Untitled Document
September 19, 2024 [GMT]
 
மீண்டும் ஜீவாவுடன் இணையும் ஆர்யா!
[Monday 2016-01-18 08:00]

ஜீவா நடித்த

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?
[Thursday 2024-09-19 18:00]

நடிகர் சிம்பு கொரோனா காலத்தில் தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவர் நடித்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க கடந்த 2012ம் ஆண்டு இப்படம் வெளியானது. சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.


பிக் பாஸ் 8ல் நுழையும் செந்தில்?
[Thursday 2024-09-19 18:00]

பிக் பாஸ் ஷோவின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் குழிவினார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சின்னத்திரை நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறை விஜய் சேதுபதி தொகுப்பாளராக இணைந்து இருப்பதால் ஷோ எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.


பிரிகிடா தன் உண்மையான வயது பற்றி கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-09-19 18:00]

நடிகை பிரிகிடா பவி டீச்சர் ஆக நடித்து இணையத்தில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு அவர் சினிமாவில் அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் உடன் மாஸ்டர், பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார்.


கோட் படத்தின் 13 நாள் வசூல்: தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
[Thursday 2024-09-19 06:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அதனால் படத்திற்கு நல்ல வசூல் இரண்டாவது வாரத்திலும் வந்து கொண்டிருக்கிறது.


உச்சகட்ட கவர்ச்சியில் துஷாரா விஜயன்! Top News
[Thursday 2024-09-19 06:00]

சார்பட்டா பரம்பரை, ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். அவர் படுகவர்ச்சி ஆக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ.


அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்: ரகசியத்தை உடைத்த இசையமைப்பாளர்!
[Wednesday 2024-09-18 17:00]

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தனது நடிப்பு மூலம் பல கோடி ரசிகர்களை சம்பாதித்தவர். அஜித்குமார் படப்பிடிப்புகளில் நடிக்கும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், விமான நிலையத்திற்கு வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும் காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது.


வேட்டையன் படம் வெளிவந்தபின் இது நடக்கும்: அனிருத் சொன்ன விஷயம்!
[Wednesday 2024-09-18 17:00]

இன்றைய தேதியில் இவருடைய இசை இல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதே இல்லை. ரஜினி, விஜய், அஜித் என பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அப்படி அனிருத்தின் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். பேட்ட, ஜெயிலர் படங்களை தொடர்ந்து அனிருத் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் வேட்டையன் படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கி வருகிறார்.


குக் வித் கோமாளி மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரபலங்கள்!
[Wednesday 2024-09-18 17:00]

மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்து 5 சீசன்கள் வரை வந்துவிட்டது. இந்த 5வது சீசனில் அனைத்தும் புதியது, இதனால் மக்களின் ஆதரவு கொஞ்சம் லேட்டாக தான் கிடைத்தது என்றே கூறலாம்.


பிரியங்காவுக்கு நோஸ்கட் கொடுத்த பிரபல நடிகை!
[Wednesday 2024-09-18 07:00]

விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோர் இடையே நடந்த சண்டை பற்றி தான் இணையத்தில் நெட்டிசன்கள் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். யார் மீது தவறு என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சர்ச்சை பெரிய அளவில் வெடித்து தன்னை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் பிரியங்கா இதுவரை தனது தரப்பு விளக்கத்தை இதுவரை வெளியிடாமல் இருக்கிறார்.


விஜய் தவறான வழியில் செல்கிறார்: பிரபல இயக்குனர் தாக்கு!
[Wednesday 2024-09-18 07:00]

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப்போகும் அவரது 69வது படம் தான் கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல்வாதிகள் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.


மணிமேகலை-ப்ரியங்கா பிரச்சனை குறித்து பிக்பாஸ் புகழ் அர்ச்சனா!
[Tuesday 2024-09-17 18:00]

சினிமாவோ, சின்னத்திரையோ அதில் இருக்கும் பிரபலங்கள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே வெளியே சொல்ல மாட்டார்கள். அப்படி சொல்கிறார்கள் என்றால் அது அப்படியே பூகம்பமாக வெடித்துவிடும். அப்படி தான் இப்போது எல்லோராலும் சிரித்து சிரித்து ரசிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.


வாழை படத்தின் அடுத்த பாகம் வருமா?
[Tuesday 2024-09-17 18:00]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான திரைப்படம் வாழை. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக படம் அமைந்துள்ளது. இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படப்பிடிப்பே முடியவில்லை: அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்!
[Tuesday 2024-09-17 18:00]

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து இப்படத்தை ஆதிக் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரபல நடன இயக்குனர் ஜானி மீது பாலியல் புகார்!
[Tuesday 2024-09-17 06:00]

மலையாள சினிமா ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்ந்து, பல நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது பெண்கள் அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி புகார் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். அதில், 2019-ல் ஜானியுடன் பணிபுரிந்த போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.


"இதுபோன்ற ஒரு செயல் தமிழ் சினிமாவில் நடக்கவில்லை" - ஐஸ்வர்யா ராஜேஷ்!
[Tuesday 2024-09-17 06:00]

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் குறித்து ஹேமா கமிட்டி மூலம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று பல முன்னணி நடிகைகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.


ரூ.100 கோடி மதிப்பிலேயே கார்கள் வைத்திருக்கும் பிரபல நடிகர்!
[Monday 2024-09-16 18:00]

பிரபலங்கள் பலர் சினிமாவை தாண்டி கார், பைக்குகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எல்லோருமே கார்கள் வைத்திருந்தாலும் சிலர் யாரும் வைத்திருக்காத கார்களாக வைத்துள்ளனர். அப்படி ஏராளமான கார்களை கொண்ட நடிகரை பற்றிய விவரம் தான் வெளியாகியுள்ளது. அவர் வேறுயாரும் இல்லை மலையாள சினிமாவின் டான் நாயகன் மம்முட்டி தான்.


அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!
[Monday 2024-09-16 18:00]

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர். முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். மேலும் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள். மங்காத்தா படத்திற்கு பின் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது.


குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு: வெளியேறிய பிரபலம்!
[Monday 2024-09-16 18:00]

குக் வித் கோமாளி, சிரிக்கலாம் ஜாலியா பங்காளி என கலகலப்பாக சென்ற இந்த நிகழ்ச்சியில் இப்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த 5வது சீசனில் தொகுப்பாளராக இருந்து வந்தார், இப்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.


பாலிவுட் நடிகர்களின் செக்யூரிட்டி: கோடிக்கணக்கில் சம்பளம்!
[Monday 2024-09-16 06:00]

நடிகர்கள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்கள் உடன் செல்பி எடுக்க ஒரு பெரிய கூட்டமே குவிந்துவிடும். அப்படி அவர்களிடம் இருந்து காப்பாற்ற நடிகர்கள் சொந்தமாக பாதுகாவலர்கள் அல்லது பவுன்சர்களை வைத்திருப்பார்கள். ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் எல்லோரும் இப்படி சொந்தமாக பாதுகாவலர்கள் வைத்திருக்கின்றனர். அந்த வேலை செய்பவர்கள் கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்குகிறார்கள்.


அஜித்தை சந்தித்த இயக்குனர் நெல்சன் மற்றும் கவின்!
[Monday 2024-09-16 06:00]

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஒருபக்கம் நடக்க அஜித் சமீபத்தில் இரண்டு சொகுசு கார்களை பல கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார். அதன் போட்டோ மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.


மதத்தை குறிப்பிட்டு மணிமேகலையை வம்பிழுத்த நடிகை!
[Sunday 2024-09-15 18:00]

மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 ல் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். எனக்கு சுயமரியாதை தான் முக்கியம், என் வேலையில் போட்டியாளராக வந்த பெண் தொகுப்பாளரின் தலையிடு அதிகம் இருந்தது என கூறி VJ பிரியங்காவை மணிமேகலை குற்றம் சாட்டி இருந்தார்.


வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் இதுதான்!
[Sunday 2024-09-15 18:00]

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் சூப்பர்ஹிட்டாக அமைந்தது. இதை தொடர்ந்து முன்னணி நடிகர் அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார். அசுரன் படத்தை தொடர்ந்து துணிவும் வெற்றியை பெற்று தந்தது.


தோனி படத்தை தவறவிட்ட பிரபல தென்னிந்திய நடிகை!
[Sunday 2024-09-15 18:00]

பாலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்து படங்களில் ஒன்று எம்.எஸ். தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், கேப்டனுமான தோனியின் வாழ்க்கை வரலாறை மையாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர். இப்படத்தில் தோனியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். மேலும் கியாரா அத்வானி, திஷா பாட்னி உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.


பைக்கில் தனது மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய்: பலரும் பார்த்திராத புகைப்படம்! Top News
[Sunday 2024-09-15 07:00]

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தளபதி 69, அதாவது விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் தளபதி 69 படத்தின் அறிவிப்பும் இன்று மாலை 5 மணிக்கு வெளிவருகிறது. இப்படத்தை தயாரிக்க கே வி என் நிறுவனம் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.


வெங்கட் பிரபு படத்தில் நடிக்க மறுத்துள்ள பிரபல பாடகி!
[Sunday 2024-09-15 07:00]

தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் கூலான இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. எப்போதும் ஜாலியாக எந்த ஒரு நிகழ்ச்சி வந்தாலும் கலகலப்பாக நிறைய விஷயங்கள் பேசுவார். அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் கோட், The Greatest Of All Time. விஜய்யின் 68வது படமான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!
[Saturday 2024-09-14 18:00]

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தனது இரண்டாவது படத்தையும் பூஜை போட்டு துவங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருடன் படத்தின் மூலம் 2024ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இயக்குனர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்குகிறார்.


விஜய்யின் கடைசி படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?
[Saturday 2024-09-14 18:00]

தமிழ் சினிமாவை ஆண்ட ஒரு நடிகர், இவரது பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை. ஆனால் அவரோ இதைவிட பெரிய மேடையை பார்க்க தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார். அண்மையில் விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமாக கோட் படம் வெளியானது, முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் ரூ. 350 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் டீசர்!
[Saturday 2024-09-14 18:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் திரிஷா, அர்ஜுன் என மங்காத்தா கம்போ மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இவர்கள் மட்டுமின்றி ரெஜினா, ஆரவ் என இன்னும் பல நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.


புதிய காரை வாங்கியுள்ள நடிகர் அஜித்!
[Friday 2024-09-13 16:00]

கார் மீது ஆசைப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள், அப்படி தமிழ் சினிமாவில் முதலில் யோசித்தால் நமக்கு முதலில் நியாபகம் வருவது நடிகர் அஜித் தான். கார் ரேஸ், பைக் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் இப்போது வெளிநாடுகளில் அதிக வேகத்தில் கார் ஓட்டுவது, பைக் டூர் செல்வது என தனது ஆர்வத்தை காட்டிய வண்ணம் உள்ளார்.


வாடிவாசல் படம் எப்போது துவங்குகிறது தெரியுமா?
[Friday 2024-09-13 16:00]

முடிவு சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு துவங்கிய நிலையில், இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை. ஒரு சிறிய ப்ரோமோ ஷூட்டிங் மட்டும் நடைபெற்றது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். வெளிநாட்டில் இப்படத்திற்கான VFX வேலைகளும் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா