பதியர் ஒருவர் தவறவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லீசெஸ்டர் பகுதியில் வசித்து வரும் டேவிட் மற்றும் எட்வினா நைலான் தம்பதியர் லொட்டோ எனப்படும் எண்கள் தெரிவு செய்யும் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்தும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 பவுண்டுக்கான லொட்டோ டிக்கெட் ஒன்றை வாங்க முயன்றுள்ளார். அப்போது தமது கணக்கில் போதிய பணம் இல்லை என அந்த கைப்பேசி லொட்டோ செயலி தெரிவிக்கவும், அதை நிவர்த்தி செய்த பின்னர் டிக்கெட்டை வாங்கி 6 அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்து சமர்ப்பித்துள்ளார்.


புற்றுநோய் ஏற்பட்டதாக பொய் கூறி நிதி சேகரித்த அமெரிக்க அழகுராணி: - அமெரிக்காவில் கைது
[Thursday 2015-12-31 19:00]

தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பொய் கூறி, நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க அழகுராணி ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பிராண்டி லீ வீவர் கேட்ஸ் எனும் யுவதி இவ்வருடம் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக முடிசூட்டப்பட்டிருந்தார். தற்போது 23 வயதான வீவர் கேட்ஸ் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி தனது சிகிச்சைகளுக்காக நிதி சேகரிக்க ஆரம்பித்தார். கடந்த இரு வருடகாலமாக இவர் தொடர்ச்சியாக நிதி திரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்து, பென்சில்வேனியா மாநில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன்பின் கடந்த ஓகஸ்ட் மாதம் வீரர் கேட்ஸ் கைது செய்யப்பட்டார்.


விவா
[Thursday 2015-12-31 08:00]

நெதர்


தெலுங்
[Wednesday 2015-12-30 15:00]

தெலுங்


காந்தம் மூலம் இயங்கும் பைக் ! மாணவன் கண்டுபிடிப்பு: இந்த இளம் விஞ்ஞானியை வாழ்த்துவோம்!
[Wednesday 2015-12-30 14:00]

பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு - பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ். ''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும் இந்த இன்ஜின். இது அதிக வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த எடையுடையது, அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது. மின்வெட்டுக்கும தீர்வாகிறது. இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம். இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின் அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும் தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் மேலும் 'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி


சிகிரிய சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுப்பதற்க்கு இன்று முதல் தடை !
[Wednesday 2015-12-30 08:00]

சிகிரிய சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் குறித்த குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்திற்கு வந்ததாக மத்திய கலாசார நிதியத்தின் சிரேஷ்ட அத்தியட்சகர் பிரஷாந்த குணவர்தன தெரிவித்தார். புராதான சுவர் பகுதி ஒன்று உடைந்ததன் காரணமாக, அதனை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இந்தியாவில் ரயிலில் வைத்து 14 வயது சிறுமி இராணுவ வீரர்களால் கூட்டு பாலியல் வல்லுறவு!
[Tuesday 2015-12-29 18:00]

இந்தியாவில் ரயிலில் வைத்து 14 வயது சிறுமி இராணுவ வீரர்களால் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டகொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹவுரா-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனக்கு மதுபானம் கொடுத்து, இரண்டு இராணுவ வீரர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரயில்வே பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ரயில் முழுவதும் செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


எட்டாயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது!
[Monday 2015-12-28 21:00]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்ததற்காக அந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது பெற்றுள்ளது. ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது.

Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா